சந்திரவாணன் நாட்டில் தேன்மாரி பெய்கிறதாம் !
-------------------------------------------------------------------------------------------------------
பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர் என்பதால் “அந்தகக் கவி” என்னும் அடைமொழி பெற்றவர் வீரராகவ முதலியார். “அந்தகம்” என்னும் வடமொழிச் சொல்லுக்கு பார்வை யின்மை என்று பொருள். பார்வையை இழந்து விட்டாலும் படிப்புத் திறனை அவர் இழந்து விடவில்லை !
தமிழைத் துளக்கமறக் கற்று தமிழ்ப் புலமை அடைந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் !இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை. ஒருமுறை இவர் சந்திரவாணன் என்பவர் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார் !
-------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
மாலே நிகராகுஞ் சந்திர வாணன் வரையிடத்தே
பாலே ரிபாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண்
டாலே யெருவிட முப்பழச் சாற்றி னமுதவயன்
மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே !
-------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------------------------------------------------------------
மாலே நிகராகும் சந்திரவாணன்
வரை இடத்தே !
பால் ஏரி பாயச் செந்தேன்
மாரி பெய்ய நற்பாகு கற்கண்டாலே !
எருவிட முப்பழச் சாற்றின்
அமுத வயல் மேலே முளைத்த
கரும்போ இம் மங்கைக்கு
மெய் எங்குமே !
-------------------------------------------------------------------------------------------------------
இந்தச் செய்யுளை வீரராகவர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த திருப்பனையங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை நல்லாள் “கவிராயருக்குக் கண்தான் கெட்டது – மதியும் கெட்டதோ? கரும்பு சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையே” எனச் சொன்னார் !
பாடலின் பொருள்:
-----------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
கொம்பை
வெட்டிக் காலை நடு:
-------------------------------------------------------------------------------------------------------
இதன்
பொருள் என்ன ? ”முக்கனிச் சேற்றின் அமுத வயல்” என்று புலவர் முன்னதாகச் சொன்னார். அம்மைச்சி
என்னும் மங்கை ”கரும்பு சேற்றில் முளைக்காது” என்றதும் புலவர் “சேற்றில்” என்பதில்
வரும் கொம்பை (இரட்டைச் சுழி) வெட்டிவிட்டு, காலை நடு என்றார். அதாவது “சேற்றில் “
என்பதை “சாற்றில்” என்று மாற்றியமைத்தார் புலவர்
!
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்,
[திருவள்ளுவராண்டு:
2053, மேழம் (சித்திரை) 17]
{30-04-2022}