-------------------------------------------------
கண்ணில் தெரியும் கதிரவன்
“உண்மை” கண்டது உரைத்தல்
“வாய்மை”யம்மா !
--------------------------------------------------------------------------
உண்மை வாய்மை மெய்ம்மை
மூன்றும்
.....ஒன்றென எண்ணல்
சரியாகா !
கண்ணில் தெரியும் கதிரவன் ”உண்மை”,
.....கண்டது உரைத்தல்
”வாய்மை”யமா !
மண்ணுயிர் வாழ்க்கை கதிரவன் அருளால்,
.....மறந்திடத்
தகுமோ இது”மெய்ம்மை” !
திண்ணிய வாய்மைத் திறமிகு
வழியில்,
.....திருக்குறள்
போற்றி ஒழுகிடுவோம் !
வள்ளுவ முனிவர் வாய்மையைச்
சொல்லி,
.....வடித்தார்
பத்துத் திருக்குறளை !
தெள்ளிய நல்லுரை அவரது
சொல்லுரை,
.....தெவிட்டாத்
தேனது பருகிடுவோம் !
ஒள்ளிய வாய்மை யாதெனில்
தீமை
.....ஒன்றும் பயவா
உரையாமே !
புள்ளியர் சொல்லும் பொய்மையும்
வாய்மை
.....புரைதீர் நன்மை
பயக்குமெனின் !
உடலைக் கழுவிடத் தண்ணீர்
வேண்டும்,
!,
.....உளத்தைக் கழுவிட
வாய்மை வேண்டும் !
அடல்மிகு வாய்மை அளித்திடும் நன்மை,
.....அமைதியை அழித்துக்
தீய்த்திடும் பொய்ம்மை !
மடல்விரி தாமரை மணமாய்
வள்ளுவம்
.....மயக்குது மனதைப்
பருகுவம் வாரீர் !!
வடலியென் பாடலில் வளங்குறை
வென்றால்,
.....வயமா நீவிர்
பொறுத்தருள் வீரே !
----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),29]
{12-02-2020}
----------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில்
வெளியிடப் பெற் ற கவிதை !
----------------------------------------------------------------------------