வஞ்சிப்பாவும் அதன் இனமும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சீர்கள்
(01)       ஈரசைச் சீர் நான்கும் = ஆசிரிய உரிச்சீர் (ப.22)
(02)       ஈரசைச் சீருக்கு இயற்சீர் என்றும் பெயர். அக்.23)
(03)       நேரசை இறுதியாகிய மூவசைச் சீர் (காய்ச்சீர்) நான்கும் = வெண்பா உரிச்சீர்! (ப.24)
(04)       நிரையசை இறுதியாகிய மூவசைச் சீர் (கனிச்சீர்) நான்கும் = வஞ்சி உரிச்சீர்
(ப.24)
(05)       ஈரசை  கூடியசீர்  இயற்சீர்   அவை
ஈரிரண்  டென்பர்  இயல்புணர்ந்தோரே !
மூவசைச் சீர் உரிச் சீர் இருநான்கினுள்
நேரிரு நான்கும்  வெள்ளை;  அல்லன,
பாவினுள்  வஞ்சியின்  பாற்பட்  டனவே !
நாலசைச்  சீர்பொதுச்  சீர்பதினாறே,
ஓரசைச்  சீருமஃ  தோரிரு  வகைத்தே ! (பக்.23. யாப்பு)
(06)       நாலசைச் சீர் 16-ம்............ = பொதுச்சீர் (ப.24)
(07)       ஓரசைச் சீர்  இரண்டும்
= அசைச்சீர் (ப.24)
(08)       நாலசைச் சீர் செய்யுளில் பொதுவாக வராது. ஆனால் அருகி வரும் (ப.25)
(09)       தண்பூ, நறும்பூ என்று முடியும் நாலசைச்  சீர்கள் எட்டும், அசை பிரிக்கையில் காய்ச் சீராகக் கொள்ளப்படும் (ப.25)
(10)       தண்ணிழல், நறுநிழல் என்று முடியும் நாலசைச் சீர்கள் எட்டும் அசை பிரிக்கையில்
கனிச் சீராகக் கொள்ளப்படும் (ப.25)
(11)       ஆசிரியப் பாவினுள்  குற்றுகரம் வந்துழி
அன்றி நாலசைச் சீர் வாரா (ப.26)
தளை (30)
(12) மாமுன் நேர் (நேர் முன் நேர்)..............= நேரொன்றாசிரியத் தளை
(13)       விளமுன் நிரை (நிரை முன் நிரை).....= நிரையொன்றாசிரியத் தளை
(14)       மாமுன் நிரை ( நேர் முன் நிரை).........= இயற்சீர் வெண்டளை
(15)       விளமுன் நேர் (நிரை முன் நேர்)..........= இயற்சீர் வெண்டளை
(16)       காய்முன் நேர்  (.....................................).......= வெண்சீர் வெண்டளை
(17)       காய்முன் நிரை (....................................)......=
கலித்தளை
(18)       கனிமுன் நிரை (.....................................)......=
ஒன்றிய வஞ்சித்தளி
(19)       கனிமுன் நேர்  (.....................................).......= ஒன்றாத வஞ்சித்தளை
வஞ்சிப்பாவும் அதன் இலக்கணமும் (பக்.121) (பக்.434.நன்னூல்)
(01)       வஞ்சிப்பா
(02)       வஞ்சித் தாழிசை
(03)       வஞ்சித்துறை
(04)       வஞ்சி விருத்தம்
வஞ்சிப்பா இலக்கணம்
(05)       இரு சீரடிகளாலும், முச்சீரடிகளாலும் வருவது வஞ்சிப்பா. அடி வறையறையால், குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என இரு வகையாம். வஞ்சிப்பா தனிச் சொல் பெற்று ஆசிரியச்
சுரிதகத்தால் முடியும் (பக்.433, 434. நன்னூல்)
(06) வஞ்சிப்பாவில் குறளடி அல்லது சிந்தடி இயன்று வரும்
(07)       வஞ்சிப் பாவிலுள் குற்றுகரம் வாராதேயும் நாலசைச் சீர் வரும் (ப.26)
(08)       வஞ்சிப் பாவினுள் இரண்டு நாலசைச் சீர் ஓரடியுள் அருகி நெருங்கி நிற்கவும்
பெறும் (ப.26). இரண்டு வரினும் நெருங்கி நில்லா ! (ப.26)
(09)       வஞ்சிப் பாவினுள் பெரும்பான்மையும் ஓரடியுள் நாலசைச் சீர் ஒன்று மட்டுமே
வரும் (ப.26)
(10)       நிழல் என்னும் சொல் இறுதியாகிய நிரை ஈற்றுப் பொதுச் சீர் எட்டும் வஞ்சிப்
பாவில் அல்லாது வேறு எதிலும் வாரா (ப.26) 
வஞ்சிப்பா
கொடி,யவா,லன   குரு,நிறத்,தன   குறுந்,தா,ளன
வடி,வா,ளெயிற்   றழ,லுளை,யன   வள்,ளுகி,ரன
பணை,யெருத்,தின   இணை,யரி,மா   னணை,யே,றித்
துணை,யில்,லாத்   துற,வுநெ,றிக்   கிறை,வனா,கி
எயி,னடு,வண்   இனி,திருந்   தெல்,லோர்க்,கும்
பயில்,படு,வினை   பத்,திய,லாற்   செப்,பினோன்
            புணை,யெனத்
திரு,வுறு   திருந்,தடி   திசை,தொழ
வெரு,வுறு   நாற்,கதி   வீ,டுந,னி   யெளி,தே.
(01)       இச் சிந்தடி (முச்சீரடி) வஞ்சிப்பா “புணையென” என்னுந் தனிச் சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்றுள்ளது. (பக்.124. யாப்பு)
(02)       இப்பாடலில் (ஒன்றிய 6, ஒன்றா .2) வஞ்சித்தளை 8 , கலித்தளை 8, வெண்டளை 5, ஆசிரியத்தளை 3 ஆகியன வந்துள்ளன.
                           ****
மண்,டிணிந்,த   நில,னும்
நில,னேந்,திய   விசும்,பும்
விசும்,புதை,வரு   வளி,யும்
வளித்,தலை,இய  தீ,யும்
தீ,முர,ணிய    நீ,ரும்
(03)       இக்குறளடி (இருசீர் அடி) வஞ்சிப் பாவில் வெண்சீரும், வஞ்சிச் சீரும், நேர் ஈற்று இயற்சீரும் வந்து, வெண்டளையும், வஞ்சித்தளையும், கலித்தளையும், ஆசிரியத் தளையும் மயங்கி வந்துள்ளன.  (பக்.142. யாப்பு) (மயங்கி வந்துள்ளன என்றால் எல்லாத் தளைகளும்
தனித்தனிக் குழுவாக வராமல் ஒன்றோடொன்று கலந்து வந்துள்ளன என்று பொருள்.)
(04)       இப்பாடலில் வஞ்சித்தளை 4-ம், கலித்தளை 1-ம், இயற்சீர் வெண்டளை 3-ம், (நேரொன்று) ஆசிரியத்தளை 1-ம் வந்துள்ளன.
புன்,காற்  புணர்,மரு,தின்
போ,தரும்,பிய  புனல்,தா,மரை
தேன்,தாழ்  தீங்,கரும்,பின்
பூந்,தாட் புனற்,றா,மரை
வார்,காற்  செங்,கழு,நீர்
(05)       இக்குறளடி (இருசீர் அடி) வஞ்சிப் பாவில் வெண்சீரும், வஞ்சிச் சீரும், நேர் ஈற்று இயற்சீரும் வந்து, வெண்டளையும், வஞ்சித்தளையும், கலித்தளையும்,  ஆசிரியத் தளையும் மயங்கி வந்துள்ளன.  (பக்.142. யாப்பு)
(06)       இப்பாடலில் 3 வஞ்சித் தளைகளும், 4 வெண்டளைகளும், 2 ஆசிரியத் தளைகளும், கலந்து வந்துள்ளன. 
வஞ்சித்தாழிசை (பக்.121)
( (01). இரு சீரடி (இரு சீர்களை உடைய அடி) நான்கு நான்காக ஒரு
பொருண்மேல் மூன்றடுக்கி வருவன வஞ்சித்தாழிசை ஆகும். (பக்.121.
யாப்பு)
(02)      மூன்றடுக்கி வருமே தவிர வேறு வகையில் வாரா (பக்.122.யாப்பு)
மடப்,பிடி,யை    மத,வே,ழம்
தடக்,கை,யான்   வெயின்,மறைக்,கும்,
இடைச்,சுர   மிறந்,தார்க்,கே
நடக்,குமென்   மன,னே,காண்.
பே,டை,யை   இரும்,போத்,துத்
தோ,கை,யான்   வெயின்,மறைக்,கும்,
கா,டக   மிறந்,தார்க்,கே
ஓ,டுமென்   மன,னே,காண்.
இரும்,பிடி,யை   இகல்,வே,ழம்
பெருங்,கை,யான்   வெயின்,மறைக்,கும்,
அருஞ்,சுர   மிறந்,தார்க்,கே
விரும்,புமென்   மன,னே,காண்.
(03)       இப்பாடலில் 13 கலித்தளையும், 6 (நிரையொன்று) ஆசிரியத் தளையும், 4 வெண்சீர் வெண்டளையும் வந்துள்ளன. 
வஞ்சித்துறை
(01)       இருசீரடி  (இரு சீர்களை உடைய அடி) நான்காய் ஒரு பொருண்மேல் ஒன்றாய் வருவது
வஞ்சித்துறை ஆகும் (பக்.122. யாப்பு)
மை,சிறந்,தன   மணி,வரை
கை,சிறந்,தன   காந்,தளும்
பொய்,சிறந்,தனர்   கா,தலர்
மெய்,சிறந்,திலர்   விளங்,கிழாய்.
(02)       இப்பாடலில் 2 வஞ்சித்தளை, 2 கலித்தளை, 3 இயற்சீர் வெண்டளை ஆகியவை வந்துள்ளன.   
வஞ்சி விருத்தம்
(01)       முச்சீரடி (மூன்று சீர்களை உடைய அடி) நான்காய் வருவது வஞ்சி விருத்தம். (பக்.123. யாப்பு)
சோ,லை  யார்ந்,த  சுரத்,திடைக்
கா,லை  யார்,கழ  லார்ப்,பவும்
மா,லை மார்,பன்  வரு,மா,யின்
நீ,ல  வுண்,கண்  இவள்,வா,ழுமே.
(02)       இது சிந்தடி (மூன்று சீர் அடி) நான்காய் வந்தமையான் வஞ்சி விருத்தம் ஆகும். (பக்.123. (யாப்பு) 
(03)       இப்பாடலில் (நேரொன்று) ஆசிரியத்தளை 4 –ம், இயற்சீர் வெண்டளை 6-ம், வெண்சீர் வெண்டளை 1-ம் வந்துள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
--------------------------------------------------------------------------------------------------------
                             

 
