name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (16) (1968) கழனியில் விளையும் கதிர்நெல் ! (பொங்கல் வாழ்த்துக் கவிதை)

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (16) (1968) கழனியில் விளையும் கதிர்நெல் ! (பொங்கல் வாழ்த்துக் கவிதை)





           கொத்து (01)                                                                    மலர் (016)
-----------------------------------------------------------------------------------------------------------
        பாபநாசத்தில் பணி புரிகையில் எழுதிய     
                           பொங்கல் வாழ்த்து !
                                       (ஆண்டு 1968)
-----------------------------------------------------------------------------------------------------------

             கழனியில்  விளையும்  கதிர்நெல்  மணிகள் !
                 காவினில்  விளையும்  கமுகும்  தெங்கும் !
             செழுமணல்  விளையும்  செயிர்தீர்  கரும்பு !
                 செம்மண் விளையும்  பைங்கனி  வாழை !
             புழுதியில்  விளையும்  பொன்மணி  மஞ்சள் !
                 பொடிமணல்  விளையும்  பூவா   இஞ்சி !
             கழிநிலம்   விளையும்   கவின்சா   மந்தி !
                 கலந்துற  வருவாள்  கனித்தமிழ்த் தையல் !
             விழுமிய  பொங்கல்  விளைத்திட  வருவாள் !
                 வேதனை  தீர்த்து  வாழ்ந்திட அருள்வாள் !
             உழைத்திடும்  மக்கள்  உவப்புடன்  மகிழ்வார் !
                 உள்ளம்  நிறைவுற  நலம்பெற  வாழ்வோம் !

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

 

--------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .