ஏழை வீட்டுப் பெண்ணுக்குப் பெயர் சொர்ணம் !
தமிழில் பொன் எனப்படும் தங்கத்தைக் குறிக்க பல சொற்கள் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் சில தமிழ்ச்சொல்லாகவும் பல சமஸ்கிருதச் சொல்லாகவும் உள்ளன. அவை வருமாறு :- மாசை, மாசி, பீதகம், பீதம், மாடை, மாடு, வேங்கை, ஆசை, சுவணம், சுவர்ணம், காரம், அருத்தம், காஞ்சனம், காணம், தேசிகம், கனகம், கைத்து, செந்தாது, பொலம், அத்தம், சாமி, வித்தம், தனம், உடல், பண்டம், இரணியம், நிதி, வெறுக்கை, ஈகை, கல்யாணம், ஏமம், பொருள், உரை, சந்திரம், சாம்பூதனம், பூரி, ஈழம், திரவியம், சாதரூபம், செங்கொல், நிதானம், மாழை, அரி, தபனியம், பணியம், ஆடகம் ஆகியவை. சமஸ்கிருதச் சொல்லின் அடிப்படையில் பல பெயர்கள் மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றைப் பார்ப்போமா !
------------------------------------------------------------------------------------------------------
·
மாசி..................................= தங்கம்
·
பீதாம்பரம்......................= பொன்னிழை
·
மாடையன்....................= தங்க மணி
·
வேங்கையன்...............= தங்கசாமி
·
சுவர்ணம்.......................= பொற்செல்வி
·
சுவர்ணலதா.................=
பொற்கொடி
·
சொர்ணவல்லி............= பொற்கொடி
·
சொர்ணம்......................=
தங்கம்
·
காஞ்சனா......................= பொன்மகள்
·
காஞ்சனமாலா............= பொன்மாலை
·
தேசிகன்.........................= பொற்செல்வன்
·
கனகம் (பொன்)..........= பொன்னி
·
கனகதாரா......................= பொன்மாரி
·
கனகாம்புஜம்................= பொற்றாமரை
·
கனகராஜன்....................= பொன்னரசு
·
கனகசபை......................= பொன்னம்பலம்
·
கனகசுந்தரம்.................= பொன்னழகு
·
கனகவேல்.....................= தங்கவேல்
·
கனகமணி......................= பொன்மணி
·
கனகவல்லி...................= பொற்கொடி
·
சாமி...................................= பொன்னன்
·
தனம்................................= தங்கம்
·
தனலட்சுமி....................= பொன்மகள்
·
தனபாக்கியம்................= பொற்செல்வி
·
தனவேந்தன்.................= பொன்னரசு
·
தனராஜ்...........................= பொன்னரசு
·
தனசாமி..........................=
பொற்செல்வன்
·
இரணியன்.....................= பொன்னன்
·
கல்யாணம்....................= தங்கமாங்கனி
·
கல்யாணசுந்தரம்........= பொன்னழகு
·
கல்யாணி.................... = பொன்மகள்
·
ஹேமச்சந்திரன்..........= பொன்னிலவன்
·
ஹேமலதா.................. = பொற்கொடி
·
ஹேமா............................= பொன்னி
·
திரவியம்.........................= பொன்னன்
·
திரவியராஜு.................= பொன்னரசு
·
திரவியசாமி..................= பொன்னையன்
·
அபரஞ்சிதா....................= பொற்பாவை
·
ருக்குமணி.....................= பொன்மணி
-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{18-12-2018}
-------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .