name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - வெளியீட்டு முன்னுரை !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - வெளியீட்டு முன்னுரை !

திருப்பாவை - வெளியீட்டு முன்னுரை !


நண்பர்களே !

தமிழே இனிமையானது. தமிழ்க் கவிதைகளோ இன்னும் இனிமையானவை ! கவிதையைச் சுவைப்பது என்பது ஒரு கலை ! ”நெஞ்சு பொறுக்குதில்லையே ! இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் !” என்பது போன்ற பாரதியாரின் பாடல்களில் எனக்கு ஒரு மயக்கமுண்டு !

தமிழுக்கும் அமுதென்று பேர் ! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !” எனக் குழையும் பாரதிதாசன் பாடல்களிலும் எனக்கு அளவு கடந்த ஈர்ப்பு உண்டு !

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்என்பது போன்ற வடலூர் வள்ளலாரின் பாடல்களில் எனக்கு ஒரு தீராத வேட்கை உண்டு.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்என்பது போன்ற  புறநானூற்றுப் பாடல்களின் சொல்லாடலில் எனக்குச் சிந்தை நிறைகின்ற பொந்திகை (மன நிறைவு) நிரம்பவுண்டு.

எல்லே இளங்கிளியே ! இன்னும் உறங்குதியோ?” என்பன போன்ற ஆண்டாள் நாச்சியாரின் தமிழ்க் கனிச் சுவையில் இணையற்ற ஈடுபாடும் உண்டு !

மார்கழித் திங்கள் பிறந்ததும் வைணவத் திருத் தலங்களில் திருப்பாவையின்  இன்னொலி இளங் காற்றில் மெல்ல மிதந்து வரும். அதன் இசையும் சொற்சுவையும் கேட்பாரைப் பிணிக்கும் தன்மையன !

தமிழ்ப் பணி மன்ற நண்பர்களும் நாளை முதல் ஆண்டாள் திருமொழியை அள்ளிப் பருகிடலாம். திருப்பாவையில் இடம் பெற்றுள்ள தேன் தமிழ்ச் சொற்களைச் சுவைத்து மகிழ உங்களை அன்புடன் அழைக்கிறேன் !

ஒரு நாள் காத்திருங்கள் ! ஒண்டமிழின் நற்சுவையை உளமாரப் பருகிடலாம் ! நாளுமொரு பாடலாக  ஆண்டாளின் திருப்பாவை, தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியாகும் !

-----------------------------------------------------------------------------------------------------------
                           ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, நளி 28.]
{14-12-2019}

-----------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .