இன்மொழி, புகழ்மொழி, தருமொழி, ஒறுப்பு !
விறகு என்றால் தெரியும்; அது என்ன விரகு ? ”ஏதாவது ஒரு உபாயத்தைக் கையாண்டு சிக்கலிலிருந்து மீண்டு வா
“ என்கிறோமே, அந்த உபாயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு
இணையான தமிழ்ச் சொல் தான் தான் ”விரகு” !
சரி ! அது என்ன நால்வகை விரகுகள் ? அவைதான், சாம, பேத, தான, தண்டம் என்பவை. தமிழில் “இன்மொழி”,
புகழ்மொழி”, “தருமொழி”, ஒறுப்பு
!
“நீ நல்ல குழந்தை
ஆயிற்றே ; அழகான குழந்தை ஆயிற்றே; அம்மா
சொல்லைத் தட்டாத குழந்தை ஆயிற்றே; இங்கே வா ! இப்படி உட்கார்; ஒரு பாட்டுப் பாடு !” எனக் கூறிக் குழந்தையின் குறும்பை அடக்குவது ஒரு முறை. இதையே “சாமம்” என்பர். இதைத் தமிழில் “இன்மொழி” எனக் கூறலாம்
!
“நீ நல்ல பெண்மணி;
அடுத்த வீட்டுப் பெண் இருக்கிறாளே, அவள் கெட்ட
பெண்; நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்; பக்கத்து
வீட்டுப் பாவை இருக்கிறாளே அவள் அசடு. நீ அறிவுடையவள்;
அவள் முழு மூடம்; என் கண்ணல்ல; இங்கே வா ! அமைதியாக இரு; அம்மா
வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டிரு.” என்று அடுத்தவரோடு ஒப்பிட்டு,
வேறுபடுத்தி, அடக்குவதும் ஒரு முறை – இதனைப் “பேதம்” என்பர்.
இதை “புகழ்மொழி” எனக் கூறலாம்
!
“என் கண்ணல்லவா
நீ; என் கற்பகம் அல்லவா நீ; இங்கே வா; உனக்குப் பால் தருகிறேன்;
பழம் தருகறேன். நீ அமைதியாக இருந்தால்கொத்துச்
சரமாய் முத்து மாலை வாங்கித் தருவேன்; கோவிலுக்குக் கூட்டிச்
செல்வேன்; குளத்துக்கு அழைத்துச் செல்வேன், என்ற முறையில் இன்னது தருவேன்; சொன்ன படி நடந்தால் எனக்
கூறி அடக்குவதும் ஒரு முறை. இதைத் “தானம்”
என்பர். இதை “தருமொழி”
என்று கூறலாம் !
சாம, பேத, தானம் என்ற மூன்று முறைகளிலும் மக்களுக்கு ஒழுக்க
முறைகளை – கட்டுப்பாட்டு உணர்வை - கடமைகளை எடுத்து உரைப்பது அறநெறி; எடுத்துரைப்பது
ஒன்றே இதன்முழுமையான மெய்ப்பொருள் – அதாவது தத்துவம்
!
இப்போது புரிகிறதா, “சாம, பேத, தான, தண்டம்” என்றால் என்ன என்று ? உங்கள்
குழந்தைகளிடம் நீங்கள் எந்தவிதமான விரகு முறையைக் கையாளுகிறீர்கள்; இனியும் கையாளப் போகிறீர்கள். சொல்லுங்களேன் பின்னீடு
வாயிலாக !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,சுறவம், 13.]
{27-01-2019}
----------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .