name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (13) (1968) அன்பைச் சொரிந்து வரும் அருவி ! (திரு.இரமணிக்காக )

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (13) (1968) அன்பைச் சொரிந்து வரும் அருவி ! (திரு.இரமணிக்காக )


      



       கொத்து (01)                                                                           மலர் (004)
----------------------------------------------------------------------------------------------------------
                       வேலை வாய்ப்புப் பயிற்சித் துறை
இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய திரு. இரமணி அவர்கள் புதுக்கோட்டை வந்திருந்தபோது எழுதி அளித்த கவிதை
 (ஆண்டு 1968)
---------------------------------------------------------------------------------------------------------

         அன்பைச்  சொரிந்து  வரும்  அருவி ! – எளிமை
              
              அழகு  ததும்புகின்ற  ஊற்று ! – ஒளிரும்
         
         பொன்னில் உறவுகொண்ட  மேனி ! – விழியில்
              
              பொங்கி  வழிந்துவரும்  நிலவு ! – எமது
          
         நெஞ்சில்  குடிபுகுந்த  தென்றல் ! – அழியா
              
              நினைவில்  வளர்ந்துவரும்  கவிதை ! – அமுதத்
         
         தஞ்சை    உலகளித்த  தரளம் ! – மின்னும்
              
               தங்க    மது    மணிக்    கலசம் !

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-----------------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .