தொல்லியல்
துறையா ?
சமற்கிருத வளர்ச்சித் துறையா ?
தமிழகத்தில்
பல இடங்களில் நடுவணரசின் தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. ஆனால் அவை பற்றிய அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று ஆய்வுக்கு
வந்தது !
தமிழக
அரசின் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் பற்றியும் அப்போது வினா எழுப்பப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகள் சில உத்தரவுகளை வழங்கினர் !
நீதிபதிகள்
தங்கள் உத்தரவில் கூறும்போது ”தமிழக தொல்லியல் துறையில்
உள்ள 35 பணியிடங்களில்
25 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் அந்த பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பாணையில் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சமற்கிருத மொழியில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது !
தமிழகத்தில்
கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துகளே உள்ளன. ஆகையால், சமற்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்
எனக் குறிப்பிட்டிருப்பதை ஏற்கமுடியாது !
எனவே, (தமிழக அரசின்) தொல்லியல் துறையின் பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட
அறிவிப்பாணையில், சமற்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
என்ற தகுதியை நீக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்
!
-------------------------------------------------------------------------------------------------------------
நமது
வீட்டிற்குள்ளேயே நல்லபாம்பு குடியிருக்கிறதே ! தமிழக அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு
சமற்கிருத வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவதற்கு என ஒரு துறையா ?
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்பணி மன்றம்.
[தி.ஆ: 2050, மேழம், 03]
{16-04-2019}
----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .