எல்லோருக்கும் ஒரு விலையுண்டு !
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ”பழமொழி” என்பது
முன்றுரை அரையனார் என்பவர் இயற்றிய நானூறு வெண்பாக்களால் ஆகிய ஒரு இலக்கியம்.
ஒவ்வொரு வெண்பாவிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியை அமைத்து
இவ்விலக்கியத்தை அவர் படைத்துள்ளார் !
-------------------------------------------------------------------------------------------------------
பாடல். 32.
-------------------------------------------------------------------------------------------------------
தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது.
பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது.
--------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்.
--------------------------------------------------------------------------------------------------------
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே – பொருள் கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ? வேல் குத்தின்
காணியின் குத்தே வலிது.
பொருளால் அறுத்தல் பொருளே – பொருள் கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ? வேல் குத்தின்
காணியின் குத்தே வலிது.
---------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
தனது தகுதியை உணராது ஆணவத்துடன் செயல்படும் திறமையற்ற
பகைவரை, பொருள் (பணம்) கொண்டு அழித்தலே சரியான செயலாகும்.. (அந்த எதிரியை ஒழிக்கும் நோக்கில் கைக்கூலியாக) தேவையான (பணத்தை) பொருளைக் கொடுத்தால் பகைமையை விட்டொழிக்கத்
தயங்குபவர் யாராவது இருக்கிறார்களா என்ன ? கூரிய வேலைக்
கொண்டு அழிப்பதைக் காட்டிலும் பணத்தால் அடித்து
பகைவரை வெல்வதே வலிமையானது !
----------------------------------------------------------------------------------------------------------
பழமொழி சொல்லும் பாடம்: எல்லோருக்கும் ஒரு விலையுண்டு, பணம் எதையும் சாதிக்க வல்லது;
ஆகையால் செல்வத்தைத்
தக்க முறையில் பயன்படுத்தி எதிரி நமக்கு இடையூறாக இருப்பதை
நீக்கிட வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------
தெருளாது = தனது தகுதியை உணராது; ஒழுகும் = நடந்துகொள்ளும்; திறன் இலாதாரை = திறமையற்ற
பகைவரை; பொருளால் = பணம் கொடுத்து;
அறுத்தல் = இல்லாமல் செய்தல் (அழித்தல்); பொருளே = சரியான
செயலாகும். பொருள் கொடுப்ப = பணம்
கொடுத்தால்; பாணித்து = தனது
செயலிலிருந்து பின்வாங்காமல்; நிற்கிற்பார் = உறுதியாக நிற்பவர் ; யார் உளரோ = யார் இருக்கிறார்; வேல் குத்தின் = வேல் கொண்டு குத்தி அழிப்பதைவிட ;
காணியின் குத்தே = காணிக்கையாகக் பணம்
கொடுத்து அவரைப் பணியவைப்பதே ; வலிது = வலிமை மிகுந்ததாகும் !
---------------------------------------------------------------------------------------------------------
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)
எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)
திருவள்ளுவரும் முன்றுரை அரையனாரின் கருத்தை வலியுறுத்துவதை மேற்கண்ட குறள்
மூலம் அறியலாம்.
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2050:மடங்கல்(ஆவணி),21]
{07-09
-2019}
--------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .