name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 12/14/15

திங்கள், டிசம்பர் 14, 2015

புதிய தமிழ்ச் சொல் (19) பல்லவி ( PRESSURE COOKER )

புதுச்சொல் புனைவோம் !பல்லவி = PRESSURE COOKER.

--------------------------------------------------------------------------------------------------------

”செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்றார் வள்ளுவர். நாம் இந்தக் குறளைப் புரட்டிப் போட்டு “வயிற்றுக்கு உணவு இடாத போது, சிறிது செவிக்கும் ஈயப்படும்” என்பதாக நடைமுறையில் பின்பற்றுகிறோம் !

சமையற் கலை பற்றி எல்லாத் தொலைக்காட்சிகளும் நாள்தோறும் நேரலையாக நிகழ்ச்சிகள் நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். சுவையாகச் சமையல் செய்வதே ஒரு கலை தான் !

சில காய்களைப் பச்சையாக உண்ணலாம். ஆனால், பெரும்பாலான உணவுப் பொருள்களைச் சமைத்துத் தான் உண்ண வேண்டும் !

புதிய தமிழ்ச் சொல் (18) உச்சிக்கு முன் / உச்சிக்குப் பின் ( A.M /P.M.)

புதுச்சொல் புனைவோம் !A.M = உ.மு (உச்சிக்கு முன்)
P.M = உ,பி (உச்சிக்குப் பின்)
----------------------------------------------------------------------------------------------------------

ஒரு நாளுக்குரிய 24 மணி நேரத்தை இரண்டாகப் பகுத்து இருக்கிறார்கள் மேலை நாட்டு அறிஞர்கள் !

ஒவ்வொரு நாட்டிலும் எந்த வேளையில் கதிரவன் முழுப் பேரொளியுடனும், வலிமையான வெப்ப வீச்சுடனும் திகழ்கிறதோ அந்த வேளைக்கு உச்சி வேளை (MERIDIAN) என்று பெயரிட்டு இருக்கிறார்கள் !

புதிய தமிழ்ச் சொல் (17) துச்சில் (GUEST HOUSE )

புதுச்சொல் புனைவோம் !


GUEST HOUSE = துச்சில்
-----------------------------------------------------------------------------------------------------
அரசின் உயர் அலுவலர்களோ, அமைச்சர்களோ அலுவல் முறையாக வெளியூர் செல்லும்போது தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதியாக, அரசின் சார்பில் விருந்தினர் மாளிகைகள் கட்டப்பட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள் !


இந்த ஓய்வு இல்லங்களை ஆங்கிலத்தில் பலவாறாக அழைக்கின்றனர். GUEST HOUSE, REST HOUSE, GUEST ROOM, INSPECTION BUNGLOW, TOURIST HOME, TOURIST BUNGLOW என ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. இந்த இல்லங்களின் பயன் தான் என்ன ? தங்கி ஓய்வு எடுப்பது தானே ?

புதிய தமிழ்ச் சொல் (16) அழலி ( IRON BOX )

புதுச்சொல் புனைவோம் !IRON BOX = அழலி
----------------------------------------------------------------------------------------------------------

இஸ்திரிப் பெட்டி என்று சொல்லப்படும் ஆடைகள் தேய்ப்புப் பெட்டியில் இரண்டு வகையுண்டு.. அந்தக் காலத்தில் சலவைத் தொழிலாளிகள் பயன்படுத்திய இஸ்திரிப் பெட்டிகள் பித்தளையால் ஆனவை !


இதில் வெப்பமூட்டுவதற்குக் கரி பயன்படுத்தப் பட்டது. பிற்காலத்தில் மின்விசை பயன்பாட்டுக்கு வந்த பின்பு தயாரிக்கப் பெற்ற இஸ்திரிப் பெட்டிகள் துருப் பிடிக்காத இரும்பினால் செய்யப் பெற்றவையாக இருந்தன !


இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் கனமான மாழைத் தகட்டினால் ( Metal Bottom) ஆனது. இந்த அடிப்பாகம் நெருப்பினாலோ அல்லது மின் விசையினாலோ வெப்பமூட்டப் படும்போது, அது கணிசமான அளவுக்குச் சூடேறுகிறது !

புதிய தமிழ்ச் சொல் (15) ஊதைப் பொறி ( AIR COOLER )

புதுச் சொல் புனைவோம் !AIR  COOLER  = ஊதைப் பொறி
---------------------------------------------------------------------------------------------------------

கோடை காலத்தில் வீட்டுக்குள் வெப்பம் மிகுதியாக இருக்கும். மின் விசிறி எவ்வளவு சுழன்றாலும் காற்றுதான் வருமே தவிர – அதுவும் வெப்பக் காற்று தான் வருமே தவிர – குளிர் காற்றுக் கிடைக்காது. குளிர் காற்றை விரும்புவோர், ஏர் கூலரைப் பயன் படுத்துகிறார்கள். ஏர் கூலர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் ?

வாடைக் காற்றுக்கு குளிர்ச்சி மிகுதி. தமிழில் இதை ஊதைக் காற்று என்று சொல்வார்கள்.

========================================
வரைமல்க, வானம் சிறப்ப, உறைபோழ்ந்து
இருநிலம் தீம்பெயல் தாழ – விரைநாற
ஊதை உளரும் நறும்தண்கா பேதை
பெருமடம் நம்மாட்டு உரைத்து !
========================================
(நூல் : கார் நாற்பது. பாடல் எண் : 30)
========================================

பொருள் :
-----------------

கலைகள் வளம் நிறைய, வானகம் சிறப்பு எய்த, இனிய மழை பொழிய, எங்கும் நறுமணம் கமழ, ஊதைக் காற்றானது, தலைவியின் அழகையும் இளமையையும் நமக்குச் சொல்ல மலர்ச் சோலையில் காத்துக் கொண்டிருக்கிறது. தேரினை விரைந்து செலுத்துவாயாக !


==========================================================
” ஊதை “ என்ற சொல்லாட்சி குளிர் காற்றின் குணத்தை இங்கு குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஏர் கூலர் என்பதை இனி நாம் ஊதைப் பொறி என்றே சொல்லிப் பழகுவோம்.
==========================================================

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

----------------------------------------------------------------------------------------------புதிய தமிழ்ச் சொல் (14) அகழி ( CUTTER )

புதுச்சொல் புனைவோம் !


CUTTER = அகழி
--------------------------------------------------------------------------------------------------------
          
அகழ்தல் என்ற சொல்லுக்கு தோண்டுதல், கல்லுதல், உழுதல், துருவுதல், அரிதல், அறுத்தல் எனப் பலவாறு பொருள் சொல்கிறது தமிழகராதி “.கிழங்கு கல்லி மாவெடுப்போம்” என்ற நாட்டுப் புறப் பாடலைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?          

அகழ்வரைத் தாங்கும் நிலம் போல“ என்னும் குறள் “தோண்டுதல்” என்ற பொருளிலேயே கையாளப் பட்டுள்ளது.
          
அகழப்பெற்று உருவாக்கப் பெற்றது அகழி. நகரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு மன்னர்களால் கோட்டையைச் சுற்றித் தோண்டப் பெற்றுத் தண்ணீர் நிரப்பப்பெற்ற நீர் நிலைக்கு அகழி என்று பெயர்.

புதிய தமிழ்ச் சொல் (13) ஆளி ( SWITCH )

புதுச்சொல் புனைவோம் !

SWITCH =ஆளி
--------------------------------------------------------------------------------------------------------

ஆள் ( Person ) என்னும் சொல் ஒரு தனி நபரையும் குறிக்கும்; ”ஆளுதல்” ( To Rule ) என்ற கருத்தையும் குறிக்கும். தனி நபரைக் குறிக்கும் “ஆள்” என்னும் பெயர்ச் சொல்லின் அடிப்படையில் பல புதிய பெயர்ச் சொற்கள் பிறக்கின்றன. சிலவற்றைப் பாருங்கள் !

         கூட்டு + ஆள் + இ = கூட்டாளி
         நோய் + ஆள் + இ = நோயாளி
         தொழில் + ஆள் + இ = தொழிலாளி
         ( “இ” என்பது விகுதி)
          
”ஆள்” என்பது ஏவல் வினை. இந்த வினைச் சொல்லுக்கு “ஆட்சி செய்” என்று பொருள். இந்த வினைச் சொல்லின் அடிப்படையில் “ஆட்சி”, “ஆட்சியர்”, “ஆளுநர்” போன்ற பெயர்ச் சொற்கள் உருவாகின்றன !