name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் விளக்கம் (05) எல்லப்பன் - பெயரின் பொருள் என்ன ?

வியாழன், செப்டம்பர் 05, 2019

பெயர் விளக்கம் (05) எல்லப்பன் - பெயரின் பொருள் என்ன ?

உங்கள் பெயர் ”எல்லப்பன்” என்பதா ? இந்தப் பெயரின் பொருள் தெரியுமா ?



தமிழில் சூரியன் என்பதைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன. கனலி, பரிதி, கதிரவன், சுடர், செங்கதிர், அனலி, பகலோன், ஞாயிறு, அருணன், ஆதவன்  என்பவை அவற்றுள் சில. சமஸ்கிருதத்தில் சூரியனைக் குறிக்க பாஸ்கரன், ஆதித்தன், சவிதா, மார்த்தாண்டன், பானு, தினகரன், திவாகரன், ஜோதி, எனப் பலவாறு சொற்கள் உள்ளன. சமஸ்கிருதச் சொற்கள் மற்றும் பண்டைத் தமிழ்ச் சொற்களின்  அடிப்படையில் பல பெயர்கள் மனிதர்களிடையே வழக்கத்தில் உள்ளன. அத்தகைய பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !

எல், எல்லி என்பவை இலக்கியங்களில் காணப்படும்  சூரியனைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் ! எல்லி + அப்பன் = எல்லப்பன். சூரியதேவன் என்று பொருள் !


-------------------------------------------------------------------------------------------------
 •       ஆதித்தன் (சூரியன்)..........................= வைகறைச் செல்வன
 •       இரகு (சூரியன்).....................................= பகலவன்
 •       இரவி (சூரியன்)................................... = கதிரவன்
 •       இரவிச்சந்திரன் (சூரியசந்திரர்)....= கதிர்மதி
 •       உதயமார்த்தாண்டன் (சூரியன்)...= இளங்கதிர
 •       உதயன் (சூரியன்)................................= வைகறைச் செல்வன்
 •       உதயபாஸ்கர் (சூரியன்)...................= இளங்கதிர்
 •       எல்லப்பன் (சூரியன்)......................... = பகலவன்
 •       எல்லம்மாள் (சூரியமகள்).................செங்கதிர்ச்செல்வ
 •       கம்சன் (சூரியன்)..................................= பரிதி
 •       சவிதா (சூரியன்)...................................= செங்கதிர்
 •       சுசீந்திரன் (சூரியன்)...........................= கதிரவன்
 •       சூரியமூர்த்தி (சூரியன்).....................= விண்மணி
 •       சூர்யபிரகாசம் (சூரியன்)..................= கதிரொள
 •       சூர்யா (சூரியன்)....................................= கதிரவன
 •       திவாகர் (சூரியன்)................................= செங்கதிர்
 •       தினகரன்  (சூரியன்)............................= பகலவன்
 •       பானுசந்தர் (சூரிய சந்திரர்)..............= கதிர்மதி
 •       பானுபிரியா (சூரியப் பிரியா )........= பரிதிச் செல்வி
 •       பானுமதி  (சூரிய சந்திரர்).................= மணிமதி
 •       பானுரேகா   (சூரியக்கதிர்).............. = செங்கதிர
  •       பாஸ்கரன் ( சூரியன் )....................... = கதிரவன்
  •       பிரபாகரன்..............................................=  பரிதி 
  •       மார்த்தாண்டன் ( சூரியன் )............ = சுடர்மணி
  •       மித்திரன் (சூரியன்).............................. = ஆதவன் 
   •       ஜோதி  (சூரியன்) .................................= சுடரொளி
   •       ஜோதிமணி  (சூரியன்)..................... = சுடர்மணி
   •       ஜோதிலட்சுமி (சூரிய லட்சுமி)...... = சுடர்மதி

--------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
 {28-11-2018}    

-------------------------------------------------------------------------------------------
    
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .