name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (16) நாயகனாய் நின்ற !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (16) நாயகனாய் நின்ற !

ஆயர்குல நாயகன் நந்தகோபனின்  காவலனே !


நாயகனாய் நின்ற  நந்த கோபனுடைய
.........கோயில் காப்பானே !  கொடித்தோன்றும்  தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம்  தாள்திறவாய் !
.........ஆயர்  சிறுமியரோமுக்கு  அறைபறை
மாயன் மணிவண்ணன்  நென்னலே  வாய்நேர்ந்தான் !
.........தூயோமாய்  வந்தோம்  துயிலெழப்  பாடுவான் !
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ!
.........நேய நிலைக்கதவம்  நீக்கு ஏல் ஓர்  எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

ஆயர்குல நாயகனாம் நந்தகோபனின் கோயில் காப்பவனே !  கொடித்  தோரண  வாயில் காப்பவனே !   மணிக் கதவைத் திறவாய் ! நாங்கள்  ஆயர்குலச் சிறுமியர் வந்திருக்கிறோம்.  பயப்படாதே ! அந்த மாயன், மணிவண்ணன் எங்கள் நோன்பு நிறைவேற ஒரு பரிசு தருவதாகச் சொல்லி இருக்கிறான்; அதனால் தான் வைகறையில் நீராடி முடித்து, தூயவர்களாக வந்திருக்கிறோம். எங்கள் நேயனது கோயில் நிலைக் கதவைக் கொஞ்சம் திற !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------

நாயகனாய் = தலைவனாக; கொடித் தோன்றும் = கொடிகள் அலங்கரிக்கும்; மணிக் கதவம் = திறந்தால்சில்லென்று ஒலிக்கக் கூடிய மணிகள் பொருத்திய கதவு; தாள் = தாழ்ப்பாள்; ஆயர் = ஆயர்குல; சிறுமியரோம்= சிறுமியராகிய எங்களுக்கு; அறை பறை = பரிசு தருவதாகச் சொல்லி; நென்னலே = நேற்றே; வாய் நேர்ந்தான் = எங்களிடம் உரைத்தான்;  தூயோமாய் = நீராடி முடித்துத் தூயவர்களாக; வந்தோம் = வந்திருக்கிறோம்; துயிலெழப் பாடுவான் வாயால் = கண்ணனுக்குத் திருப்பள்ளி எழுச்சிப் பாட வந்துள்ளோம்; வாயால் முன்ன முன்னம்  உன் வாயால்விரைவாக வாஎன்று ; மாற்றாதே அம்மா = (கோயில் காவலனாகிய) என்னிடம் அடிக்கடி  சொல்லாதே அம்மா; நேய = அன்பு கொண்டு; நிலைக்கதவம் நீக்க = கதவின் தாள் திறந்துவிடுகிறேன்; ஏல் ஓர் எம்பாவாய் ! அப்புறம் நீங்கள் கண்ணனை போற்றி வணங்கிப் பாடுங்கள் பாவையரே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,15.]
{30-12-2018}
-
------------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .