name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 09/05/19

வியாழன், செப்டம்பர் 05, 2019

பெயர் விளக்கம் (13) சொர்ணம் - பெயரின் பொருள் என்ன ?

ஏழை வீட்டுப்  பெண்ணுக்குப் பெயர் சொர்ணம் !



தமிழில் பொன் எனப்படும் தங்கத்தைக் குறிக்க பல சொற்கள் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் சில தமிழ்ச்சொல்லாகவும் பல சமஸ்கிருதச் சொல்லாகவும் உள்ளன. அவை வருமாறு :- மாசை, மாசி, பீதகம், பீதம், மாடை, மாடு, வேங்கை, ஆசை, சுவணம், சுவர்ணம்,  காரம், அருத்தம், காஞ்சனம், காணம், தேசிகம், கனகம், கைத்து, செந்தாது, பொலம், அத்தம், சாமி, வித்தம், தனம், உடல், பண்டம், இரணியம், நிதி, வெறுக்கை, ஈகை, கல்யாணம், ஏமம், பொருள், உரை, சந்திரம், சாம்பூதனம், பூரி, ஈழம், திரவியம், சாதரூபம், செங்கொல், நிதானம், மாழை, அரி, தபனியம், பணியம், ஆடகம் ஆகியவை. சமஸ்கிருதச் சொல்லின் அடிப்படையில் பல பெயர்கள் மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றைப் பார்ப்போமா !

------------------------------------------------------------------------------------------------------

          ·         மாசி..................................= தங்கம் 
          ·         பீதாம்பரம்......................= பொன்னிழை
          ·         மாடையன்....................= தங்க ணி
          ·         வேங்கையன்...............= தங்கசாமி
          ·         சுவர்ணம்.......................= பொற்செல்வி
          ·         சுவர்ணலதா.................= பொற்கொடி
          ·         சொர்ணவல்லி............= பொற்கொடி
          ·         சொர்ணம்......................= தங்கம்
          ·         காஞ்சனா......................= பொன்மகள்
          ·         காஞ்சனமாலா............= பொன்மாலை
          ·         தேசிகன்.........................= பொற்செல்வன்
          ·         கனகம் (பொன்)..........= பொன்னி
          ·         கனகதாரா......................= பொன்மாரி
          ·         கனகாம்புஜம்................= பொற்றாமரை
          ·         கனகராஜன்....................= பொன்னரசு
          ·         கனகசபை......................= பொன்னம்பலம்
          ·         கனகசுந்தரம்.................= பொன்னழகு
          ·         கனகவேல்.....................= தங்கவேல்
          ·         கனகமணி......................= பொன்மணி
          ·         கனகவல்லி...................= பொற்கொடி
          ·         சாமி...................................= பொன்னன்
          ·         தனம்................................= தங்கம்
          ·         தனலட்சுமி....................= பொன்மகள்
          ·         தனபாக்கியம்................= பொற்செல்வி
          ·         தனவேந்தன்.................= பொன்னரசு
          ·         தனராஜ்...........................= பொன்னரசு
          ·         தனசாமி..........................= பொற்செல்வன்
          ·         இரணியன்.....................= பொன்னன்
          ·         கல்யாணம்....................= தங்கமாங்கனி
          ·         கல்யாணசுந்தரம்........= பொன்னழகு
          ·         கல்யாணி.................... = பொன்மகள்
          ·         ஹேமச்சந்திரன்..........= பொன்னிலவன்
          ·         ஹேமலதா.................. = பொற்கொடி
          ·         ஹேமா............................= பொன்னி
          ·         திரவியம்.........................= பொன்னன்
          ·         திரவியராஜு.................= பொன்னரசு
          ·         திரவியசாமி..................= பொன்னையன்
          ·         அபரஞ்சிதா....................= பொற்பாவை
          ·         ருக்குமணி.....................= பொன்மணி

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

{18-12-2018}
-------------------------------------------------------------------------------------------------------
    
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------


       


பெயர் விளக்கம் (12) காயத்திரி - பெயரின் பொருள் என்ன ?

கல்விக் கடவுளை அறிந்தவர்கள் காயத்திரியை அறிவாரா ?

கல்விக் கடவுள் சரஸ்வதி தேவி என்பார்கள். வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்து, கையில் வீணையுடன் காட்சி தரும் சரஸ்வதி, பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள். கலைமகள், பனுவலாட்டி, காயத்திரி, ஞானமூர்த்தி,  பிராமி, வெள்ளைமெய்யாள், வெண்சலசமுற்றாள், பாரதி, இசைமடந்தை, அயன் மனைவி, வாக்காள், வாணி எனப் பலவாறு விளிக்கப்படுவது வழக்கம். தமிழிலும், சமஸ்கிருத பொழியிலும் அமைந்துள்ள அப்பெயர்களைப் பார்ப்போமா !

--------------------------------------------------------------------------------------------------

  
·            காயத்திரி............................ = கலைமகள்
·            காயத்திரிதேவி..................= நாமகள்
·            சங்கீதா.................................= இசைமடந்தை
·            சரசு.........................................= மலர்மகள்
·            சரஸ்வதி................................= பொய்கைப்பூவை
·            சாரதா....................................= கலைவாணி
·            சாரதாதேவி........................= நாவரசி
·            ஞானமூர்த்தி.......................= அறிவழகி
·            பாரதி.....................................= கலைமகள்
·            வாகீஸ்வரி.......................... = நாமகள்
·            வாணி....................................= இசைவாணி
·            வாணிஸ்ரீ..............................= இசையரசி
·            வித்யா...................................= கலைமகள்
·            வித்யாவதி...........................= கலைச்செல்வி
·            வெண்சலசமுற்றாள்......= தாமரைச்செல்வி
·            ஸ்ரீவித்யா..............................= கலையரசி

-------------------------------------------------------------------------------------------------

04. சரசு = பொய்கை, நீரோடை, குளம்  11. வாணி = வாழ் + ந் + = வாழ்ணி = வாணி =( வாழ்பவள்)  13. (வித்தை=கலை) 15. சலசம் = தாமரை.

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{17-12-2018}
------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------




பெயர் விளக்கம் (11) ஜீவக்குமார் - பெயரின் பொருள் தெரியுமா ?

   பொருள் தெரியாத பெயரோ ஜீவக்குமார் ?

                   

குமார் அல்லது குமரன் என்பதற்கு மகன், முருகன், அழகன், விடலை, இளைஞன், ஆண்மகன், இளையோன், வயிரவன் எனப் பல பொருள்கள் உள்ளன.. தமிழகத்தில் மக்களிடையே குமார் என்னும் சொல்லின் அடிப்படையில் பல பெயர்கள் புனையப்பட்டு, குழந்தைகளுக்குச் சூட்டப்படுகின்றன. அவற்றுள் சில தமிழ்ப் பெயர்களாகவும், பல வடமொழிப் பெயர்களாகவும் உள்ளன. இவ்வாறு வழக்கிலுள்ள பெயர்களையும், அவற்றுக்கு இணையான தூய தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !

-------------------------------------------------------------------------------------------------

அட்சயகுமார் (அட்சயன்=இறைவன்).....= இறையழகன்
அனந்தகுமார் (அனந்தம்=பொன்).........= பொற்செல்வன்
ஆனந்தகுமார் (ஆனந்தம்=இன்பம்)......= இனியவன்
 இந்திரகுமார் (இந்திரன்=வானவர் கோன்)....= வானவர்செல்வன்
 இராம்குமார் (இராமம்=அழகு)..............= எழிலரசு
 இராஜ்குமார்  (ராஜ்=அரசன்)..................= இளவரசன்
 கமலகுமார் (கமலம்=தாமரை)...............= தாமரைச்செல்வன்
 குமார்  (குமார்=அழகன்)...............= எழிலன்
 சந்திரகுமார்  (சந்திரன்=நிலவு).............= நிலவழகன்
 சிவகுமார் (சிவன்=சிவந்தவன்)..............= செவ்வெழிலன்.
 சூரியகுமார்   (சூரியன்=பரிதி)...............= பரிதிச்செல்வன்
 சொர்ணகுமார் (சொர்ணம்=பொன்).......= பொற்செல்வன்
 நரேஷ்குமார் (நரேஷ்=அரசன்)...............= இளவரசன்
 பங்கஜகுமார் (பங்கஜம்=தாமரை..........= தாமரைச்செல்வன்
 பத்மகுமார் (பத்மம்=தாமரை)................= தாமரைச்செல்வன்
 பரணிகுமார் (பரணி=கூத்து)...........................= கூத்தரசன்   
 பாலகுமார்  (பாலன்=இளைஞன்)......= இளவழகன்
 மணிக்குமார் (குமார்=எழிலன்).............= மணியெழிலன்
 முத்துக்குமார் (குமார்=செல்வன்)..........= முத்துச்செல்வன்
 வீரகுமார் (வீரம்=அடல்)...............= அடலரசு
 ஜீவகுமார் (ஜீவன்= வைடூரியம்)..............= மணியெழிலன்


-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{16-12-2018}
--------------------------------------------------------------------------------------------------
     
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------