புதுச்சொல் புனைவோம் !
REGULATOR = கலிங்கு
--------------------------------------------------------------------------------------------
ஆற்றில் குதித்துச் சுழித்து
ஓடி வரும் நீருக்கு வேகம் அதிகம். அதன் வேகத்தை மட்டுப்படுத்தித் தேவையான அளவுக்கு
மட்டும் நீரைத் திருப்பி விட்டு, நெற்பயிர் வயல்களுக்குக் கொண்டு செல்ல வாய்க்கால்கள் தேவை !
அகன்ற நீர்ப்பரப்பான ஆற்றிலிருந்து குறுகியஅகலமுள்ள வாய்க்காலுக்கு நீரினை மடை மாற்றி அனுப்பவும், வாய்க்காலில் செல்லும் நீரின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யவும் வசதியாக வாய்க்கால் தலைப்பில் கலிங்கு என்ற ஒரு அமைப்பு நிறுவப் பட்டிருக்கும் !
கலிங்கு என்பது ஆற்றுக்கும் வாய்க்காலுக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்தித் தரும் ஒரு கட்டமைப்பு, செங்கல் மற்றும் பைஞ்சுதை (Cement) கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த குறுகிய வழியில், மேலே ஏற்றி இறக்கக் கூடிய இருப்புத் தடுப்பு (Steel Shutter) ஒன்று திருகுத் தூக்கு அமைப்புடன் நிறுவப்பட்டிரும் !
திருகுத் தூக்கியை இயக்கி இருப்புத் தடுப்பினை மேலே ஏற்றவும் அல்லது கீழே இறக்கவும் முடியும். இதன் மூலம் ஆற்றிலிருந்து வாய்க்காலுக்குச் செல்லும் நீரின் அளவைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்க முடியும் !
வாய்க்கால் தலைப்புகளில் கட்டப்பட்டிருக்கும் ”கலிங்கு” என்ற இந்த அமைப்பின் பணி, தேவைக்கேற்ப வாய்க்காலில் விடப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவது தான். இந்தக் கலிங்கின் மூலம் வாய்க்காலில் செல்லும் நீரின் அளவை அதிகரிக்கவும் செய்யலாம்; குறைக்கவும் செய்யலாம் !
இந்தக் கலிங்கினை ஆங்கிலத்தில் ரெகுலேட்டர் என்று சொல்வது வழக்கம். ரெகுலேட்டர் என்பது கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு; அவ்வளவு தான் !
ரெகுலேட்டர் ( Regulator ) என்பதைக் கட்டுப்படுத்தும் அமைப்பு, கட்டுப்படுத்தும் சாதனம், கட்டுப்படுத்தி, கட்டுறுத்தி, சமநிலைப் பொறி என்றெல்லாம் பலவாறு மொழி பெயர்க்கப்படுகிறது. இப்பொழுதும், வேளாண் பெருமக்களிடம் வழக்கில் உள்ள “ கலிங்கு ” என்ற சொல் இருக்கையில் வேறு சொற்களைத் தேடி அலைவது ஏன் ?
“ கலிங்கு “ என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !
=====================================================
REGULATOR |
= கலிங்கு |
FAN REGULATOR |
= விசிறிக் கலிங்கு |
GAS REGULATOR |
= வளிமக் கலிங்கு |
AIR REGULATOR |
= காற்றுக் கலிங்கு |
OIL REGULATOR |
= எண்ணெய்க் கலிங்கு |
HEAT REGULATOR |
= வெப்பக் கலிங்கு |
=======================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@mail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.
(13-12-2015}
=====================================================
அழகிய தமிழ்ச் சொல் கலிங்கு. பயன்படுத்த எளிதானது. தொடர்க தங்கள் பணி.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி !
பதிலளிநீக்குவழக்கத்தில் உள்ள சொல்லைப் பயன்படுத்தி புதிய கருவிகளுக்குப் பெயர் சூட்டும் முயற்சி வரவேற்கக் கூடியது !
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்கு