name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் விளக்கம் (12) காயத்திரி - பெயரின் பொருள் என்ன ?

வியாழன், செப்டம்பர் 05, 2019

பெயர் விளக்கம் (12) காயத்திரி - பெயரின் பொருள் என்ன ?

கல்விக் கடவுளை அறிந்தவர்கள் காயத்திரியை அறிவாரா ?

கல்விக் கடவுள் சரஸ்வதி தேவி என்பார்கள். வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்து, கையில் வீணையுடன் காட்சி தரும் சரஸ்வதி, பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள். கலைமகள், பனுவலாட்டி, காயத்திரி, ஞானமூர்த்தி,  பிராமி, வெள்ளைமெய்யாள், வெண்சலசமுற்றாள், பாரதி, இசைமடந்தை, அயன் மனைவி, வாக்காள், வாணி எனப் பலவாறு விளிக்கப்படுவது வழக்கம். தமிழிலும், சமஸ்கிருத பொழியிலும் அமைந்துள்ள அப்பெயர்களைப் பார்ப்போமா !

--------------------------------------------------------------------------------------------------

  
·            காயத்திரி............................ = கலைமகள்
·            காயத்திரிதேவி..................= நாமகள்
·            சங்கீதா.................................= இசைமடந்தை
·            சரசு.........................................= மலர்மகள்
·            சரஸ்வதி................................= பொய்கைப்பூவை
·            சாரதா....................................= கலைவாணி
·            சாரதாதேவி........................= நாவரசி
·            ஞானமூர்த்தி.......................= அறிவழகி
·            பாரதி.....................................= கலைமகள்
·            வாகீஸ்வரி.......................... = நாமகள்
·            வாணி....................................= இசைவாணி
·            வாணிஸ்ரீ..............................= இசையரசி
·            வித்யா...................................= கலைமகள்
·            வித்யாவதி...........................= கலைச்செல்வி
·            வெண்சலசமுற்றாள்......= தாமரைச்செல்வி
·            ஸ்ரீவித்யா..............................= கலையரசி

-------------------------------------------------------------------------------------------------

04. சரசு = பொய்கை, நீரோடை, குளம்  11. வாணி = வாழ் + ந் + = வாழ்ணி = வாணி =( வாழ்பவள்)  13. (வித்தை=கலை) 15. சலசம் = தாமரை.

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{17-12-2018}
------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .