name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/09/19

புதன், அக்டோபர் 09, 2019

பல்வகை (15) ஆங்கில மொழியில் தமிழ்ச் சொற்கள் !

ஆங்கிலம் தமிழிலிருந்து இரவல் பெற்றுள்ள  சொற்கள் !


ADAMANT........................................= அடம்
ARECANUT......................................= அடைகாய் (பாக்கு)
BLARE..............................................= பிளிறு
BOTTLE............................................= புட்டில் / புட்டி
BULL.................................................= புல்லம்
CASH................................................= காசு
CATAMARAN...................................= கட்டுமரம்
CHEROOT........................................= சுருட்டு
COIR.................................................= கயிறு
COO..................................................= கூவு
COT...................................................= “கட்டில்
COWRY.............................................= சோழி
CURL.................................................= சுருள்
CURRY..............................................= கறி
EIGHT...............................................= “எட்டு
ELACHI.............................................= ஏலக்காய்
EVE...................................................= அவ்வை
KILL...................................................= கொல்
MANGO.............................................= மாங்காய்
METRE.............................................= மாத்திரை
MULLIGATAWNY.............................= ”மிளகுத் தண்ணீர் (ரசம்)
NOSTRIL...........................................= நாசி
NASAL...............................................= நாசி
NAVY................................................= நாவாய்”ப் படை
ONE...................................................= ”ஒன்று
PRIZE...............................................= பரிசு
RICE.................................................= அரிசி
ROLL................................................= உருள்
SUDDEN..........................................= உடன்
SYRINGE.........................................= உறிஞ்சு
TERRA.............................................= தரை
TRIP.................................................= திருப்பு (வே.சொ.274)
TUNNEL...........................................= துன்னல்
VOMIT..............................................= உமட்டு
WAGON............................................= வாகனம்
                      ----------------------------------------------------------------------------------------
பின் வரும் சொற்களில் முதலெழுத்தை நீக்கிவிட்டுப்
படித்துப் பாருங்கள்.
                       ---------------------------------------------------------------------------------------

S”CRIPT”.............................................= குறிப்பு
S”PEECH”...........................................= பேச்சு
S”PONGE”..........................................= பஞ்சு
S”NAKE”.............................................= நாகம்
A”TTACK”...........................................= தாக்கு
M”AKE”..............................................= ஆக்கு

------------------------------------------------------------

 கீழ்க்கண்ட ஆங்கிலச் சொற்களில் தமிழ்ச் 
சொற்களின் 
ஒலி உள்ளடங்கி இருப்பதைப் பாருங்கள் !
                              ------------------------------------------------------------

ROUND..............................................= ”உருண்டை
LEMON..............................................= ளமஞ்சள் காய்
ORATE..............................................= “உரையாற்று
“KNOW”LEDGE................................= ”ஞானம்
GINGER............................................= ஞ்சி”வேர்
CULPRIT...........................................= “கள்ளன்
TORQUE...........................................= திருகி
LEVEL...............................................= ளவு
MAD..................................................= “மடமை
SURROUND......................................= ”சுற்றம்
GOD..................................................= “கடவுள்
BIRTH................................................= “பிறப்பு
CAPTURE.........................................= கைப்பற்று
WANT................................................= ”வேண்டி
PLOUGH...........................................= ழவு
FAULT...............................................= ”பழுது
SHRINK.............................................= “சுருங்கு
VILLA.................................................= “இல்லம்
PATH.................................................= “பாதை
VIA/ WAY.........................................= வழியாக
COT...................................................= “கட்டில்
NERVE...............................................= “நரம்பு
BETROTHAL......................................= பெற்றோர் ஒத்தல்
GRAIN................................................= “தானியம்
MOLECULE........................................= ”மூலக்கூறு
OTHER...............................................= இதர
TELE..................................................= “தொலைவு
TEAK..................................................= “தேக்கு
VENOM................................................= விசம்
FADE...................................................= வாடு
POLY...................................................= பல
MEGA..................................................= மிக
ACCEPT..............................................= இசைப்படு
MATURE.............................................= முதிர்
GOAT..................................................= கடா
PAIN....................................................= பிணி
YARN...................................................= ஞாண்
                     --------------------------------------------------------------------------------------
                                                     ஆக்கம் + இடுகை:
                                                 வை.வேதரெத்தினம்,
                                                           ஆட்சியர்,
                                                 தமிழ்ப்பணி மன்றம்,
                                               [தி.: 2050, சுறவம், 23.]
                                                           {06-02-2019}
                        --------------------------------------------------------------------------------------
-தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில்
 வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-                     --------------------------------------------------------------------------------------




பல்வகை (14) மறைமலை அடிகள் - தனித் தமிழின் தந்தை !

தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தகைசான்ற தலைவர்  !


சுவாமி வேதாச்சலம் என்னும் மறைமலை அடிகள் ( 1886 – 1950 ) 15-07-1986 அன்று நாகப்பட்டினத்தில் பிறந்தார்.  தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் ஐயம் திரிபறக் கற்று,  புலமை பெற்ற மிகச் சிறந்த ஆய்வாளர்.  1935 –ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தமிழ் அறிஞர்களைக் கூட்டி, பல்வேறு இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளை ஆய்வு செய்து  திருவள்ளுவர் பிறந்தது கி.மு 31 –ஆம் ஆண்டு என்பதை உலகுக்கு அறிவித்தவர் இவரே !

இவர் நிறைய நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை,  முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, தமிழர் மதம், திருவாசக விரிவுரை, பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும், யோகநித்திரை அல்லது அறிதுயில், மரணத்தின் பின் மனிதர் நிலை, தொலைவிலுணர்தல், மக்கள் நூறாண்டு வாழ்க்கை, பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் போன்ற பல்வேறு நூல்கள் இவரது புலமையைப் பறைசாற்றுவன !

இவர் எழுதிய தமிழர் மதம் என்னும் நூல் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக பதிப்பிக்கப்பெற்றது. பதிப்பகத்தாரின்  முன்னுரையில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அப்படியே இங்கு தரப்படுகின்றன !

பெயரளவில் இந்நூல் தமிழர் மதம்எனக் காணப்படினும், இது தமிழர் வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு, தமிழின் வரலாறு, தமிழ் நூல்களின் வரலாறு, தமிழ்ப் பெருமக்கள் பனிமலை தொட்டு இனிய குமரிக் கோடு வரை வாழ்ந்து வந்த தொன்மைச் சிறப்பு வரலாறு, இடையே ஆரியர் வந்து புகுந்து கலந்து சீர்கேடு எய்திய சிறுமை முறைகள், மதம் என்னும் சொல்லாய்வு, ஒளி வழிபாட்டின் அடையாளமாகப் பகலவன் வழிபாடு தோன்றியமை, தீ வழிபாட்டின் அடையாளமாகச் சிவலிங்க வழிபாடு தோன்றியமை, திருக்கோயில்கள் தோன்றிய வரன்முறைகள், தமிழ் மந்திரங்களைக் கொண்டே திருமணச் சடங்குகள் நிகழ்ந்தமை, சைவம் வைணவம் என இரு பிரிவுகளின் தோற்றம், ஆரியர் கொண்டு வந்து புகுத்திய பொய் புனை நிறைந்த புராணக் கதைப் புரட்டுகளால் எல்லையின்றி விரிந்த சிறு தெய்வ வழிபாடுகள், வடமொழிச் சடங்குகளைப் புறந்தள்ள வேண்டிய அகத்தியம், வடமொழி வாயிலான வழிபாட்டை மாற்ற வேண்டிய தேவை, ஆகியவை பற்றி எல்லாம் இந்நூலில் விரிவாக அடிகளார் எடுத்துரைத்துள்ளார்..”

தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து, பிற மொழிக் கலப்பின்றித் தமிழில் பேசவும் முடியும்; எழுதவும் முடியும் என்று மெய்ப்பித்த பேரறிஞர் மறைமலை அடிகள். வடமொழியில் உள்ள நான்கு வேதங்களையும் கற்று, ஆய்வு செய்தவர். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர். 1938 – ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்.  சென்னை பல்லவபுரத்தில் (பல்லாவரம்) வாழ்ந்து வந்த அடிகளார்  தமது 64 – ஆவது அகவையில் (15-09-1950)  அன்று  இவ்வுலக வாழ்வை நீத்தார் !

இவரது நினைவைப் போற்றும் வகையில் திரு.கருணாநிதி ஆட்சியில் இருந்த போது சென்னைசெங்கை இடையேமறைமலை நகர்என்னும் நகரியத்தை தமிழக அரசு உருவாக்கியது !

ஆர்வமும், வாய்ப்பும் மிக்க தமிழன்பர்கள் அடிகளாரின் நூல்களை வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்களாக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 28.]
{11-02-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
      
 ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------



பல்வகை (13) பணி ஓய்வும் அரசியல் நுழைவும் !

அரசியலில் சேரத் தடை விதிக்க வேண்டும் !


நவம்பர் 28, 2018 தினமலர் செய்தித் தாளில் வெளிவந்துள்ள ஒரு செய்தியின்படி, ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அபராஜிதா சாரங்கி என்ற பெண்மணி ஒரு கட்சியின் தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்திருக்கிறார். இந்தப் பெண்மணி யார் தெரியுமா ? நடுவணரசுப் பணியிலிருந்து கடந்த செப்டம்பர் 15 ஆம் நாள் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி (I.A.S) அதிகாரி !

தமிழ் நாட்டிலும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ( I.A.S ) ஓய்வு பெற்ற திரு. மலைச்சாமி, இந்தியக் காவல் பணியிலிருந்து ( I.P.S ) ஓய்வு பெற்ற திரு நட்ராஜ், திருமதி திலகவதி, இந்தியத் தலைமை நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் இராமசாமி, மருத்துவப் பலகலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணை வேந்தர் திரு. இராஜன் ஆகியோர் தமிழ் நாட்டுக் கட்சி ஒன்றில் இணைந்த வரலாறு உண்டு !

அரசு அலுவல் என்பது மக்களுக்குச் சேவை செய்ய வழங்கப் பெற்றுள்ள ஒரு நல்வாய்ப்பு. அரசு அலுவலராகப் பணியேற்று இருப்பவர் துலாக் கோல் போல் நடுநிலை தவறாமல் செயலாற்ற வேண்டும். ஒருதலைச் சார்பு இல்லாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, நீதிமன்றப் பணி, பல்கலைக் கழகத் தலைமைப் பணி ஆகியவை பொறுப்புள்ள பதவிகள் அல்லவா ?

இப்பதவிகளை அலங்கரித்த பெருமக்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அரசியல் கட்சியில் சேர்வதும், அக்கட்சியின் சார்பாகத் தேர்தலில் நின்று பதவிகள் பெறுவதும் அவர்களது பேராசையின் வெளிப்பாடு அல்லவா ?

இத்தகைய பேராசைக்காரர்கள், அவர்கள் ஏற்றிருந்த பதவிப் பொறுப்புகளில் நடுநிலை தவறாமல் பணியாற்றியதாக எப்படி நம்பமுடியும்? பணி ஓய்வுக்குப்பின் அவர்கள் எந்தக் கட்சியில் இணைகிறார்களோ, அந்தக் கட்சிக்குச் சாதகமாகத்தானே அவர்கள் ஏற்றிருந்த அரசுப் பணிகளில் செயலாற்றி இருக்க முடியும் !

அரசுப் பணியை ஒரு குறிப்பிட்ட கட்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும், இத்தகைய ஆளிநருக்கு, பதவி ஓய்வுக்குப் பின் தேர்தலில் நின்று சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்திற்குச் செல்ல அக்கட்சி வாய்ப்பளிப்பதும் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான தவறான செயல் அல்லவா ?

பணி ஓய்வுக்குப் பின் அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறும் இத்தகைய பேராசைக்காரர்களை மோசடிக்காரர்கள் என்று சொன்னால் அது தவறா ? இந்த மோசடிக் காரர்களைத் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் அரசியல் தலைவர்களின் செயல் அறவழி தவறிய செயல் அல்லவா ?

அரசுப் பணி ஏற்றிருந்த காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யத் தவறிய இத்தகைய ஆளிநர்களை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கக் கூடாது !. பணி ஓய்வு பெற்ற பின் ஆயுட்காலம் வரை எந்தக் கட்சியிலும் சேரக் கூடாது என்று பணியாளர் சட்டத்தைத் திருத்த வேண்டும் !

அரசியல் சார்பற்ற சமூகச் செயற்பாட்டு இயக்கங்கள் இக்கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும் ! இதுவே இவ்வியக்கங்கள் மக்களுக்குச் செய்யும் நற்பணியாகும் !

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
{10-12-2018}

------------------------------------------------------------------------------------------------------
     
  ”தமிழ்ப்பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------

பல்வகை (12) புத்த ஞாயிறு புகட்டிய அறிவு !

பழங்களைத் திரும்ப எடுத்துக் கொள்வதைப் போல !


மக்கள், வாழ்வின் துன்பங்களைப் போக்க, மன்னர் வாழ்வைத் துறந்தார் சித்தார்த்தர்;  ஒரு அரச மரத்தடியில் (போதிமரம் = அரசமரம்) பல நாள்கள் உண்ணா நோன்பிருந்துசிந்தனையை ஒருமுகப்படுத்தி ஓகமியற்றிபேரொளி பெற்றார்; புத்தரானார் !

ஆசையே துன்பத்திற்குக் காரணம்; ஆசையை விட்டொழியுங்கள்என்று அவர் ஊர்தோறும் சென்று உரையாற்றி வந்தார். சிலர் புத்தரது உரையில் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்டனர்.  வேறு சிலர் அவரைத் தாக்கிப் பேசி வெறுத்தனர் !

ஒரு முறை ஒரு மனிதன் புத்தரைக் கண்டான்; இழிவான மொழிகளால் புத்தரை ஏசினான்; இல்லாததையும் பொல்லாததையும்  சொல்லி அவரை இழிவு படுத்தினான் !

அவனது ஏச்சையும் பேச்சையும் பொறுத்துக் கொண்டார் புத்தர். அந்த இழிதகையோன் பேசிப் பேசி அலுத்து ஓய்ந்தான் !

பின்னர் புத்தரை நோக்கிய அவன், “பரதேசியே ! நான் இவ்வளவு இழித்தும் பழித்தும் உம்மைத் தூற்றுகிறேனே, உமக்கு மானம், வெட்கம் என்பது ஒன்றும் இல்லையா ?” என்றான் !

அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்த புத்தர், “நண்பா ! அருகில் வாஎன்று அழைத்தார். அவன், அவர் அருகில் சென்றான். “நண்பனே இப்படி உட்கார் !” என்றார்.; அவனும் உட்கார்ந்தான் !

நண்பனே ! நீ யாரையாவது காணச் செல்லும்போது, கையில் ஏதாவது எடுத்துச் செல்வது உண்டா ?” என்று கேட்டார் !

ஆம் ! பழங்கள் எடுத்துச் செல்வேன் !” என்று அந்த மனிதன் மறுமொழி பகன்றான் !

நீ கொடுக்கும் பழங்களை, நீ காணச் சென்றவர் ஏற்க மறுத்தால், பிறகு நீ அப்பழங்களை என்ன செய்வாய் ?” என்று கேட்டார் புத்தர் !

ஏசின மனிதனோதிரும்ப அப்பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவேன் !” என்றான் !

அதைப் போலவே நீ ஏசின ஏச்சு மொழிகளை அப்பொழுது நான் ஏற்றுக் கொள்ளவில்லை; பழங்களைத் திரும்ப எடுத்துக் கொள்வதைப் போல ஏச்சுக்களையும் நீயே எடுத்துக் கொள்.” என்று கூறி புன்னகை காட்டினார் புத்தர் பெருமான் !

பொறுமையின் சிகரமான புத்தரின் பொறுமைக்குத் தான் எல்லை ஏது?  அந்தப் பொறுமை கடலினும் பெரிதாயிற்றே !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,சுறவம், 13.]
{27-01-2019}

---------------------------------------------------------------------------------------------------------

       ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------


பல்வகை (11) நால்வகை விரகுகள் !

இன்மொழி, புகழ்மொழி, தருமொழி, ஒறுப்பு !


விறகு என்றால் தெரியும்; அது என்ன விரகு ? ”ஏதாவது ஒரு உபாயத்தைக் கையாண்டு  சிக்கலிலிருந்து மீண்டு வாஎன்கிறோமே, அந்த உபாயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தான்  தான்விரகு” !

சரி ! அது என்ன நால்வகை விரகுகள் ? அவைதான், சாம, பேத, தான, தண்டம் என்பவை. தமிழில்இன்மொழி”, புகழ்மொழி”, “தருமொழி”, ஒறுப்பு !

நீ நல்ல குழந்தை ஆயிற்றே ; அழகான குழந்தை ஆயிற்றே; அம்மா சொல்லைத் தட்டாத குழந்தை ஆயிற்றே; இங்கே வா ! இப்படி உட்கார்; ஒரு பாட்டுப் பாடு !” எனக் கூறிக் குழந்தையின் குறும்பை அடக்குவது ஒரு முறை. இதையேசாமம்என்பர். இதைத் தமிழில்இன்மொழிஎனக் கூறலாம் !

நீ நல்ல பெண்மணி; அடுத்த வீட்டுப் பெண் இருக்கிறாளே, அவள் கெட்ட பெண்; நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்; பக்கத்து வீட்டுப் பாவை இருக்கிறாளே அவள் அசடு. நீ அறிவுடையவள்; அவள் முழு மூடம்; என் கண்ணல்ல; இங்கே வா ! அமைதியாக இரு; அம்மா வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டிரு.” என்று அடுத்தவரோடு ஒப்பிட்டு, வேறுபடுத்தி, அடக்குவதும் ஒரு முறைஇதனைப்பேதம்என்பர். இதைபுகழ்மொழிஎனக் கூறலாம் !

என் கண்ணல்லவா நீ; என் கற்பகம் அல்லவா நீ; இங்கே வா;  உனக்குப் பால் தருகிறேன்; பழம் தருகறேன். நீ அமைதியாக இருந்தால்கொத்துச் சரமாய் முத்து மாலை வாங்கித் தருவேன்; கோவிலுக்குக் கூட்டிச் செல்வேன்; குளத்துக்கு அழைத்துச் செல்வேன், என்ற முறையில் இன்னது தருவேன்; சொன்ன படி நடந்தால் எனக் கூறி அடக்குவதும் ஒரு முறை. இதைத்தானம்என்பர். இதைதருமொழிஎன்று கூறலாம் !

சாம, பேத, தானம் என்ற மூன்று முறைகளிலும் மக்களுக்கு ஒழுக்க முறைகளைகட்டுப்பாட்டு உணர்வை -  கடமைகளை எடுத்து உரைப்பது  அறநெறி; எடுத்துரைப்பது ஒன்றே இதன்முழுமையான மெய்ப்பொருள்அதாவது தத்துவம் !

இப்போது புரிகிறதா, “சாம, பேத, தான, தண்டம்என்றால் என்ன என்று ? உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எந்தவிதமான விரகு முறையைக் கையாளுகிறீர்கள்; இனியும் கையாளப் போகிறீர்கள். சொல்லுங்களேன் பின்னீடு வாயிலாக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,சுறவம், 13.]
{27-01-2019}
----------------------------------------------------------------------------------------------------------
      
 “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

பல்வகை (10) தேள் கொட்டினால் என்ன செய்வீர்கள் ?

செய்ந்நன்றி பற்றித் தேளுக்கு என்ன தெரியும் ?


மாஞ்சோலை என்னும் சிற்றூரில் நீர் நிறைந்த ஒரு பெரிய ஏரி. அதன் உயர்ந்த கரைகளில் நெடிது வளர்ந்த ஆல மரங்கள். ஆல மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் காவி உடுத்திய ஒரு முனிவர் !

ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த அவருக்கு, நீர் வேட்கையினால் நா வறண்டது. நீர் அருந்தலாம் என்று எண்ணிக் ஏரியை நோக்கிச் சென்றார். நீர் அருகில் அமர்ந்து இரு கைகளாலும்  நீரை எடுத்த அவர், இரண்டடி தொலைவில்  ஒரு தேள் தத்தளிப்பதைக் கண்டார் !

நீரில் விழுந்து உயிருக்குப் போராடும் தேளினைக் கண்டவுடன் முனிவரின் நெஞ்சில் ஈரம் கசிந்தது. எழுந்து போய்த் தேளினைத் தமது கரங்களால் எடுத்துக் கரையில் விட்டார் !

செய்ந்நன்றி பற்றித் தேளுக்கு என்ன தெரியும் ? கரையில் விடப்பட்ட தேள் முனிவரின் விரலில் கொட்டிவிட்டது. அதே நேரம், குளத்திலிருந்து எழுந்து வந்த பெரிய அலை ஒன்று தேளினை மீண்டும் தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது !

முனிவர் நெஞ்சில் ஊறிய ஈரம் இன்னும் காயவில்லை. அவர் தண்ணீரில் இறங்கி, தன் கரங்களால் தேளினை மீண்டும் எடுத்து, கரையில் சற்றுப் பாதுகாப்பான இடத்தில் விட்டார். தேள் இம்முறையும் அவரைக் கொட்டிவிட்டது !

இந்தக் காட்சிகளை எல்லாம் ஆல மர நிழலில் படுத்திருந்த இன்னொரு மனிதன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நீர் அருகில் நின்று கொண்டிருந்த முனிவரை நோக்கி வந்து, “முனிவரே ! தேள் கொட்டும் என்று உமக்குத் தெரியாதா? அதைப் போய் காப்பாற்ற முயல்கிறீரே ! “ என்று ஏளனமாகக் கேட்டான் !

தெரியுமப்பா !’ தேளின் குணம் கொட்டுவது; அதற்கு நல்லவர், தீயவர் என்பதெல்லாம் தெரியாது;  ஆனால் மனிதனின் குணம் என்ன ? இன்னலுக்கு ஆட்பட்டுப் போராடும் உயிரைக் காப்பாற்றுவது அல்லவா ?”

உயிருக்குப் போராடும் ஒரு உயிரைக் காப்பாற்றாமல் விட்டு விட்டால் நான் மனிதப் பிறவி எடுத்தற்கு பொருளின்றிப் போய்விடும் அப்பனே !” என்று சொல்லிவிட்டுக் குளக்கரையில் இருந்த ஒரு மூலிகையை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் தேய்த்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார் முனிவர் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{24-12-2018}

------------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

பல்வகை (09) உங்களுக்குச் சீட்டு விளையாடத் தெரியுமா ?

சொல்லுங்கள் ! தெரியுமா ? தெரியாதா ?


தெரியாதா ? அப்படியென்றால் நான் சொல்லும் விளக்கம் உங்களுக்குத் தேவையில்லை. ஏனென்றால் நான் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியாது !

தெரியுமா ? அப்படியென்றால் நான் சொல்லும் செய்தியைக் கேளுங்கள். ஒரு சீட்டுக் கட்டில் 1 முதல் “K”  வரையில்  உள்ள சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 52. இது ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கிறது !

சீட்டுக் கட்டில் 4 வகை  இனங்கள் உள்ளன. (HEART, SPADE, CLUB, DIAMOND). ஒரு ஆண்டிற்கு 4 பருவங்கள்  என்பதை இது குறிக்கிறது. மொத்தம் 12 பொம்மைச் சீட்டுகள் தான் ஒரு கட்டில் இருக்கும். இது ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்பதைக் குறிக்கிறது !

1 முதல் 10 வரையில் உள்ள சீட்டுகளின் எண்ணிக்கை மதிப்பு உங்களுக்குத் தெரியும். அத்துடன்ஜேமதிப்பு 11, “கியூமதிப்பு 12, “கேமதிப்பு 13 என்று வைத்துக் கொண்டு  52 சீட்டுகளின் மொத்த மதிப்பையும் கணக்கிட்டுப் பாருங்கள். அவற்றின் மதிப்பு மொத்தம் 364 வரும். பள்ளியில் படித்த சூத்திரம் நினைவில் இருக்கிறதா? 13 X 14 = 182 X 4 = 728 / 2 = 364 !

சீட்டுக் கட்டில்ஜோக்கர்சீட்டும் உண்டு. இதற்கு மதிப்பு 1 எனக் கொண்டு, மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால் 365 வரும். இது ஒரு ஆண்டுக்கு 365 நாள் என்பதைக் குறிக்கிறது !

இந்த செய்தி உங்களுக்கு இப்போது தான் தெரியும் என்றால், சீட்டு விளையாட்டில் நீங்கள் கற்றுக் குட்டி என்று பொருள் ! முன்பே தெரியும் என்றால், அதை ஏன் நீங்கள் முகநூலில் இதுவரைப் பதிவிட வில்லை ?

ஆமாம் ! கற்றுக் குட்டி என்ற சொல்லின் உண்மையான வடிவம் என்ன?  அதன் பொருள் என்ன ? சொல்லுங்களேன் !

எவ்வளவோ நல்ல செய்திகளைப் பதிவிட்டாலும் நீங்கள் அதற்குகருத்துரைஎழுதுவதே இல்லை ! இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, சுறவம், 12.]
{26-01-2019)

----------------------------------------------------------------------------------------------------------
      
“தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------