கொத்து (01) மலர் (13)
-----------------------------------------------------------------------------------------------------------
பாபநாசத்தில் விளைந்த பைங்கூழ் !
(ஆண்டு 1965)
பொங்கல் வாழ்த்து !
-------------------------------------------------------------------------------------------------------------------------------
எருதிரண்டைத் துணையாக்கி
ஏர்முனையின் காலடியில்
இயங்கும் மாந்தன்,
குருதிதனைக் கழனிதனில்
கொட்டிவிளை கதிர்மணிகள்
குதிரில் சேர்க்க,
துரிதியங்கும் தாரணியின்
தூமடியில் ஆசிகளைத்
தூவிச் செல்லும்,
பரிதியவன் பூவுலகின்
பாதிதனைத் தாண்டிவடல்
பார்க்கும் நன்னாள் !
உள்ளத்தின் கதவுகளை
உறுதியுடன் தாளிட்டு
உழைப்பைத் தேடி,
பள்ளமதில், சேறுதனில்,
பணிமனையில், காடுகளில்
பாயும் நீரில்,
கள்ளமிலா நெஞ்சமுடன்
கால்கடுக்கக் கைநோவக்
காயும் மாந்தன்,
பிள்ளையுடன் மனைவிமனைப்
பெருங்கிளையும் கூட;இன்பம்
பெருகும் நன்னாள் !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
உங்கள் வாழ்த்துகள் பெற்றேன் ஐயா !
பதிலளிநீக்கு