name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் விளக்கம்
பெயர் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயர் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 07, 2019

பெயர் விளக்கம் (28) லிங்கம் -பெயரின் பொருள் என்ன ?

”லிங்கம்” என்பது எதைக் குறிக்கிறது ? 


சிவபெருமானை லிங்கம்வடிவில்    கோயில்களில்    நிறுவி      மக்கள் வழிபடுகின்றனர். ” லிங்கம்என்ற வடமொழிச் சொல்லுக்கு     இலங்கம் என்ற தமிழ்ச் சொல்லை பாவாணர் அவர்கள்  அறிமுகப்படுத்தி உள்ளார்

இந்தலிங்கம்என்ற சொல் தனித்து நின்றோ அல்லது பிற சொற்களுடன் இணைந்தோ மக்கட் பெயர்களாகி குழந்தைகளுக்குச் சூட்டப் பெறுவதைக் காண்கிறோம். ” லிங்கம்என்னும் முன்னொட்டு அல்லது பின்னொட்டுடன் பல பெயர்கள் வழங்கிவருகின்றன !

லிங்கம்என்ற சொல்லுக்கு அடையாளம், சிவனுரு, விழியின் நடுவில் இருக்கும் பாவை; ஆண்குறி எனப் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக லிங்கம் என்பது சிவனைக் குறிக்கும் ஒரு அடையாளம் அல்லது குறியீடுலிங்கம் என்பதை முன்னொட்டாகவோ பின்னொட்டகவோ கொண்டு அமைந்துள்ள மாந்தப் பெயர்களையும், அவற்றுக்கு இணையான அல்லது இணையில்லாவிடினும் பொருத்தமான  தமிழ்ப் பெயர்களையும் காண்போம் !

சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்வது சிறப்பாக இராது. பூவராகன் என்றால் நிலப்பன்றி என்று பொருள். (பூ=நிலம்; வராகம்=பன்றி)  நிலப் பன்றி என்று யாருக்காவது பெயர் சூட்ட முடியுமா ? வராக அவதாரம் எடுத்த திருமால் என்னும் வகையில் பூவராகன் என்றால் மாலன் என்று மொழியாக்கம் செய்யலாம்.  பூவராகன் என்ற சொல்லின் பொருளை  மாலன் என்ற சொல் எதிரொலிக்க வில்லையே என்று யாரும் கேட்கலாகாது !
  
இனி, பெயர்ப் பட்டியலைப் பார்ப்போம் !

-----------------------------------------------------------------------------------------------------


அமிர்தலிங்கம் (அமிர்தம்=அமுது)...........= அமுதன்
ஆத்மலிங்கம் (ஆத்மா = உயிர்).................= உயிரொளி
இராமலிங்கம் (இராமம்=எழில்)................= எழிலரசு
ஓமலிங்கம் (ஓமம்=வேள்வி)........................= வேள்விச்செல்வன்
கனகலிங்கம் (கனகம்=தங்கம்).................= பொற்செல்வன்
காத்தலிங்கம் (காத்தல்=புரப்பு)................= மாமன்னன்
குற்றாலலிங்கம்(குறுமை+ஆல்+லிங்கம்)................= ஆலமர்செல்வன்.
கூடலிங்கம் (கூடல்=மதுரை).......................= கூடலரசன்
கூத்தலிங்கம் (கூத்து=நடனம்)....................= கூத்தபிரான்
சாந்தலிங்கம் (சாந்தம்=பொறை).............= பொறையண்ணல்
சுந்தரலிங்கம் (சுந்தரம்=அழகு)..................= அழகரசு
சொக்கலிங்கம் (சொக்கன்=அழகன்).......= எழிலரசு.
சொர்ணலிங்கம் (சொர்ணம்=பொன்)......= பொற்செல்வன்
சோமலிங்கம் (சோமம்=சந்திரன்)..............= மதியொளி
ஞானலிங்கம் (ஞானம் = அறிவு)..................= அறிவுக்கரசு
தருமலிங்கம் (தருமம்=அறம்).......................= அறவாணன்
நாகலிங்கம் (நாகம்=முகில்)..........................= முகிலரசு
பர்வதலிங்கம் (பர்வதம்=மலை)...................= சிலம்பரசு
பூதலிங்கம் (பூதம்=ஐம்பூதங்கள்).................= உலகநம்பி
பூர்ணலிங்கம்(பூர்ணம்=நிறைவு).................= நிறைமதியன்
பூவலிங்கம் (பூவன்=பூவிலுள்ளவன்)...........= பூவாணன்
பொன்னுலிங்கம் (பொன்னு=பொன்)..........= பொன்வண்ணன்
மகாலிங்கம் (மகா=பெரிய)...........................= பேரரசு
லிங்கன் ( லிங்க வடிவன் )..............................= திருவிலங்கன்
லிங்குசாமி (லிங்கம்=இலங்கம்)...................= மாவிலங்கன்
லிங்கோற்பவன் (உற்பவம்=முகிழ்ப்பு)........= முகிழன்
வேதலிங்கம் (வேதம்=மறை)..........................= மறைமணி
வைத்தியலிங்கம் (வைத்தியம்)....................= உறைவாணன்

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{27-08-2018}
--------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------



பெயர் விளக்கம் (27) இராமன் - பெயரின் பொருள் என்ன ?

  இராமன் எத்தனை இராமனடி ! 


இராமன் என்பது மறவனப்பு (இதிகாச)ப் பெயர். இராமாயணக் கதையின் நாயகன். இராமம் என்றால் தமிழில் அழகு, ஆசை, விரும்பத்தக்கது  என்று பொருள். இராமன் என்றால் அழகு மிக்கவன், அதாவது எழிலன் என்று பெயர். இராமன்  திருமாலின் தோற்றரவு (அவதார) வடிவங்களில் ஒன்று என்ற கதை அனைவருக்கும் தெரியும். இராமன் என்ற பெயரின் அடிப்படையில் பல பெயர்கள் தமிழகத்தில் குழந்தைகளுக்கு வைக்கப்படுகின்றன. பெரும்பாலான பெயர்கள் சமற்கிருதத்தில் அமைந்தவை. இராமன் என்ற பெயர் தாங்கிய இறைவழிச் சமற்கிருதப்  பெயர்களையும், அவற்றுக்கு இணையான  அல்லது பொருத்தமான தமிழ்ப் பெயர்களையும் அறிவோமா !


----------------------------------------------------------------------------------------------------------


                                        ·         இராமகிருஷ்ணன்........= எழில்மாலன்
                                        ·         இராமசாமி......................= எழிலரசன்
                                        ·         இராமசுப்பு......................= தூயமணி
                                        ·         இராமச்சந்திரன்............= எழில்நிலவன்
                                        ·         இராமசேது (சேது=கரை)..= கடலழகன்
                                        ·         இராமதாஸ்..................... = எழிலடியார்
                                        ·         இராமநாதன்.................  = எழிலேந்தல்
                                        ·         இராமமூர்த்தி................. = எழிலண்ணல்
                                        ·         இராமராஜன்................ . = எழிலரசன்
                                        ·         இராமலிங்கம்...............  = எழில்வாணன்
                                        ·         இராமன் (அழகன்)........ = எழிலன்
                                        ·         இராமஜெயம்.................. = வெற்றியழகன்
                                        ·         இராமாநுஜன்.................. = எழிலடியார்
                                        ·         இராமாமிர்தம்................ = எழிலமுதன்
                                        ·         இராமு................................ = எழிலன்
                                        ·         காகுத்தன்......................... = எழிலன்
                                        ·         கோதண்டபாணி............ = வில்லாளன்
                                        ·         கோதண்டராமன்........... = வில்லாளன்
                                        ·         ஜெயராமன்.......................= வெற்றியழகன்
                                        ·         சீத்தாராமன்......................= பனியெழிலன்
                                        ·         கோசலராமன்...................= இளவரசன்
                                        ·         தசரதராமன்......................= பைந்தேரழகன்
                                        ·         அனந்தராமன்...................= பேரெழிலன்
                                        ·         சிவராமன்...........................= சேயெழிலன்

---------------------------------------------------------------------------------------------------------

(இராமம் = எழில்); (கிருஷ்ணன் = மாலன்) (சாமி=தலைவன்=அரசன்) (இராமம்=எழில்) (சுப்பு=தூயவன்)  தசரதன்= பத்துத் தேர் (பைந்தேர்)  உடையவன் =  சிவம் = சிவப்பு

--------------------------------------------------------------------------------------------------------
                
 ஆக்கம் + இடுகை:
 வை.வேதரெத்தினம்,
 ஆட்சியர்,
 தமிழ்ப் பணி மன்றம்.
 [தி.: 2050,மீனம், 12] 
{26-03-2019}

-------------------------------------------------------------------------------------------------------
      
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------





பெயர் விளக்கம் (26) தொப்பையப்பன் - பெயரின் பொருள் என்ன ?

இலம்போதரன் என்னும் தொப்பையப்பன் !


சிவபெருமானின்  தலைப் பிள்ளையாகக் கருதப்படும் விநாயகருக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. சமற்கிருதத்திலும், தமிழிலுமாக அமைந்திருக்கும் விநாயகப் பெருமானின் பெயர்களுக்கு எல்லாம் என்ன பொருள் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூற இயலாது. அவரது பெயர்களின் பொருளுடன் இணையான அல்லது பொருத்தமான தமிழ்ப் பெயர்களையும் தெரிந்து கொள்வோமே ! 

-----------------------------------------------------------------------------------------------------
           

             ·         கணபதி (பூத கணத் தலைவன்).................= வேழமுகன்
             ·         கணேசன் (பூத கணங்களின் ஈசன்).......... = கயமுகன்
             ·         லம்போதரன் (பெருவயிறு உடையவன்)....= கார்முகன்
             ·         விக்னேஸ்வரன் (கேடு தீர்ப்பவன்)..........= ஆனைமுகன்
             ·         மாதங்கன் (மாதங்கம்=யானை)................ = வேழமுகன்
             ·         அங்குசபாணி (அங்குசம்=துரட்டி;).......... = கம்பமுகன்
             ·         ஐங்கரன்............................................= தும்பிமுகன்
             ·         கணநாதன் (பூத கணங்களின் தலைவன்)....= வேழமுகன்
             ·         கணாதிபன் (கணங்களின் தலைவன்)......= சிவக்கொழுந்து
             ·         தொப்பையப்பன்............................= பிள்ளையார்
             ·         தொப்பையன்..................................= வேழமுகன்
             ·         தொப்புளான்....................................= சிவமழலை
             ·         கஜமுகன்...........................................= ஆனைமுகன்
             ·         ஏகதந்தன்...........................................= உமாமைந்தன்
             ·         ஹேரம்பன்........................................= சிவச்செல்வன்
             ·         திரியம்பரன்.....................................= வேழவேந்தன்
             ·         மகோதரன்........................................= களிற்றண்ணல்

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{12-09-2018}
--------------------------------------------------------------------------------------------------------
        
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------