name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 08/25/19

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2019

புதிய தமிழ்ச் சொல் (44) அலைமாற்றி ( INVERTER )

புதுச்சொல் புனைவோம் !


அலைமாற்றி = INVERTER

-------------------------------------------------------------------------------------------

 

அலைமாற்றி” என்பது மாறலை மின்சாரம் (ALTERNATE CURRENT) பெறும் வெளிமூலம்நேரலை மின்சாரம் (DIRECT CURRENT) சேமிக்கப்படும் ”மின்கல அடுக்கு” இரண்டுடனும் இடையறாது இணைப்புப் பெற்றிருக்கும் ஒரு மின் பேழை !

 

குடியிருப்பு இல்லங்களிலும்வணிக நிறுவனங்களிலும் பயன்பாட்டிலுள்ள இம் மின்பேழை மாறலை மின்வலியை (ALTERNATE   CURRENT)  நேரலையாகவும்  (DIRECT  CURRENT),  நேரலை  மின்வலியை மாறலையாகவும் மாற்றித் தரும் வல்லமை உடையது !

 

மின்வாரிய இணைப்பு போன்ற வெளி மூலத்திலிருந்து (OUTSIDE SOURCE) கிடைக்கும் மாறலை மின்சாரத்தின்  (ALTERNATE  CURRENT)  ஒருபகுதி  “இன்வெர்ட்டர்”  கருவியில் “நேரலை மின்சாரமாக” (DIRECT CURRENT) மாற்றப்பட்டு அதனுடன் இணைந்த “மின்கல அடுக்கில்”  (BATTERY) சேமிக்கப்படுகிறதுமறுபகுதிவீட்டுப் பயன்பாட்டுக்கு அனுப்பபடுகிறது !

 

மின்கல அடுக்கு” (BATTERY) முழுமையாகச் செறிவூட்டப்பட்ட பின்பு, (AFTER FULLY CHARGED) அதற்குச் செல்லும் நேரலை மின் தொடர்பு துண்டிக்கப் பட்டுவிடும்வெளிமூலத்திலிருந்து கிடைக்கும் மாறலை மின்சாரம் (ALTERNATE CURRENT), முழுவதுமாக  வீட்டுப் பயன் பாட்டுக்கு  “இன்வெர்ட்டர்” கருவியால்  திருப்பி விடப்படும் !

 

வெளிமூலத்திலிருந்து கிடைக்கும் மாறலை மின்சாரம் (ALTERNATE CURRENT) துண்டிக்கப்படும் நேர்வுகளில், “இன்வெர்ட்டர்” கருவியானது, ”மின்கல அடுக்கில்” (BATTERY) சேமிக்கப்பட்டிருக்கும்  நேர்மின்சாரத்தை (DIRECT CURRENT) ஈர்த்து மாறலை மின்சாரமாக  (ALTERNATE CURRENT) மாற்றி வீட்டுப் பயன்பாட்டுக்கு அனுப்பிவிடும் !

 

மாறலை மின்சாரத்தை (ALTERNATE CURRENT) நேரலையாகவும் (DIRECT CURRENT) நேரலை மின்சாரத்தை மாறலையாகவும்  மாற்றிக் கொடுத்து,  வீட்டுப்  பயன்பாட்டுக்குத்  தடங்கலின்றி மின்சாரம் கிடைக்கச் செய்யும் பணியை இந்த “இன்வெர்ட்டர்”  மேற்கொள்கிறது !

 

மில்கல அடுக்கினுள் உறக்க நிலையில் (DORMANT STATE) இருக்கும் மின்னேற்றத்தை மீட்டுமாறலை மின்சாரமாக மாற்றி அளிக்கும் மின் பேழையை “அலைமாற்றிப் பேழை ” என்று அழைக்கலாம்இதை இன்னும் சுருக்கி “அலைமாற்றி ” என்றே கூறலாம்கோடு அரியும் கருவியை கோடரி (கோடு + அரி = கோடரிஎன்பதைப்போல அலை மாற்றி  அளிக்கும் கருவியை “அலைமாற்றி ”  என்று கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும் !. 

 

               ----------------------------------------------------------------------------------------

                          INVERTER = அலைமாற்றி

               ----------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------

     

 ”தமிழ்ப் பணிமன்றம்” முகநூற்குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

 

-----------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,ஆடவை,09]

{24-06-2019}

 

---------------------------------------------------------------------------------------------------------



அலைமாற்றி