name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (16) அழலி ( IRON BOX )

திங்கள், டிசம்பர் 14, 2015

புதிய தமிழ்ச் சொல் (16) அழலி ( IRON BOX )

புதுச்சொல் புனைவோம் !



IRON BOX = அழலி
----------------------------------------------------------------------------------------------------------

இஸ்திரிப் பெட்டி என்று சொல்லப்படும் ஆடைகள் தேய்ப்புப் பெட்டியில் இரண்டு வகையுண்டு.. அந்தக் காலத்தில் சலவைத் தொழிலாளிகள் பயன்படுத்திய இஸ்திரிப் பெட்டிகள் பித்தளையால் ஆனவை !


இதில் வெப்பமூட்டுவதற்குக் கரி பயன்படுத்தப் பட்டது. பிற்காலத்தில் மின்விசை பயன்பாட்டுக்கு வந்த பின்பு தயாரிக்கப் பெற்ற இஸ்திரிப் பெட்டிகள் துருப் பிடிக்காத இரும்பினால் செய்யப் பெற்றவையாக இருந்தன !


இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் கனமான மாழைத் தகட்டினால் ( Metal Bottom) ஆனது. இந்த அடிப்பாகம் நெருப்பினாலோ அல்லது மின் விசையினாலோ வெப்பமூட்டப் படும்போது, அது கணிசமான அளவுக்குச் சூடேறுகிறது !


சுருக்கங்கள் உள்ள துணி சற்று ஈரமாக்கப் பட்டு, அதன் மேல் இஸ்திரிப் பெட்டியை வைத்து முன்னும் பின்னும் இழுத்துத் தேய்க்கும்போது, துணியில் உள்ள சுருக்கங்கள் நீங்கி துணி விறைப்பாகக் காணப் படும் !


எந்த வகை இஸ்திரிப் பெட்டியானாலும், அதைப் பயன்படுத்துவதற்கு வெப்பம் தேவை. வெப்பம் எங்கிருந்து உண்டாகிறது ? வெப்பத்தின் மூலவடிவம் அழல். அழலில் இருந்துதான் உண்ணம் (உஷ்ணம்) பிறக்கிறது !


அழல் என்பதற்கு நெருப்பு, வெப்பம், தீக்கொழுந்து, எரிவு, கொதிப்பு என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. அழல் இருக்குமிடத்தில் வெப்பம் இருக்கும். இரண்டும் இரட்டைப் பிறவிகள் !


கரியினாலோ அல்லது மின் விசையினாலோ இஸ்திரிப் பெட்டி வெப்பமூட்டப் படும்போது அதற்கு மூலதாரமாக அங்கு அமைவது அழல். அழலின் பயனால் இயக்கப் படும் பெட்டியை அழலிப் பெட்டி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா ?


இனி இஸ்திரியைத் தூக்கிப் பரண் மீது வைத்துவிட்டு அழலியைக் கையில்
எடுப்போம். ”அழலி” என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !


=============================================================



IRON BOX = அழலி
ELECTRIC  IRON  BOX = மின்னழலி
CHARCOAL  IRON  BOX = கரியழலி
STEAM  IRON  BOX =ஆவியழலி



==============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

==============================================================




5 கருத்துகள்:

  1. அழலி அருமையான மொழியாக்கம் ! தொடர்க தங்கள் தமிழ்ப் பணி !

    பதிலளிநீக்கு
  2. அருமையான கலைச்சொல்லாக்கங்கள்... நீங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா?

    https://www.facebook.com/groups/tamilsol/
    https://www.facebook.com/groups/col.aayvu/
    https://www.facebook.com/groups/senthamizh/

    -- ஆகிய ஃபேஸ்புக் பக்கங்களில் கலைச்சொற்கள் தொடர்பாக பலர் உரையாடுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊக்கம் தரும் வகையில் உங்கள் கருத்துரை இருக்கிறது. உங்கள் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டீர்களே ! முகநூலில் “தமிழ்ப் பணி மன்றம்” என்னும் குழுவின் (group) ஆட்சியராக (admin) இருக்கிறேன். அதில் நீங்களும் சேர்ந்திட அழைக்கிறேன் !

      நீக்கு
    2. ஊக்கம் தரும் வகையில் உங்கள் கருத்துரை இருக்கிறது. உங்கள் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டீர்களே ! முகநூலில் “தமிழ்ப் பணி மன்றம்” என்னும் குழுவின் (group) ஆட்சியராக (admin) இருக்கிறேன். அதில் நீங்களும் சேர்ந்திட அழைக்கிறேன் !

      நீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .