name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (12) கோளியலும் வடமொழித் திணிப்பும் !

வியாழன், செப்டம்பர் 05, 2019

தமிழ் (12) கோளியலும் வடமொழித் திணிப்பும் !


தமிழ்நாட்டில் வளமாக வளரும் வடமொழிப் பயிர் !


சோதிடவியல் எனச் சொல்லப்படும் கோளியல் தொடர்பாகப் பயன்பாட்டில் உள்ள சொற்களைப் பாருங்கள் !

ராசிகள்;-

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்ஹம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஷ், மகரம், கும்பம், மீனம்,

யுகங்கள்:-

கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்.

வருஷங்கள்:-

பாரத  வருஷம், கிம்புருஷ வருஷம், ஹரி வருஷம், இளாவ்ருத வருஷம், ரம்மியத வருஷம், ஐரணவத வருஷம், குரு வருஷம்.

வருஷப் பெயர்கள்:-

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோற்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, ஸர்வசித்து, ஸர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விஹாரி, ஸார்வரி, பிலவ, ஸுபகிருது, ஸோபகிருது, குரோதி, விஸ்வாவஸு, பராபவ, பிலவங்க, கீலக, சௌம்ய, ஸாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீஸ, ஆனந்த, ராக்ஷஸ, நள, பிங்கள, காயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, குரோதன, அக்ஷய.

நட்சத்திரங்கள்:-

அசுபதி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷபம், திருவாதிரை, புனர்வசு, பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

நட்சத்திர வகைகள்:-

சவ்ய நட்சத்திரம், அபசவ்ய நட்சத்திரம், தாமஸ நட்சத்திரம், ராஜஸ நட்சத்திரம், சாத்வீக நட்சத்திரம்


லக்னங்கள்:-

மேஷ லக்னம், ரிஷப லக்னம், மிதுன லக்னம், கடக லக்னம், சிம்ஹ லக்னம், கன்யா லக்னம், துலா லக்னம், விருச்சிக லக்னம், தனுர் லக்னம், மகர லக்னம், கும்ப லக்னம், மீன லக்னம்.

         அயணங்கள்:-

உத்தராயணம், தக்ஷிணாயணம்

ருதுக்கள்:-

வஸந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷ ருது, சரத் ருது, ஹேமந்த ருது, சிசிர ருது

கிரஹங்கள்:-

சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது

காரஹத்துவம்:-

ஆத்மகாரகன், பித்ரு காரகன், மாத்ரு காரகன், ப்ராத்ரு காரகன், மாதுல காரகன், வித்யா காரகன், புத்ரகாரகன், களத்ரகாரகன், ஆயுள்காரகன், பிதா மஹகாரகன், மாதா மஹகாரகன்

திதிகள்:-

பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, அமாவாஸ்யை () பூர்ணிமை

யோஹங்கள்:-

விஷ்கம்பம், பிரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகதம், ஹர்ஷணம், வஜ்ரம், ஸித்தி, வியதீபாதம், வரியான், பரீகம், சிவம், ஸித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்மம், ஜந்திரம், வைதிருதி.

கரணம்:-

பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம்.

வேளைகள்:-

சாத்வீகம், தாமஸம், ராஜஸம்.

குளிகாதியர்:-

காலன், அர்த்தப்ரகரன், எமகண்டன், துன்மதனன், தூமகேது, இந்திரதனுசு, குளிகன், பரிவேடன், விதிபாதன்.

மஹாதசைகள்:-

ஸூர்ய மஹாதசை, சந்திர மஹாதசை, அங்காரக மஹாதசை, புத மஹாதசை, குரு மஹாதசை, சுக்கிர மஹாதசை, சனி மஹாதசை, ராகு மஹாதசை, கேது மஹாதசை

ஜாதக யோகங்கள்:-

துருதுரா யோகம், அநபா யோகம், சுநபா  யோகம், கேமத்துரும யோகம், கஜகேசரி யோகம், சந்திரமங்கள யோகம், அதி யோகம், சகட யோகம், வேசி யோகம், வாசி யோகம், சுப உபயசாரி யோகம், பத்ர யோகம், ருசக யோகம், சச யோகம், ஹம்ஸ யோகம், மாலவ்ய யோகம், அஷ்டலக்ஷ்மி யோகம், தர்மகர்மாதிபதி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், வசுமதி யோகம், குரு சண்டாள யோகம், காலசர்ப்ப யோகம், விபரீத ராஜ யோகம், நீசபங்க ராஜ யோகம்.

விவாஹப் பொருத்தங்கள்:-

நக்ஷத்திரம், கணம், மாஹேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசியாதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை, நாடி.

தோஷங்கள்:-

காலசர்ப்பதோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், அங்காரக தோஷம், ஷஷ்டாஷ்டக தோஷம்,

பிற சொற்கள்:-

நவகிரஹங்கள், கிரஹ தான்யம், கிரஹ புஷ்பம், கிரஹ தத்துவம், கிரஹ ஜாதி, கிரஹ நிறம், கிரஹ வடிவம், கிரஹ அவயவங்கள் கிரஹ உலோகங்கள், கிரஹ பாஷைகள், கிரஹ ரத்னங்கள், கிரஹ வஸ்திரங்கள், கிரஹ தீப தூபங்கள், கிரஹ வாகனங்கள், கிரஹ ஸமித்துகள், கிரஹ சுவைகள், கிரஹங்களின் பஞ்ச பூதங்கள், கிரஹங்களின் நாடி, கிரஹ திக்குகள், கிரஹ அதிதேவதை, கிரஹ சஞ்சாரம் கிரஹ வக்ரம், கிரஹ அதிசாரம், கிரஹ ஸ்தம்பனம், கிரஹ ஆட்சி, கிரஹ உச்சம், கிரஹ நீச்சம், கிரஹ மூலத்திரிகோணம், கிரஹ மார்க்கம், மாந்தி, ஸ்திரீ நக்ஷத்திரம், புருஷ நக்ஷத்திரம், அலி நக்ஷத்திரம், கிரஹ மித்ர வீடு, கிரஹ சத்துரு வீடு, மித்ர ராசி, சத்துரு ராசி, ஸர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி, ஸிரோதயம், பிருஷ்டோதயம், மஹாதசை, புக்தி, அந்தரம், தசாநாதன், புக்திநாதன், அந்தரநாதன், சேஷம், லக்ன சேஷம், ஜனன நாழிகை, அட்சாம்சம், ரேகாம்சம், ஜன்ம லக்னம், நவாம்ஸம், ஆதியந்தம், பரமநாழிகை, அகஸ், லக்னாதிபதி, ராசியாதிபதி, பாவாதிபதி, கசரம், த்ரிஜேஷ்டை, கிரஹப்ரீதி,, தியாஜ்யம், ஹோரை, வர்கோத்தமம், அஸ்தங்கதம், பரிவர்த்தனம், பாதகாதிபதி, கிரகயுத்தம், திவிர்த்வாதசம், ஆத்மகாரகன், திரிம்சாம்சம், அரிஷ்டம், யசஸ்வி,

மனிதர்களுக்கு வாழ்வில் இன்னல் ஏதேனும் வந்தால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள அல்லது தப்பிக்க வழி இருக்கிறதா எனத் தேடுவது இயல்பு. இந்தப் பய உணர்வைத் தூண்டி விட்டு வடமொழியை நம்மீதுத் திணிக்க உருவாக்கப்பட்ட சதித் திட்டமே கோயில் வழிபாடும், சோதிடமும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு காணப்படாத பிரதோஷ வழிபாடு இப்போது கோயில்களில் கொடிகட்டிப் பறக்கிறது. அஷ்டமி பூசை அமர்க்களப்படுகிறது.  கோயில்களில் தினசரி கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், நிர்வாகம் திணறுகிறது. சோதிடம் சொல்வோர் வீடுகளில் கூட்டம் அலைமோதுகிறது. இவையெல்லாம் ஆன்மிக வளர்ச்சி அல்ல. சமஸ்கிருதத் திணிப்புக்கான வாயில்கள். தமிழ் படித்த மேதாவிகளே இந்தக் கூட்டத்தை வழி நடத்திச் செல்கிறார்கள்.

உறங்கு தமிழா ! உறங்கு ! உன் தாய்மொழி எப்படிப் போனால் உனக்கென்ன ? உன் இனம் வேற்றார் காலடியில் மிதிபட்டு நசுங்கிச் செத்தால் தான் உனக்கென்ன ? உனக்குத் தேவை மூன்று வேளை சோறு, பணம், பட்டம், பதவி, ஆட்சி, அதிகாரம், சொத்துக் குவிப்பு ! அவ்வளவு தான் ! நீ தான் சுரணையை இழந்து நீண்டகாலமாயிற்றே !

---------------------------------------------------------------------------------------------------

    ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{31-12-2018}
----------------------------------------------------------------------------------------------------


       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .