name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (08) வீரமாமுனிவரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

தமிழ் (08) வீரமாமுனிவரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் !

தமிழ்ப் பணியாற்றிய தகையாளர் !


[ ஆதாரம்: வித்துவான், .பண்டாரம் எழுதிய வீரமாமுனிவர் என்னும் நூல் ]


தமிழ் எழுத்துகள் அடைந்து வந்த மாற்றங்களை எல்லாம் விளக்கமாக ஆராய்வது அரிதாகும். ஆயினும், சில மாற்றங்களை இங்குக் காண்போம். இப்பொழுதுலைஎன்று எழுதப்படுவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட்டு எழுத்தாக எழுதப்பட்டு வந்தது. ஆனால் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில் கூட்டு எழுத்துகள் இல்லாமல் இப்போது உள்ளது போலவே லைஎன்று காணப்படுகிறது !


தொல்காப்பியர் காலத்தில்என்னும் எழுத்து பகரத்தின் உள்ளே ஒரு புள்ளி இட்டு [ ப் ] எழுதப்பட்டு வந்தது. இதைத் தொல்காப்பியர்உட்பெறு புள்ளி உருவாகும்மேஎன்று கூறியுள்ளமையால் உணரலாம். எனவே தொல்காப்பியர் காலத்தில்ப்என்பதே மகரமாய் [] வழங்கி வந்தது என்பது புலனாகிறது. இந்த மகர எழுத்தை எழுதும்போது ஏடு எழுதுவோர், புள்ளியைத் தெளிவாக இடாவிட்டால், அது பகரமாக [] தோன்றி மயங்கச் செய்யுமன்றோ ? எனவே பகரத்தில் உட்புள்ளி இட்டு [ப்] மகரத்தை [] எழுதி வந்த முறையை மாற்றிஎன்று உள்ளே சுழித்து எழுதலானார்கள் !


இந்த மாற்றம் நச்சினார்க்கினியர் காலத்திற்கு முன்பே  - அஃதாவது 12- ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது !


வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு [1680 -1747 ] ரகர உயிர்மெய்யெழுத்துஎனப் பாதம் வைத்து எழுதப்படவில்லை. எனவேபாவைஎன்று எழுதினால்இது பரவையா, பாவையாஎன்று ஐயுறும் நிலைமை இருந்து வந்தது. வீரமாமுனிவர் தான் ரகர  உயிர் மெய் எழுத்தினைஎனப் பாதம் வைத்து எழுதும் முறையை அறிமுகப்படுத்தினார் !


வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு வரைகரம், ”கரம் இரண்டும் நெடில் எழுத்தாகவும் கரம், “கரத்துக்கு மேல் ஒரு புள்ளி வைத்தால் அவை குறில் எழுத்தாகவும் கருதப்பட்டு வந்தன. . இந்த முறையை மாற்றி”, “இரண்டும் குறில் என்றும் ”, “இரண்டும் நெடில் என்றும் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் வீரமாமுனிவர் !


அதுபோல், ”கெ”, “கொஇரண்டும் நெடில் எழுத்துகளாகவும், அவற்றின் மேல் புள்ளி ஒன்று வைத்தால் அவை குறில் எழுத்தாகவும் வழக்கில் இருந்து வந்தன. இவற்றை மாற்றிகெ”, “கொஇரண்டும் குறில் எழுத்து என்றும், “கே” , “கோஇரண்டும் நெடில் எழுத்து என்று எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் வீரமாமுனிவர் !


மிழ்  எழுத்து வரி வடிவில் சீர்திருத்தம் என்பது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கிறது. வீரமாமுனிவர் காலத்திற்குப் பின்பு தந்தை பெரியார் காலத்தில் சில எழுத்துச் சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன.  இப்போது வழக்கில் உள்ள ணா”, “ணை, “ணொ”, “ணோ”, றா”, ”றொ, “றோ”, “னா”, “னை”, “னொ”, “னோ”, “லை”, “ளை  ஆகியவை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட்டெழுத்து வடிவில் இருந்து வந்தன !  


பெரியார் அறிமுகப்படுத்தியணா”, “ணை”, “ணொ”, “ணோ”,””றா”, “றொ”, “றோ”, ”னா”, “னை, “னொ”, “னோ”, “லை”, “ளை”, “அய்”, அவ்ஆகிய எழுத்துச் சீர்திருத்தங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு, அரசு அலுவல்களில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று  முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே  உத்தரவு இட்டிருக்கிறது. இவற்றுள்அய்”, “அவ்தவிர்த்த ஏனைய எழுத்துகளைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தியது என்பதற்காக, முன்பு போல் கூட்டெழுத்து வடிவில் நம்மால் இப்போது எழுதமுடியாது. தட்டச்சுப் பொறி, கணினி ஆகியவை கூட்டெழுத்துக்கு இப்போது இடம் தருவதில்லை !


ஐயர்என்பதைஅய்யர்என்றும்ஔவையார்என்பதைஅவ்வையார்என்றும் தந்தை பெரியார் எழுதினார். நாம்ஐயர்என்றும் எழுதலாம்; “அய்யர்என்றும் எழுதலாம். “ஔவையார்என்றும் எழுதலாம்; “அவ்வையார்என்றும் எழுதலாம். இதில் முரண்பாடு கொள்ளத் தேவையில்லை !


உரைநடையில் மாத்திரைக் கணக்கு எல்லாம் வராது. செய்யுள் என்று வரும் போது மாத்திரைக் கணக்கு அங்கு முதன்மை இடம் பெறும். “ஐயர்என்ற சொல்லை அலகிட்டு  அசை பிரிக்கையில்தேமாஎன்னும் ஈரசைச் சொல்லாக வரும்.அதையேஅய்யர்என்று எழுதினாலும்தேமாஎன்னும் ஈரசைச் சொல்லாகவே முடியும்.  ஆகையால், “ஐயர்என்றோஅய்யர்என்றோ எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். தவறில்லை !
-

-----------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.: 2050, சுறவம், 5.]
{19-01-2019}
----------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .