தமிழில் பெயர் சூட்டுவோம் !
”ப” வரிசை வடமொழிப் பெயர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.
------------------------------------------------------------------------------------------------
பகவத்..........................................=
பகவான்
பக்தவத்சலன்............................=
அடியார்க்கு நல்லார்
பங்கஜம்......................................= தாமரை
பசுபதி.(பசு=உயிர், கோ).........= கோவேந்தன்
பச்சியம்மாள் (உமா)................= மலையரசி
பச்சையப்பன் (திருமால்).......=
மாயவன்
பஞ்சநதம்....................................= ஐயாறப்பன்
பஞ்சலிங்கம்..............................= ஐயிலங்கன்.
பஞ்சாட்சரம்...............................= ஐந்தெழுத்தன்
பட்சிராஜன்.................................=
புள்ளரசு
பண்டரிநாதன்...........................=
தாமரைச் செல்வன்
பதி (தலைவன், கணவன்).......= அரசு,
பத்மநாபன் .................................=
திருவரங்கன்
பத்மபூஷன்..................................=
தாமரை சூடி
பத்மாசனி....................................=
திருமகள்
பத்மாவதி.....................................=
தாமரைச்செல்வி
பரஞ்சோதி...................................= பரஞ்சுடர்
பரமசிவன்....................................=
உமா மணாளன்
பரமன் (சிவன்)............................=
கயிலைவாணன்
பரிமளம் (நறுமணம்)................=
மணமல்லி
பர்வதபுத்திரி (மலை)................=
மலைமகள்
பர்வதம் (மலை=சிலம்பு)..........=
சிலம்புச் செல்வி
பர்வதராஜபுத்திரி......................=
மலைமங்கை
பர்வதராஜன்................................=
பூங்குன்றன்
பவானி..........................................= உமையவள்
பவித்திரா......................................= தூயமலர்
பவித்திரா......................................=
தூய மணி
பவுன்ராசு......................................=
பொன்னரசு
பற்குணன் (அர்ச்சுனன்.)............= பொன்னரசு
பாக்கியம்.......................................=
செல்வி
பாக்கியவதி...................................=
நலச்செல்வி
பாரதி...............................................=
நாமகள்
பார்த்தசாரதி.................................=
மணிவண்ணன்
பார்த்திபன் (அர்ச்சுனன்)...........= பொற்செல்வன்
பார்த்திபன் ....................................=
அரசு / மன்னன்
பார்வதி............................................=
மலைமகள்
பாலகிருஷ்ணன்...........................= இளவழகன்
பாலகோபால்.................................= இளங்கண்ணன்
பாலசுந்தரம்....................................=
இளவழகன்
பாலச்சந்திரன்...............................=
இளம்பிறை
பாலமுரளி........................................= குழலினியன்
பாலாஜி.............................................= மணிவண்ணன்
பாவாயி.............................................= பாவரசி
பானு (சூரியன்)...............................=
சுடரொளி
பாஸ்கரன்.........................................= பரிதி
பாஷ்யம் (உரை).............................=
நன்மொழி
பிச்சமூர்த்தி (சிவன்).....................= பிறைசூடி
பிச்சாடனன்.(இரவலன்)................= சிவன்
பிச்சை...............................................=
ஈசன்
பிரகாசம்...........................................=
பேரொளி
பிரகாஷ்............................................=
பேரொளி
பிரபஞ்சன்........................................=
பூவேந்தன்
பிரபா (ஒளி).....................................=
ஒளிமதி
பிரபு (பெருந்தகை)........................=
பேரண்ணல்
பிரமநாயகம்...................................=
இறையண்ணல்
பிரமானந்தன்..................................=
பேரின்பன்
பிரஜாபதி..........................................=
அரசு
பிரஹதீஸ்வரன்...............................= பேரரசு
பிரியா (பெண், காதலி).................=
அன்பழகி
பிருதிவிராஜ்.....................................=
பூவேந்தன்
பிரேமா...............................................=
அன்புச்செல்வி
பினாகபாணி (பினாகம்=வில்)....= வில்லாளன்
பீதாம்பரம் (பீதம்=பொன்)............=
பொன்மேனி
புண்டரீகம் (பண்டரி)......................=
தாமரை
புண்ணியமூர்த்தி.............................=
அறவாணன்
புருஷோத்தமன்................................= ஆண்டகை
புவனா.................................................=
பூமகள்
புவனேஸ்வரி.....................................=
பூவரசி
புஜங்கன் (பாம்பு) ............................= அரவண்ணல்
புஷ்பமாலா.........................................= பூங்கோதை
புஷ்பவல்லி........................................=
பூங்கொடி
புஷ்பவனம்.........................................=
பூஞ்சோலை
புஷ்பா / புஷ்பம்................................=
பூம்பாவை / மலர்
புஷ்பாசலம்........................................=
பூங்குன்றன்
பூதலிங்கம் (நிலம்,நீர்,தீ,வளி,வெளி)...........= ஐயிலங்கம்
பூரணச்சந்திரன்...............................=
நிறைமதி
பூரணி.................................................=
நிறைமதி
பூர்ணலிங்கம்....................................= திருவிலங்கன்
பூஜா (புகழ்ந்து வழிபடல்).............=
புகழரசி
பூஷன் (சூடியவன்)..........................=
ஏந்தல்
பெத்தபெருமாள்...............................= மாதவன்
பேய்ச்சியப்பன் (சிவன்).................=
சுடர்வேந்தன்
பைரவன் ............................................= பேமுருவன்
--------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051,மீனம்(பங்குனி),23]
{05-04-2020}
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .