யாப்பிலக்கணம்
அசை
(01) குறில், குறிலொற்று, நெடில், நெலொற்று = நேரசை
(02) குறிலிணை, குறிணை யொற்று, குறில்நெடில் குறில் நெடிலொற்று = நிரையசை.
சீர்
(01)
ஈரசைச் சீர் நான்கும்
= ஆசிரிய உரிச்சீர் எனப்படும் (ப.22.யாப்பிலக்கணம்)
(02)
ஈரசைச் சீர் நன்கும்
இயற்சீர் என்றும் சொல்வர் (பக்.23 யாப்பிலக்கணம்)
(03)
நேரசை இறுதியாகிய
மூவசைச் சீர் (காய்ச்சீர்) நான்கும் = வெண்பா உரிச்சீர் எனப்படும் (ப.24 யாப்பிலக்கணம்)
(04)
நிரையசை இறுதியாகிய
மூவசைச்சீர் (கனிச்சீர்) நான்கும் = வஞ்சி உரிச்சீர் (ப.24 யாப்பிலக்கணம்)
(05)
நாலசைச் சீர் 16-ம் = பொதுச்சீர் (ப.24 யாப்பிலக்கணம்)
(06)
ஓரசைச் ஈர் இரண்டும் = அசைச்சீர் (ப.24 யாப்பிலக்கணம்)
(07)
நாலசைச் சீர் செய்யுளில்
பொதுவாக வராது. ஆனால் அருகி வரும் (ப.25 யாப்பிலக்கணம்)
(08)
தண்பூ, நறும்பூ என்று முடியும் நாலசைச் சீர்கள் எட்டும், அசை பிரிக்கையில் காய்ச் சீராகக் கொள்ளப்படும் (ப.25 யாப்பிலக்கணம்)
(09)
தண்ணிழல், நறுநிழல் என்று
முடியும் நாலசைச் சீர்கள் எட்டும் அசை பிரிக்கையில் கனிச் சீராகக் கொள்ளப்படும் (ப.25 யாப்பிலக்கணம்)
(10)
வெண்பாவினுள் நாலசைச்
சீர் வாரா (ப.26 யாப்பிலக்கணம்)
(11)
ஆசிரியப் பாவினுள் குற்றுகரம் வந்துழி அன்றி நாலசைச் சீர் வாரா (ப.26 யாப்பிலக்கணம்)
(12)
வஞ்சிப் பாவிலுள்
குற்றுகரம் வாராதேயும் நாலசைச் சீர் வரும் (ப.26 யாப்பிலக்கணம்)
(13)
வஞ்சிப் பாவினுள்
இரண்டு நாலசைச் சீர் ஓரடியுள் அருகி நெருங்கி நிற்கவும் பெறும் (ப.26). இரண்டு வரினும்
நெருங்கி நில்லா ! (ப.26 யாப்பிலக்கணம்)
(14)
வஞ்சிப் பாவினுள்
பெரும்பான்மையும் ஓரடியுள் நாலசைச் சீர் ஒன்று மட்டுமே வரும் (ப.26 யாப்பிலக்கணம்)
(15)
நிழல் என்னும் சொல்
இறுதியாகிய நிரை ஈற்றுப் பொதுச் சீர் எட்டும் வஞ்சிப் பாவில் அல்லாது வேறு எதிலும்
வாரா (ப.26 யாப்பிலக்கணம்)
ஆசிரியப்பா
குன்,றக் குற,வன் கா,தல் மட,மகள்
வரை,யர மக,ளிர் புரை,யுஞ் சா,யலள்
ஐ,யள் அரும்,பிய முலை,யள்
செய்,ய வா,யினள் மார்,பினள் சுணங்,கே ! (பக்.27 யாப்பிலக்கணம்)
இந்நேரிசை ஆசிரியப் பாட்டினுள் ஆசிரிய உரிச் சீர் நான்கும் ( மாமுன் நேர், விளமுன் நிரை, மாமுன் நிரை, விளமுன் நேர் (அ) நேர் நேர்; நிரை நிரை; நேர் நிரை; நிரை நேர்) வந்துள்ளமை காண்க !
வெண்பா
பொன்,னார மார்,பிற் புனை,கழற்,காற் கிள்,ளிபேர்
உள்,ளே,னென் றூ,ழுலக்,கை பற்,றினேற் – கென்,னோ
மன,னொடு வா,யெல்,லாம் மல்,குநீர்க், கோ,ழிப்
புன,னா,டன், பே,ரே வரும் (பக்.28 யாப்பிலக்கணம்)
இந்நேரிசை வெண்பாவினுள் வெண்பா உரிச்சீர்
நான்கும் ( தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்) வந்துள்ளமை காண்க !
வஞ்சிப்பா
பூந்,தா,மரைப் போ,தல,மரத்
தேம்,புன,லிடை மீன்,றிரி,தரும்
வள,வய,லிடைக் கள,வயின்,மகிழ்
வினைக்,கம்,பலை மனைச்,சிலம்,பவும்
மனைச்,சிலம்,பிய மண,முர,சொலி
வயற்,கம்,பலை கய,லார்ப்,பவும் (பக்.28 யாப்பிலக்கணம்)
இக்குறளடி வஞ்சிப் பாட்டினுள் வஞ்சி
உரிச் சீர் நான்கும் ( தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி ) வந்துள்ளமை காண்க !
வஞ்சிப்பா
அள்,ளற்,பள்,ளத் தகன்,சோ,ணாட்,டு
வேங்,கை,வா,யில் வியன்,குன்,றூ,ரன் (பக.29 யாப்பிலக்கணம்)
இந்த வஞ்சிப்பாவினுள் ஓரடியில் இரண்டு
நாலசைச்சீர் (தே,மாந்,தண்,பூ; புளி,மாந்,தண்,பூ ) வந்துள்ளதைக் காண்க ! இது வஞ்சிப் பாவினுள் ஓரடிக்கண் நாலசைச் சீர் வருதற்கும், கண்ணுற்று (அடுத்தடுத்து), நிற்றற்கும். குற்றியலுகரம் பெற்றும், பெறாமலும் வருதற்கும் எடுத்துக் காட்டாதல்
காண்க ! (பக் 29 யாப்பிலக்கணம் அடிக்குறிப்பு)
வஞ்சிப்பா
அங்,கண்,வா,னத் தம,ரர,ரச,ரும்
வெங்,களி,யா,னை வேல்,வேந்,தரும்
வடி,வார்,கூந்,தன் மங்,கை,யரும்
கடி,மல,ரேந்,திக் ,கதழ்த்,திறைஞ்,சச் (பக்.29
யாப்பிலக்கணம்)
............................................................................
இந்தக் குறளடி வஞ்சிப் பாவினுள் நாலசைச்
சீர் பதினாறும் (தே,மாந்,தண்,பூ, தே,மாந்,தண்,ணிழல், தே,மா,நறும்,பூ, தே,மா,நறு,நிழல்............) அடிதோறும் முதற்கண்ணே வந்துள்ளமை காண்க !
(04) தளை (பக்.30
யாப்பிலக்கணம்)
மாமுன் நேர் (நேர் முன் நேர்)...........= நேரொன்றாசிரியத்
தளை
விளமுன் நிரை (நிரை முன் நிரை)...= நிரையொன்றாசிரியத் தளை
மாமுன் நிரை ( நேர் முன் நிரை).......= இயற்சீர் வெண்டளை
விளமுன் நேர் (நிரை முன் நேர்).........= இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்
(......................................)......= வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரை
(....................................)......= கலித்தளை
கனிமுன் நிரை
(...................................)........= ஒன்றிய வஞ்சித்தளி
கனிமுன் நேர் (......................................).......= ஒன்றாத வஞ்சித்தளை
ஆசிரியப்பா
திரு,மழை தலை,இய
இரு,ணிற விசும்,பின்
விண்,ணதிர் இமி,ழிசை,, கடுப்,பப்
பண்,ணமைந் தவர்,தேர் சென்,ற வாறே
இது நிரையொன்றாசிரியத் தளையான் வந்த
செய்யுள் !
ஆசிரியப்பா
உள்,ளார் கொல்,லோ
தோ,ழி முள்,ளுடை
அலங்,குகு,லை ஈந்,தின் சிலம்,பிபொதி செங்,காய்
................................................................................................ (பக்.33
யாப்பிலக்கணம்)
இது நேரொன்றாசிரியத் தளையான் வந்த
செய்யுள் !
வெண்பா
சிலை,விலங்,கு நீள்,புரு,வஞ் சென்,றொசி,ய நோக்,கி
முலை,விலங்,கிற் றென்,று
முனி,வாள் – மலை,விலங்,கு
தார்,மா,லை மார்,ப தனி,மை பொறுக்,குமோ
கார்,மா,லை கண்,கூ,டும் போ,து ! (பக்.33
யாப்பிலக்கணம்)
இது வெண்சீர் வெண்டளையானும், இயற்சீர் வெண்டளையானும் வந்த செய்யுள் !
வஞ்சிப்பா
மந்,தா,நிலம் வந்,தசைப்,ப
வெண்,சா,மரை புடை,பெயர்,தர
செந்,தா,மரை நாண்,மலர்,மிசை
எனவாங்கு,
இனி,தின்,ஒதுங்,கிய இறை,வனை
மன,மொழி,மெய்,களின் வணங்,குதும்மகிழ்ந்,தே (பக்.33
யாப்பிலக்கணம்)
,
இது ஒன்றிய , ஒன்றாத வஞ்சித் தளை இரண்டும் கலந்து வந்த செய்யுள் !
கலிப்பா
செல்,வப்,போர்க் கதக்,கண்,ணன் செயிர்த்,தெறிந்,த சின,வா,ழி
முல்,லைத்,தார் மற,மன்,னர் முடித்,தலை,யை முறுக்,கிப்,போய்
எல்,லை,நீர் வியங்,கொண்,மூ இடை,நுழை,யு
மதி,யம்,போல்
மல்,லலோங்,கு
எழில்,யா,னை மரு,மம்,பாய்ந் தொளித்,ததே !
,
இது மயக்கமில்லாக் கலித் தளையான் வந்த செய்யுள் !
வஞ்சி விருத்தம்
உரி,மை யின்,கண் நின்,மை,யால்
அரி,மதர் மழைக் கண்,ணாள்
செரு,மதி செய் தீ,மை,யால்
பெரு,ம கொன்,ற என்,பவே
இம் முச்சீரடி வஞ்சி விருத்ததுள் ”மழை” என்னும் நிரையசைச்சீர் இயற்சீரே போல் நின்று வருஞ்சீர் முதல் அசையோடு
ஒன்றாமையால், இயற்சீர் வெண்டளை ஆயிற்று ! ”செய்” என்னும் நேரசைச்சீர்
இயற்சீரே போல் நின்று வருஞ்சீர் முதல்
அசையோடு ஒன்றினமையால் ஆசிரியத் தளை ஆயிற்று !
(05) அடி (பக்.34
யாப்பிலக்கணம்)
இரு சீரான் வந்த அடி............................. = குறளடி
முச்சீரான் வந்த அடி............................... = சிந்தடி
நாற்சீரான் வந்த அடி............................... = அளவடி
ஐஞ்சீரான் வந்த அடி............................... = நெடிலடி
ஐந்துக்கு சீருக்கு மேல் வரும் அடி = கழிநெடிலடி
வஞ்சித் துறை
திரைத்,த சா,லிகை
நிரைத்,த போ,னிரந்
திரைப்,ப தேன்,களே
விரைக்,கொள் மா,லை,யாய்
இது குறளடியான் (இருசீரடி) வந்த வஞ்சி விருத்தச் செய்யுள் !
வஞ்சி விருத்தம்
இரு,து வேற்,றுமை யின்,மை,யாற்
சுரு,தி
மேற்,றுறக் கத்,தினோ
டரி,து
வேற்,றுமை யா,கவே
கரு,து
வேற்,றடங் கை,யினா,ய்
இது சிந்தடியான் (முச்சீரடி) வந்த வஞ்சி விருத்தச் செய்யுள் !
கலிவிருத்தம்
தேம்,பழுத் தினி,யநீர் மூன்,றுந் தீம்,பலா
மேம்,பழுத் தளிந்,தன சுளை,யும் வே,ரியும்
மாம்,பழக் கனி,களும் மதுத்,தண் டீட்,டமும்
தாம்,பழுத் துள,சில தவ,ள மா,டமே !
இது அளவடியான் (நாற்சீரடி) வந்த கலிவிருத்தச் செய்யுள் !
கலித்துறை
வென்றான் வினையின் தொகையாய் விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூ ழொளிமூர்த்தி யாகி
நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்
இது நெடிலடியான் (ஐஞ்சீரடி) வந்த கலித்துறைச் செய்யுள் !
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இரைக்,கு
மஞ்,சிறைப் பற,வை,க
ளெனப்,பெயர்
...............இன,வண்,டு புடை,சூழ
நுரைக்,க ளென்,னுமக் குழம்,புகள் திகழ்ந்,தெழ
.................நுடங்,கிய விலை,யத்,தால்
திரைக்,க
ரங்,களிற் செழு,மலைச் சந்,தன
..................திரள்,களைக் கரை,மேல்,வைத்
இது அறுசீர்க் கழி நெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தச் செய்யுள்
(06) தொடை.
மோனைத்தொடை
அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை (பக.43) மோனை எனினும் முதற்றொடை எனினும்
எழுவாய் எனினும், ஆதி எனினும், முதல் எனினும் ஒக்கும். (பக்.43 யாப்பிலக்கணம்)
மாவும் புள்ளும் வதிவயிற் பட
மாநீர் விரிந்த பூவுங் கூம்ப
மாலை தொடுத்த கோதையுங் கமழ
மாலை வந்த வாடை
மாயோள் இன்னுயிர்ப்புறத்திறுத் தன்றே !
அடிதோறும் இறுதிக்கண் நின்ற எழுத்தானும் அல்லது சொல்லானும் ஒன்றிவரத்
தொடுப்பது அடி இயைபுத் தொடை (பக்.44 யாப்பிலக்கணம்)
இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே
நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே
ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே
அரிமதர் மழைக்கணும் அணங்கே
அடிதோறும் முதற்கண் முதலெழுத்து மாத்திரை அளவில் ஒத்து, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
அடி எதுகைத் தொடை (பக்.44)
வடியோர்கண் நீர்மல்க
கடியார் கணங்குழாய்
இடியின் முழங்கஞ்ச
பிடியின்
புறத்தசைத்த
அடிதோறும் முதற்கண் சொல்லானும் பொருளானும் மறுதலைப்படத் தொடுப்பது அடி
முரண் தொடை (பக்.44)
இருள் பரந்தன்ன
நிலவுக் குவித்தன்ன
இரும்பி னன்ன
பொன்னி னன்ன
அடிதோறும் முதற்கண் உயிரானும், ஒற்றானும் அளபெடுத்து ஒன்றிவரத் தொடுப்பது
அடி அளபெடைத் தொடை (பக்.44)
ஆஅ வளிய
ஈஇரிரை
தூஉந்திரை
மேஎவலை
அடிதோறும் இறுதிக்கண் நின்ற எழுத்தானும், அசையானும், சீரானும், அடியானும் மற்றையடிக்கு ஆதியாகத்
தொடுப்பது அந்தாதித் தொடை (பக்.45)
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுச்சேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர தென்ப
பன்னருக் சிறப்பின் விண்மிசை உலகே
ஓர் அடிமுழுதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது இரட்டைத் தொடை (பக்.45)
ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிற் சீறெரி யொக்குமே யொக்கும் (பக்.49)
மேற்சொல்லப்பட்ட மோனை முதலாகிய தொடைகள் எதுவுமில்லாது தொடுப்பது செந்தொடை (பக்.46)
பாவுக்குரிய அடியும் ஓசையும்
பா வகைகள் (பக்.55)
வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா
வெண்டாழிசை ஆசிரியத் தாழிசை கலித்தாழிசை வஞ்சித்தாழிசை
வெண்டுறை ஆசிரியத்துறை கலித்துறை வஞ்சித்துறை
வெளிவிருத்தம் ஆசிரியவிருத்தம் கலிவிருத்தம் வஞ்சிவிருத்தம்
மருட்பா
அடிகள் (பக்.55)
வெண்பா...............நாற்சீரடி (பக்.55)
ஆசிரியப்பா.........நாற்சீரடி (பக்.55)
கலிப்பா..................நாற்சீரடி (பக்.55)
வஞ்சிப்பா............இருசீரடி (அ) முச்சீரடி (பக்.55)
வெண்பாவின் ஈற்றடி............................................முச்சீராக வரும் (பக்.55)
நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயல் அடி....முச்சீராக வரும் (பக்.55)
கலிவெண்பாவின் ஈற்றடி..................................முச்சீராக வரும் (பக்.55)
இணைக்குறள் ஆசிரியப்பாவின்
இடையடிகள் இரண்டும் பலவும்.........................குறளடி (அ) சிந்தடி (பக்.56).
கலிப்பாவின் ஒருசார் அம்போதரங்க
உறுப்பு...............................................................................இருசீரடி (அ) முச்சீரடி (பக்.56)
அராக உறுப்புகள்
.............................................அளவடி (அ) மிக்கு வரும் (ப.56)
ஓசை (பக்.56)
வெண்பா
............................செப்பலோசை
ஆசிரியப்பா.........................அகவாலோசை
கலிப்பா..................................துள்ளலோசை
வஞ்சிப்பா.............................தூங்கலோசை
செப்பலோசை (பக்.57)
வெண்சீர் வெண்டளையான் வரும் யாப்பு = ஏந்திசைச் செப்பல் (ப.57)
இயற்சீர் வெண்டளையான் வரும் யாப்பு.....= தூங்கிசைச் செப்பல் (ப.57)
இரண்டும் கலந்து வரும் யாப்பு........................= ஒழுகிசைச் செப்பல் (ப.57)
அகவலோசை (பக்.58)
நேரொன்று ஆசிரியத் தளையான் வரும் யாப்பு.... = ஏந்திசை அகவல்.(ப.58)
நிரையொன்று ஆசிரியத் தளையான் வரும் யாப்பு= தூங்கிசை அகவல்.(ப.58)
இரண்டும் கலந்து வரும் யாப்பு.........................................=
ஒழுகிசை அகவல் (ப.59)
துள்ளலோசை
கலித்தளையான் வரும் யாப்பு = ஏந்திசைத் துள்ளல்.(பக்.59)
வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வருதல்= அகவல் துள்ளல்(59)
பல தளையும் விரவி வந்தால் = பிரிந்திசைத்
துள்ளல் (பக்.60)
தூங்கலோசை
ஒன்றிய வஞ்சித்தளையான் வரும் யாப்பு = ஏந்திசைத் தூங்கல்(பக்.60)
ஒன்றாத வஞ்சித்தளையான் வரும் யாப்பு = அகவல் தூங்கல் (ப.61)
பல தளையும் விரவி வந்தால் = பிரிந்திசைத்
தூங்கல் (பக்.61)
பா வகைகள் (ப.64)
வெண்பா இனம்
குறள் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
நேரிசைச் சிந்தியல் வெண்பா
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
நேரிசை ஆசிரியப்பா
இணைக்குறள் ஆசிரியப் பா
நிலைமண்டில ஆசிரியப் பா
அடிமறி மண்டில ஆசிரியப் பா
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
கலிவெண்பா
வெண்கலிப்பா
தரவு கொச்சகக் கலிப்பா@
தரவிணைக் கொச்சகக் கலிப்பா
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
@ துள்ளலோசையில் சிறிதும் வழுவாது நாற்சீர்
நாலடியான் வருவது தரவுக் கொச்சகக் கலிப்பா.(பக்.40)
# துள்ளலோசையில் சிறிது வழுவி நாற்சீர்
நாலடியான் வருவது கலிவிருத்தம்,(பக்.40)
குறளடி வஞ்சிப்பா
சிந்தடி வஞ்சிப்பா
புறநிலை வாழ்த்து மருட்பா
கைக்கிளை மருட்பா
வாயுறை வாழ்த்து மருட்பா
செவியறிவுரூஉ மருட்பா
வெண்பா இலக்கணம் (பக்.64)
செப்பலோசை உடைத்தாய், ஈற்றடி முச்சீராய், ஏனைய அடி நாற்சீராய் வெண்சீரும்
இயற்சீரும் வந்து வெண்டளை தட்டு,
வேற்றுத் தளை விரவாது காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டால் இறும்.
குறள் வெண்பா (பக்.65)
உரு,வுகண் டெள்,ளா,மை வேண்,டும் உருள்,பெருந்,தேர்க்
நிரை,நிரை நேர்,நேர்,நேர் நேர் நேர் நிரை,நிரை,நேர்
கருவிளம் தேமாங்காய் தேமா கருவிளங்காய்
இயற்சீர் வெண்சீர் இயற்சீர் வெண்சீர்
கச்,சா,ணி யன்,னார் உடைத்,து
நேர்,நேர்,நேர் நேர்,நேர் நிரை,நேர்
தேமாங்காய் தேமா புளிமா
வெண்சீர் இயற்சீர் [பிறப்பு]
இஃது இரண்டடியான், ஒழுகிசைச் செப்பலோசை (இரு தளையும் கலந்து வரல்) உடைத்தாய், இரு விகற்பத்தால் வந்த குறள் வெண்பா ! (பக்.65)
நேரிசை வெண்பா (பக்.65)
தட,மண்,டு
தா,மரை,யின் றா,தா டல,வன்
நிரை,நேர்,நேர் நேர்,நிரை,நேர் நேர்,நேர் நிரை,நேர்
புளிமாங்காய் கூவிளங்காய் தேமா புளிமா
வெண்சீர் வெண்சீர் இயற்சீர்
இட,மண்,டிச் செல்,வத,னைக் கண்,டு – பெடை,ஞெண்,டு
பூ,ழிக் கத,வடைக்,கும் புத்,தூ,ரே பொய்,கடிந்
தூ,ழி நடா,யினா னூர்
இது இரண்டு குறள் வெண்பாவாய், நடுவு முதல் தொடைக்கு (மோனைக்கு.பக்.43) கேற்ற தனிச்சொல்லான், அடிநிரம்பி, செப்பலோசை வழுவாது இரண்டு விகற்பத்தான்
வந்த இருகுறள் நேரிசை வெண்பா.(பக்.65) நேரிசை வெண்பா ஒரு விகற்பத்தான் அல்லது இருவிகற்பத்தான் மட்டுமே வரும். மூன்று விகற்பத்தான் வந்தால் அது இன்னிசை வெண்பா ஆகிவிடும்.(பக்.69)
இன்னிசை வெண்பா (பக்.68)
ஒருவிகற்பத்தானும், பலவிகற்பத்தானும் செப்பலோசை வழுவாது வந்து நான்கடியாய்
தனிச் சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா ஆகும். (பக்.68)
இரண்டாமடியின் இறுதி தனிச் சொல் பெற்று மூன்று விகற்பத்தான் வருவனவும், (02). மூன்றாமடியின் இறுதி தனிச் சொல்
பெற்று இரண்டு விகற்பத்தான் வருவனவும், (03).
பலவிகற்பாகி அடிதோறும் ஒரூஉத் தொடை (முதல் + நான்காம் சீர்) பெற்று வருவனவும், பிறவாற்றானும், நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு நான்கடியாய் வருவனவும் இன்னிசை வெண்பா எனப்படும் (பக்.69)
சிந்தியல் வெண்பா (பக்.73)
நேரிசை வெண்பாவே போல் இரண்டாம் அடியின்னிறுதியில் தனிச் சொல் பெற்று இரு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் மூன்றடியான் வருவன
நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். இன்னிசை வெண்பாவே போல் தனிச் சொல் இன்றி ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும்
மூன்றடியான் வருவன இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும் (பக்.73)
குறள் வெண்செந்துறை (பக்.74)
அந்தமில் பாதம் அளவிரண்டொத்து முடியின் வெள்ளைச் செந்துறை ஆகும். அதாவது இரண்டடியாய் தம்முள் அளவொத்து
வருவது வெண்செந்துறை அல்லது செந்துறை வெள்ளை எனப்படும். (பக்.74)
ஆர்,கலி யுல,கத்,து மக்,கட் கெல்,லாம்
நேர்,நிரை நிரை,நேர்,நேர் நேர்,நேர் நேர்,நேர்
கூவிளம் புளிமாங்காய் தேமா தேமா
நிரையொன் காய்முன்நேர் நேரொன்
ஓ,தலிற் சிறந்,தன் றொழுக்,க முடை,மை
நேர்,நிரை நிரை,நேர் நிரை,நேர் நிரை,நேர்
கூவிளம் புளிமா புளிமா புளிமா
நிரையொன் இயற்சீர் இயற்சீர்
[ இதில் ஆசிரியத்
தளையும் இயற்சீர் வெண்டளையும் கலந்து வந்துள்ளன.]
பொதுக் குறிப்புகள்
(01) வெண்பா: இது நான்கு சீர்கள் (சீர் வேறு, அசை வேறு) கொண்ட அடிகளால் இயன்று
வரும். சிற்றளவாக இரண்டடியும், பேரளவாக பல அடிகளும் இருக்கும். ஈற்றடி முச்சீராக வரும். இதில் வெண்சீர் வெண்டளையும், இயற்சீர் வெண்டளையும் மட்டும் வரும். அயற்றளையும், அடியும், சீரும் விரவி வராது. (பக்.129. யாப்பு)
(02) நேரிசை வெண்பாவின் சீர்களில் குற்றியலிகரம் வந்தால், அதை அலகிட வேண்டியதில்லை. (பக்.132. யாப்பு.
(03) ஆசிரியப்பா: இது நான்கு சீர்கள் (சீர் வேறு, அசை வேறு) கொண்ட அடிகளால் இயன்று வரும். ஈற்றயலடி நேரிசை ஆசிரியப்பாவில் முச்சீராக
வரும். ஆசிரியத் தளை பயின்று வரும். அயற்றளைகளும் அடியும் விரவி வரும். (பக்.129. யாப்பு)
(04) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர்களாகிய கருவிளங்கனி, கூவிளங்கனி இரண்டும் ஆசிரியப் பாவினுள்
வாரா. (பக்.141. யாப்பு)
(05) வஞ்சி உரிச்சீர்கள் தவிர்த்த பிற சீர்கள் அனைத்தும் ஆசிரியத்துள் வந்து
மயங்கும். (பக்.141. யாப்பு)
(06) ஆசிரியப்பாவில் தன்சீரும், வெண்சீரும்,நேர்நடுவாகிய வஞ்சி உரிச் சீரும்
வரும். இதனால், வெண்டளையும், ஆசிரியத்தளையும், கலித்தளையும், வஞ்சித் தளையும் மயங்கிவரும் (பக்.142. யாப்பு)
(07) ஆசிரியப் பாவில் மிக அரிதாக ஐஞ்சீரடி வரும். (பக்.148.யாப்பு)
(08) எடுத்துக் காட்டு:-நேரிசை ஆசிரியப்பா;
நெடு,வரைச் சா,ரற் குறுங்,கோட்,டுப் பல,வின்
விண்,டுவார் தீஞ்,சுளை வீங்,குக,வுட் கடு,வன்
உண்,டு சிலம்,பே,றி யோங்,கிய இருங்,கழைப்
படி,கம் பயிற்,று மென்,ப
மடி,யாக் கொலை,வில் என்,னை,யர் மலை,யே !
(09) கலிப்பா: இது நான்கு சீர்கள் (சீர் வேறு, அசை வேறு) அடிகளால் இயன்று வரும். கலிவெண்பாவின் ஈற்றடி முச்சீராக வரும் (பக்.55) கலித்தளையால் பாடல்கள் இயன்று வரும். அயற்றளையும், அயலடியும் (குறளடி, சிந்தடி போன்று) விரவி வரும். அயற்பாவினாலும் இறும். (பக்.129. யாப்பு)
(10) நேர் ஈற்று இயற்சீர்களான தேமா, புளிமா இரண்டும் கலிப்பாவில் வாரா. (பக்.140.யாப்பு)
(11) நிரை நடுவாகிய வஞ்சி உரிச் சீர்களாகிய கருவிளங்கனி, கூவிளங்கனி இரண்டும் கலிப்பாவில்
வாரா. (பக்.140. யாப்பு)
(12) மேற்கண்ட தேமா, புளிமா, கருவிளங்கனி, கூவிளங்கனி தவிர்த்த ஏனைய சீர்கள் அனைத்தும் கலிப்பாவிலும், கலிப்பா இனத்திலும் மயங்கி வரும். (பக்.141. யாப்பு
(13) கலிப்பவினுள் வெண்பாவடியும், ஆசிரிய அடியும் புக்கு மயங்கப்பெறும். (ப.147.யாப்பு)
(14) கலிப்பாவில் மிக அரிதாக ஐஞ்சீரடி வரும் (பக்.148. யாப்பு)
(15) தரவுக் கொச்சகக் கலிப்பாவில் தேமா, புளிமா என்னும் நேரீற்று இயற்சீர்களும், கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய நிரை நடுவாகிய வஞ்சியுரிச்
சீரும் வராது. ஆனால், கருவிளம், கூவிளம் ஆகிய நிரையீற்று ஆசிரிய உரிச் சீரும், நேர் நடுவாகிய தேமாங்கனி, புளிமாங்கனி ஆகிய வஞ்சி உரிச் சீர்கள்
வரும், இதனால் இப்பாவில் வெண்டளையும், ஆசிரியத் தளையும், கலித் தளையும், வஞ்சித் தளையும் மயங்கி வந்துள்லன.
(16) வஞ்சிப்பா: இது இரு சீர்கள் (சீர் வேறு, அசை வேறு) உடைய அடியாலும், மூன்று சீர்கள் உடைய அடியாலும் வரும்.வஞ்சித் தலையான் இயன்று வரும். அயற்றளையும், அயலடியும் (அளவடி போன்று) விரவி வரும். அயற்பாவினால் இறும். (பக்.130. யாப்பு)
(17) தேமா, புளிமா தவிர்த்த பிற சீர்கள் வஞ்சிப்பாவில் மயங்கி வரும். (பக்.141. யாப்பு)
மண்,டிணிந்,த நில,னும்
நில,னேந்,திய விசும்,பும்
விசும்,புதை,வரு வளி,யும்
வளித்,தலை,இய தீ,யும்
தீ,முர,ணிய நீ,ரும்
(18) இக்குறளடி (இருசீர் அடி) வஞ்சிப் பாவில் வெண்சீரும், வஞ்சிச் சீரும், நேர் ஈற்று இயற்சீரும் வந்து, வெண்டளையும், வஞ்சித்தளையும், கலித்தளையும், ஆசிரியத் தளையும் மயங்கி வந்துள்ளன. (பக்.142. யாப்பு) (மயங்கி வந்துள்ளன என்றால் எல்லாத் தளைகளும்
தனித்தனிக் குழுவாக வராமல் ஒன்றோடொன்று கலந்து வந்துள்ளன என்று பொருள்.)
(19) இப்பாடலில் வஞ்சித்தளை 4-ம், கலித்தளை 1-ம், இயற்சீர் வெண்டளை 3-ம், (நேரொன்று) ஆசிரியத்தளை 1-ம் வந்துள்ளன.
புன்,காற் புணர்,மரு,தின்
போ,தரும்,பிய புனல்,தா,மரை
தேன்,தாழ் தீங்,கரும்,பின்
பூந்,தாட் புனற்,றா,மரை
வார்,காற் செங்,கழு,நீர்
(20) இக்குறளடி (இருசீர் அடி) வஞ்சிப் பாவில் வெண்சீரும், வஞ்சிச் சீரும், நேர் ஈற்று இயற்சீரும் வந்து, வெண்டளையும், வஞ்சித்தளையும், கலித்தளையும், ஆசிரியத் தளையும் மயங்கி வந்துள்ளன. (பக்.142. யாப்பு)
(21) இப்பாடலில் 3 வஞ்சித் தளைகளும், 4 வெண்டளைகளும், 2 ஆசிரியத் தளைகளும், கலந்து வந்துள்ளன.
(22) இருசீரடி வஞ்சிப்பாவினுள் குற்றுகரம் வந்து அதனால் சீர்கள் எண்ணிக்கை
பெருகுமேல், குற்றுகரத்தை அலகிட வேண்டியதில்லை (பக்.133. யாப்பு)
(23) வஞ்சிப் பாவினுள் ஆசிரிய அடி பயின்று வரும். கலியடியும், வெள்ளடியும் அருகியன்றி வாரா. பட்டினப் பாலை என்னும் வஞ்சி நெடும்பாட்டில் இவ்வாறு வந்துள்ளது. (பக்.146. யாப்பு)
(24) சிறப்புக் குறிப்பு: எல்லாத் தளையும், எல்லாப் பாவினுள்ளும், பாவினத்துள்ளும் வந்து மயங்கப் பெறும் – வெண்பா மற்றும் அதன் பாவினம்
தவிர்த்து (பக்.141. யாப்பு)
(25) செய்யுளில் ஒற்ரெழுத்துகள் அளவு பெறா; ஈரொறுக்கள் வரினும் அவ்வாறேயாம் (பக்.434. நன்னூல்)
(26) சீரும் தளையும் சிதைய வரும் இடங்களில் குற்றியலிகரம், குற்றியலுகரம், அளபெடை ஆகியவை அளவிடப் பெறா. (பக்.434. நன்னூல்)
(27) சீரும் தளையும் சிதைய வரும் இடங்களில் ஐகாரம் குற்றெழுத்தாக்க் கொண்டு
அளவிடப்பெறும் (பக்.434. நன்னூல்)
(28) ஆய்தம் அளபெடுத்து வரின் நேரசையாக அளவிடப் பெறும். (பக்.434. நன்னூல்) (பக்.434. நன்னூல்)
(29) உயிரளபெடை “நேர் நேர்” என்று கணக்கிடப் பெறும். (ஏஎர்). குறிலோடு இணைந்த உயிரளபெடையாயின் “நிரை நேர்” என்று கணக்கிடப் பெறும் (அழாஅல்) (பக்.435. நன்னூல்)
(30) கலிப்பாவிலும், அகவற்பாவிலும் ஐஞ்சீரடி அருகி வருவதும் உண்டு. (பக்.435.நன்னூல்)
(31) வருக்க எழுத்து, நெடிலெழுத்து இன எழுத்து ஆகியவையும் மோனை, எதுகைகட்கு கொள்ளப் பெறும். (பக்.435. நன்னூல்)
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
---------------------------------------------------------------------------------------------------------