கொத்து (01) மலர் (049)
------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை அ.தொ.ப,நி. கடைசற் பிரிவுப்
பயிற்றுநர் சிவசிதம்பரம் - கோமதி திருமணம்
15—9—1969 அன்று நிகழுற்றதை
முன்னிட்டு அவருக்கு
வாசித்தளித்த வாழ்த்து மடல் !
(ஆண்டு 1969)
------------------------------------------------------------------------------------------------------------
நாட்டின்
நலம்பெருக்க நாட்டமுள்ள
நற்றவனே
!
நல்லறிஞர் யாத்ததமிழ்
போற்றுசிவ சிதம்பரனே !
ஏட்டில்
தடம்பதித்த எம்மதுரைக்
குயில்மொழியே
!
ஈடில்லா கலைத்திறனை
இருகையால் வழங்கபுதுக்
கோட்டைச் சுவர்ப்புறத்துக்
கோகர்ண ஊர்க்கடையில்
கோதிலா பல்கலைகள் பயிற்றுவிக்கும்
கூடமதில்
கூட்டுக்
குயிலாகக் கூவிவரும்
கோமகனே !
கோமதியின் துணைஏற்கும்
மாமதுரைக் காவலனே !
வெண்ணிலவு
தண்மதியை
விரும்பிமணம்
கொண்டதுபோல்,
வேய்ங்குழலும் இன்னிசையைத்
தன்னுயிராய்க் காண்பதுபோல்,
கண்ணிமையை
மணிவிழிகள்
காதலியாய்ப்
பேணுதல்போல்
காரிகையாள்
கோமதியைக்
கரம்பிடிக்கும்
நீர்வாழ்க
!
மண்ணுலகில்
இல்லறத்தின்
மாண்புதனைப் போற்றிடுக !
மனத்திருளை நீக்கதிருக்
குறளொளியைப்
பெற்றிடுக
!
விண்ணுலகில்
கண்துயிலும்
மின்மினியின்
பேருலகில்
விளையாடும்
வெண்மதியும்
முகிலும்போல்
வாழ்ந்திடுக
!
************************************************
பெண்மைக்கு உயிரூட்டிப் பீடுபெற்ற கண்ணகியின்
பிறந்தகமாம் சோணாட்டின் எழுகதிரே ! கோமதியே !
உண்மைக்கு இலக்கணமாய்
உறவிற்கோர் பெட்டகமாய்
உயிர்வாழ்ந்த கலையரசி
மாதவியின் எழிற்தங்காய் !
பண்புநிறை
நம்தமிழர் பண்பாடு
போற்றிடுக
!
பாரதியின்
கனவிற்குப் பொருளாக வாழ்ந்திடுக !
திண்மையுடன்
குறள்வழியில் தலைநிமிர்ந்து
சென்றிடுக
!
துணைவரது
நெஞ்சமதைக் குடிலாக்கி
வாழ்ந்திடுக
!
இல்லறமாம்
நீர்ச்சுனையில் சிறகடிக்கும்
அன்னங்காள்
!
எதிர்காலம்
தங்களுக்கு நல்வரவு
கூறுதுகாண்
!
நல்லறங்கள்
பலவாற்றி நாவலராம்
அண்ணாபோல்,
நல்லதொரு காட்டாக நலமிகுந்து வாழ்ந்திடுக !
மெல்லிருளைக் கைவிலக்கி மேதினிக்கு ஒளியேற்றும்,
மின்பரிதி
விஞ்சுபுகழ் மேவுதமிழ்
போல்வாழ்க
!
நல்விழைவைச்
சொல்லாக்கி நான் தருவல்
வாழியவே
!
நானான்கு
செல்வமுடன் வளம்பெருக வாழியவே !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
------------------------------------------------------------------------------------------------------------
கவிபாடும் கவிஞரின் கண்களுக்கு விருந்தாக அமையும் பாடல் !
பதிலளிநீக்குஇன்பமூட்டும் இனிமை பாடல் !