name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (12) (1967) அகத்தியனார் வளர்த்த மொழி ! (முப்பெரும் தலைவர்கள்)

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (12) (1967) அகத்தியனார் வளர்த்த மொழி ! (முப்பெரும் தலைவர்கள்)






            கொத்து (01)                                                                                                                      மலர் (020)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
      தமிழகத் தலைவர்களும் அவர்தம் சிறப்பும்
                               ! – கதம்ப மாலை – !
                                                      ( ஆண்டு 1967)
--------------------------------------------------------------------------------

         அகத்தியனார்  வளர்த்தமொழி  அன்னைமொழி  தமிழாம் ! – அதில்
              அடங்கியுள்ள  எழுத்துகளிள்  முதலெழுத்து   வாம் !
         மகத்தான     சாதனைகள்     நிகழ்த்திவரும்   மேதை,
              மாண்புமிகு    முதலமைச்சர்  பெயர்முதலும்  வாம் !


         பிறந்தவுடன்   குழவியது    வாய்திறந்து  அழுமாம் ! -  அந்த
              பிள்ளைதனின்  அழுகைதனில்  ஒலித்திடுதல்  வாம் !
         சிறந்தபெரும்  தவப்புதல்வர்  இராசாசி     என்பார்,
              செல்லமொழி  ஆச்சாரி””       பெயர்முதலும்  வாம் !


         உலகினையே   உருவாக்கி   உலவவிட்டான்  ஒருவன் ! – அவன்
              உற்றபெயர்   இறைவன்அதில் ஒலித்திடுதல்  யாம் !
         அலகினையும்  கூர்த்தமதி   அருள்மிகுந்த     தீரர்,
              இஸ்மாயில்  எனும்பெரியார்    பெயர்முதலும்  யாம் !



         வைகறையின்  இருளகலப்     பவனிவரும்   பரிதி ! – தினம்
              வையகத்தைச்  சாடிவரும்    வறுமையெனும்  பேயும்,
         கைகட்டி       அடங்கிவரும்,   கதிரவனாம்   அண்ணா !
              கருணைமிக்க  ஆட்சியினால்  தமிழகமும்      வாழும் !

         கப்பலுக்குத்  திசைகாட்டும்    கருவியது     விண்மீன் ! – நெஞ்சில்
              கபடமுள்ள   மனிதர்களின்   கயமையினைப்   போக்க,
         ஒப்பரிய     உத்தமராம்      உலகத்தின்     விண்மீன் !
              ஓங்குபுகழ்    இராசாசி       உள்ளவரை       சாலும் !

         இரவுதனில்  பிறைமதியும்  குளிர்நிலவைப்  பொழியும்வாழ்வில்
              இன்னலுறும்    மாந்தரது     இடர்ப்பாடு     நீங்கும் !
         புரவலராம்  இஸ்மாயில்   பிறைமதியாம் !  அன்னார்,
              புவிமிசையில்   வாழும்வரை  பயநினைவும்  வேண்டா ! 

         உயிருக்கு  ஒளியூட்டி     உய்விக்கும்   கோள்கள் ! – விண்ணில்
              ஒளிப்பிழம்பு   பானுமதி    விண்மீன்கள்     மூன்று !
         பயிருக்கு   வேலியிட்டுப்  பாதுகாக்கும்  தலைவர்  - நமக்கு
              பானுமதி     விண்மீனாய்  விளங்குகின்றார்  உண்மை !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. தமிழ்க் கடலே ! தவக் கொழுந்தே !
    தமிழமுதில் கவி படைக்கும் பிரம்மாவே !தமிழ் மொழி கொஞ்சிடுவாள் !அன்னையவள்
    தம் பிள்ளையாய்ப் பெற்றதற்கு !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .