name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயரியல் ஆய்வு
பெயரியல் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயரியல் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 20, 2020

பெயரியல் ஆய்வு (08) மதுரபாஷினி

பொருள் புரியாமலேயே  குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறோம் ! 

குழந்தைகளுக்கு வைக்கபெறும் வடமொழிப் பெயர்களில் பெரும்பான்மையானவை கடவுள் பெயர்களாகவே இருப்பதைக் காணலாம். இதற்கு என்ன  காரணம் ? ஆரியர்கள் சமற்கிருதத்தைப் பரப்புவதற்குப் பல சூழ்ச்சிகளைக் கையாண்டனர். அவற்றுள் ஒன்று தான் மக்களை அச்சப்படுத்தி அவர்களைத்  தம்வயப்படுத்தல் !

இயற்கை நிகழ்வுகளான இடி, மின்னல், புயல், வெள்ளம், ஆகியவற்றைக் கண்டு பண்டைய மனிதன் அச்சப்பட்டான். அனைத்தையும் அழிக்கவல்ல தீ (நெருப்பு), நச்சுப் பாம்புகள் ஆகியவையும் அவனை அச்சப்படுத்தின ! அவற்றை அமைதிப்படுத்தினால், தன்னைத் தற்காத்துக் கொள்ளமுடியும் என்று அவன் நம்பினான் !

இதன் அடிப்படையில் தோன்றியதே வழிபாடு ! மனிதனுக்குத் துன்பம் தரும் வல்லமை உள்ளவைகளை வணங்கினால், அவை தமக்குத் துன்பம் விளைவிக்காது என்று கருதி அவற்றை வழிபடத் தொடங்கினான் !

பண்டைய மக்களிடம் உறைந்து கிடந்த இந்த அச்ச உணர்வை ஆரியர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்பினார்கள். அதுவரை இயற்கையை மட்டுமே வணங்கி வந்த தமிழ் மக்கள், ஆரியர்கள் கற்பித்த  நூற்றுக் கணக்கான கடவுளர்களையும், அவர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட வலிமைகளையும் நம்பத் தொடங்கினர் !

காலப் போக்கில், பல  தொன்மக் (புராணம்) கதைகளையும், மறவனப்புக் (இதிகாசம்) கதைகளையும் உருவாக்கி, மக்களிடையே அவற்றைப் பரப்பலாயினர்.  கதைமாந்தர்கள் பெயர்கள் அனைத்தையும் வடமொழிப் பெயர்களாவே உருவாக்கத் தொடங்கினர் !

ஆரியர்கள் உருவாக்கிவிட்ட கடவுளர்களை வணங்க வேண்டும் எனவும், இல்லையேல் அவை மனிதர்களை தீங்கு செய்யும் என்றும் கதைகட்டிவிட்டனர். கடவுளர்களை அமைதிப்படுத்த அவற்றுக்கு உணவுப் படையல் முதல் உயிர்ப் படையல் வரை செய்யவேண்டும் எனவும் கற்பித்தனர் !

கடவுள் பெயர்களை மனிதர்களுக்கு வைத்துக் கொண்டால், அவர்களைத் துன்பங்கள் அணுகா என்னும் தன்னல  அடிப்படையில், மனிதர்கள் கடவுள் பெயர்களைச் சூட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள். ஆரியர்கள் உருவாக்கிய அனைத்துக் கடவுள் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே இருந்தமையால், இக்காலத்திம் நாம் காணும் மாந்தப் பெயர்கள் அனைத்தும் வடமொழிப் பெயர்களாகவே இருக்கக் காண்கிறோம் !

மனிதர்கள் தன் மனைவி மக்கள் மீது வைத்திருக்கும் இயற்கையான பற்றின் (பாசம்) காரணமாக,  அவர்களது நலனுக்காக என்று சொல்லி யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்; நம்புகிறார்கள் !  எந்தக் கோயிலுக்குப் போகச் சொன்னாலும் போகிறார்கள்; எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை அப்படியே ஏற்று, இணையத்தில்  பெயர் தேடி உலவுகிறார்கள் !

தான் செய்வது சரியா தவறா என்று எந்த மனிதனும் சிந்திப்பதே இல்லை ! இப்படித்தான், ஆரியர்களின் கான்முளையான பார்ப்பனர்களும், வயிற்றுப் பிழைப்பிற்காக ஏமாற்றித் திரியும் கணியர்களும் (சோதிடர்) மனைக் கணியர்களும் (வாஸ்து) வடமொழியின் முகவர்களாக மாறித் தமிழ்நாட்டில், தமிழை வீழ்த்திக் கொண்டிருக்கிறாரகள் !

சரி ! ”மதுரபாஷினிஎன்று தன் மகளுக்கு ஒரு தமிழாசிரியர் பெயர் வைத்திருப்பதைக் கண்டு வியந்து போனேன் ! இதற்குப் பொருள் என்ன ? மதுரம் என்றால் இனிமை; “பாஷினிஎன்றால்மொழிபவள்” ; (பாஷை > பாஷினி) எனவேமதுரபாஷினி  என்றால்இன்மொழிஎன்று பொருள். இவர் போன்ற தமிழாசிரியர்கள் தான் இன்று தமிழ்நாட்டில் தமிழுணர்வு குறைந்து போனமைக்குக் காரணம் ! “மதுரம்தொடர்புடைய வேறு சில பெயர்களைக் காண்போமா ? தமிழில் மது என்னும் சொல்லுக்கு இனிமை, தேன், கள், அமுது, நீர், பால், இளவேனில் என்றெல்லாம் பொருள் உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------
                       மது.........................= தேன்
                       மதுமதி.................= தேன்மதி  /  இன்மதி
                       மதுபாலா.............= இளவேனில்
                       மதுரம்...................= தேன்மொழி
                       மதுரபாஷினி.....= இன்மொழி
                       மாதுரி....................= அமுதமொழி
                       மாதுரி தேவி........= தமிழமுது
-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051, சுறவம் (தை),22]
{05-02-2020}
-----------------------------------------------------------------------------------------------------------

வியாழன், மார்ச் 26, 2020

பெயரியல் ஆய்வு (07) ஹேமலதா !

பொருள் புரியாத பெயர்களின் பால் மக்களுக்கு ஒரு ஈர்ப்பு !

தமிழகத்தில் படிக்காத மக்ககளிடம் மூடநம்பிக்கைகள் நிரம்ப இருக்கின்றன; படித்த மக்களிடம் குறைவாக இருக்கின்றன; அவ்வளவு தான் ! மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது தானே படித்தவர்களுக்கு அழகு; படிப்புக்கும் அழகு !

படிப்புதான் மனிதனுக்குப் பகுத்தறிந்து அலசும்  அறிவைத் தருகிறது. எதிலும் நல்லது, கெட்டது பற்றிய பகுப்பாய்வை அவனால் மேற்கொள்ள முடிகிறது. ஆனாலும் கூட, சில நேர்வுகளில் எத்துணை அதிகமாகப் படித்திருந்தாலும் அறிவுக்கு வேலை தராமல் நம்பிக்கைக்கு மட்டும் இடம் தந்து மனிதன் செயல்படுவதைக் காண்கிறோம். அவன் நம்பிக்கை வைக்கும் எதுவும் அறிவார்ந்த முடிவுகளுக்கு முரண்படாத வரை அதனால் இடையூறு இருப்பதில்லை ! ஆனால் அவர்களது நம்பிக்கை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்குமேயானால், அவை மூடநம்பிக்கைகள் ஆகிவிடுகின்றன !

கற்றறிந்த மாந்தர்களிடம் மூட நம்பிக்கை இருப்பது மக்கள் குமுகாயத்தையே அழிவுப் பதைக்கு அழைத்துச் சென்றுவிடும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வரும்போது சூரிய மறைப்பு (சூரிய கிரகணம்) ஏற்படுகிறது என்பது படிப்பறிவுள்ள மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், அந்த நேரத்தில் கற்றறிந்த மாந்தர் சிலர் உண்ணாநிலை மேற்கொள்வதும், சூரிய மறைப்பு முடிந்த பின்னர் நீராடி இறைவனை வழிபடுவதும், மூடநம்பிக்கை அல்லவா ?

ஆங்கிலவழிக் கல்வியளித்தால் தம் பிள்ளைகள் விரைவாக வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று கற்றறிந்த பெற்றோர்கள் முற்றிலுமாக நம்புவதும் அதற்காகத் தன் வருமானத்தில் பெரும் பகுதியை பதின்மப் பள்ளிகளில் கொண்டுபோய்க் கொட்டிக் கடன்காரர்கள் ஆவதும்  மூடநம்பிக்கையன்றி வேறென்ன ? தமிழ்வழிக் கல்வி தான் பாடங்களை ஐயந் திரிபறப் புரிந்துகொள்ளவும், இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் உதவும் என்பதை, இவர்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது மூடநம்பிக்கை அல்லவா ?

இத்தகைய மூடநம்பிக்கைகளில் ஒன்று தான் சில எழுத்துகளை வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு இணையத்தில் பெயர் தேடி அலைவது ! பூசநாளில் (விண்மீன்) குழந்தை பிறந்திருந்தால், அந்தக் குழந்தைக்கு ஹூ, ஹே, ஹோ, டா என்ற நான்கு எழுத்துகளில் ஏதாவதொன்றை முதலெழுத்தாகக் கொண்டுப் பெயர் தேடி அலைகிறார்கள் ! இந்த எழுத்துகளில் தமிழ்ப் பெயரே இராது. இறுதியில் டாட்டா, டாங்கே, டார்வின் என்று பெயர் வைக்கிறான் தமிழை மறந்த  தமிழன் !

படிக்காத மக்கள் யாரும் இப்படிப் பெயர் வைப்பதற்கு அலைவதில்லை. முன்னோர் பெயரையோ, கடவுள் பெயரையோ சூட்டி விட்டு அவர்கள் தம் வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். படித்த தமிழன் தான், பிறந்த நாண்மீனுக்கு ஏற்பப் பெயர் தேடி இணையத்தில் துழாவி, இறுதியில் பொருளே இல்லாதரூமியா”, ”டிம்பிள்”, “துஷி” ”மினிமிடாஎன்றெல்லாம் தன் குழந்தைக்குப் பெயர்வைத்துத் தன்னை முட்டாளாக்கிக் கொள்கிறான் ! மூடநம்பிக்கைக் காரனாகத் தன்னைப் பறை சாற்றிக் கொள்கிறான் !

பிறந்த நாண்மீனுக்கு ஏற்பப் பெயர் வைக்க வேண்டும் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ? இதைப் படிக்கும் யாராவது அந்த நூலின் பெயரைச் சொல்லுங்கள். அப்படி ஒரு நூல் இருந்தால் குறிப்பிட்ட அந்தப் பக்கத்தை ஒளிப்படம் எடுத்துத் தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிடுங்கள்.  அப்படி எந்த நூலிலும் சொல்லப்படவில்லை என்பதே உண்மை !

சரி ! ஏமலதா, சொர்ணலதா என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அதன் பொருள் புரியுமா ?  புரியாமல், ஏதோ மூட்டை சுமப்பதைப் போல் அந்தப் பெயர்களைச் சுமந்துகொண்டு இருக்கிறார்கள். ஏமம் = பொன்; லதா = கொடி; ஏமலதா = பொற்கொடி. பொருள் புரியும்பொற்கொடியைவிட்டுவிட்டுபொருள் புரியாதஏமலதா” (ஹேமலதா) என்னும் பெயரைச் சூடலாமா ? இஃதுள்பட வேறு சில பெயர்களின் பொருளைப் பார்ப்போமா !

------------------------------------------------------------------------------------------------------------

                 ஹேமலதா (ஏமம் = பொன்)......................= பொற்கொடி
                 ஹேமச்சந்திரன்............................................= பொன்மதி
                 ஸ்வர்ணலதா (சொர்ணம் = பொன்) ....= பொற்கொடி
                 ஸ்வர்ணா.........................................................= பொன்னி
                 சொர்ணகுமார்..............................................= பொற்செல்வன்
                 சொர்ணகுமாரி.............................................= பொற்செல்வி
                 புஷ்பலதா (புஷ்பம் = பூ)............................= பூங்கொடி

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),25]
{08-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

திங்கள், பிப்ரவரி 10, 2020

பெயரியல் ஆய்வு (06) - மது !

மது என்பது இனிமையைக் குறிக்கும் சொல் !

குழந்தைகளுக்கு வைக்கபெறும் வடமொழிப் பெயர்களில் பெரும்பான்மையானவை கடவுள் பெயர்களாகவே இருப்பதைக் காணலாம். இதற்கு என்ன  காரணம் ? ஆரியர்கள் சமற்கிருதத்தைப் பரப்புவதற்குப் பல சூழ்ச்சிகளைக் கையாண்டனர். அவற்றுள் ஒன்று தான் மக்களை அச்சப்படுத்தி அவர்களைத்  தம்வயப்படுத்தல் !

இயற்கை நிகழ்வுகளான இடி, மின்னல், புயல், வெள்ளம், ஆகியவற்றைக் கண்டு பண்டைய மனிதன் அச்சப்பட்டான். அனைத்தையும் அழிக்கவல்ல தீ (நெருப்பு), நச்சுப் பாம்புகள் ஆகியவையும் அவனை அச்சப்படுத்தின ! அவற்றை அமைதிப்படுத்தினால், தன்னைத் தற்காத்துக் கொள்ளமுடியும் என்று அவன் நம்பினான் !

இதன் அடிப்படையில் தோன்றியதே வழிபாடு ! மனிதனுக்குத் துன்பம் தரும் வல்லமை உள்ளவைகளை வணங்கினால், அவை தமக்குத் துன்பம் விளைவிக்காது என்று கருதி அவற்றை வழிபடத் தொடங்கினான் !

பண்டைய மக்களிடம் உறைந்து கிடந்த இந்த அச்ச உணர்வை ஆரியர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்பினார்கள். அதுவரை இயற்கையை மட்டுமே வணங்கி வந்த தமிழ் மக்கள், ஆரியர்கள் கற்பித்த  நூற்றுக் கணக்கான கடவுளர்களையும், அவர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட வலிமைகளையும் நம்பத் தொடங்கினர் !

காலப் போக்கில், பல  தொன்மக் (புராணம்) கதைகளையும், மறவனப்புக் (இதிகாசம்) கதைகளையும் உருவாக்கி, மக்களிடையே அவற்றைப் பரப்பலாயினர்கதைமாந்தர்கள் பெயர்கள் அனைத்தையும் வடமொழிப் பெயர்களாவே உருவாக்கத் தொடங்கினர் !

ஆரியர்கள் உருவாக்கிவிட்ட கடவுளர்களை வணங்க வேண்டும் எனவும், இல்லையேல் அவை மனிதர்களை தீங்கு செய்யும் என்றும் கதைகட்டிவிட்டனர். கடவுளர்களை அமைதிப்படுத்த அவற்றுக்கு உணவுப் படையல் முதல் உயிர்ப் படையல் வரை செய்யவேண்டும் எனவும் கற்பித்தனர் !

கடவுள் பெயர்களை மனிதர்களுக்கு வைத்துக் கொண்டால், அவர்களைத் துன்பங்கள் அணுகா என்னும் தன்னல  அடிப்படையில், மனிதர்கள் கடவுள் பெயர்களைச் சூட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள். ஆரியர்கள் உருவாக்கிய அனைத்துக் கடவுள் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே இருந்தமையால், இக்காலத்திம் நாம் காணும் மாந்தப் பெயர்கள் அனைத்தும் வடமொழிப் பெயர்களாகவே இருக்கக் காண்கிறோம் !

மனிதர்கள் தன் மனைவி மக்கள் மீது வைத்திருக்கும் இயற்கையான பற்றின் (பாசம்) காரணமாகஅவர்களது நலனுக்காக என்று சொல்லி யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்; நம்புகிறார்கள்எந்தக் கோயிலுக்குப் போகச் சொன்னாலும் போகிறார்கள்; எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை அப்படியே ஏற்று, இணையத்தில்  பெயர் தேடி உலவுகிறார்கள் !

தான் செய்வது சரியா தவறா என்று எந்த மனிதனும் சிந்திப்பதே இல்லை ! இப்படித்தான், ஆரியர்களின் கான்முளையான பார்ப்பனர்களும், வயிற்றுப் பிழைப்பிற்காக ஏமாற்றித் திரியும் கணியர்களும் (சோதிடர்) மனைக் கணியர்களும் (வாஸ்து) வடமொழியின் முகவர்களாக மாறித் தமிழ்நாட்டில், தமிழை வீழ்த்திக் கொண்டிருக்கிறாரகள் !

சரி ! ”மதுரபாஷினிஎன்று தன் மகளுக்கு ஒரு தமிழாசிரியர் பெயர் வைத்திருப்பதைக் கண்டு வியந்து போனேன் ! இதற்குப் பொருள் என்ன ? மதுரம் என்றால் இனிமை; “பாஷினிஎன்றால்மொழிபவள்” ; (பாஷை > பாஷினி) எனவேமதுரபாஷினி”  என்றால்இன்மொழிஎன்று பொருள். இவர் போன்ற தமிழாசிரியர்கள் தான் இன்று தமிழ்நாட்டில் தமிழுணர்வு குறைந்து போனமைக்குக் காரணம் ! “மதுரம்தொடர்புடைய வேறு சில பெயர்களைக் காண்போமா ? தமிழில் மது என்னும் சொல்லுக்கு இனிமை, தேன், கள், அமுது, நீர், பால், இளவேனில் என்றெல்லாம் பொருள் உண்டு.

                                 ------------------------------------------------------------
                                      
                                       மது.........................= தேன்மதி
                                       மதுமதி.................= பால்நிலா / நிறைமதி
                                       மதுபாலா.............= இளவேனில்
                                       மதுரம்...................= தேன்மொழி
                                       மதுரபாஷினி.....= இன்மொழி
                                       மாதுரி....................= அமுதமொழி
                                       மாதுரி தேவி......= தமிழமுது

                                 ------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051, சுறவம் (தை),22]
{05-02-2020}

-------------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------

பெயரியல் ஆய்வு (05) - இந்திரன் !

இந்திரன் என்னும் பின்/முன்னொட்டுப் பெயர்கள் - பொருளென்ன ? 

ஒவ்வொரு மனிதனும் தன் பெயருக்கான பொருளை அறிந்து வைத்திருத்தல் இன்றியமையாத் தேவை. தமிழ் நாட்டில் எத்துணைப் பேர் இப்படித் தன் பெயரின் பொருளைத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்றுக் கருதுகிறீர்கள் ?

கடைத் தெருவில்  சிலர் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அருகில் சென்று, இங்கிருப்பவர்களில் யார் யாருக்கு உங்கள் பெயரின் பொருள் தெரியும் என்றுக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலானோர் ஏதோ கடவுள் பெயர் என்றுத் தெரியும்; ஆனால் பெயரின் பொருள் எல்லாம் தெரியாது என்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தம் பெயரின் பொருளைச் சொல்வார்கள் !

தமிழ்நாட்டு மக்களின் பெயர்களில் 90% வடமொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அடிநிலை மக்களின் பெயர்கலியன், வீரன், அஞ்சான், குஞ்சு, காளி...” போன்ற தமிழ்ப் பெயர்களாக இருக்கும். இத்தகைய பெயர்கள் 5% இருக்கும். ஆனால் அவை மதிப்புக் குறைவான பெயர்கள் என்னும் கண்ணோட்டம் இடைநிலை மக்களிடமும். மேல்நிலை மக்களிடமும் இருப்பதால், அப்பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதில்லை !

அறிவழகன், வில்லாளன், முல்லைவழுதி, நாவுக்கரசு போன்ற அழகிய தமிழ்ப் பெயர்களை 5% மக்களிடம் நாம் காணமுடியும். தமிழ் உணர்வு என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய அரசியல் தலைவர்களே இப்போது எங்கும் நிறைந்து இருப்பதால், மக்களுக்கும் தமிழ் உணர்வு  இல்லாமற் போய்விட்டது. அதனால் மக்களும் தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை !

பொருளையே புரிந்து கொள்ளாமல் வடமொழிப் பெயர்களைத் தம் குழந்தைகளுக்கு வைக்கும் பெற்றோர், அப்பெயர்களின் பொருள் புரிய வந்தால், நிலைகுலைந்து போவார்கள் ! அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போமா !

-------------------------------------------------------------------------------------

பெயர்.............நேரடிப் பொருள்......மறைமுகப் பெயர்

-------------------------------------------------------------------------------------

அகோரம்........அழகில்லாதவன் ......(சிவன்)
பூவராகன்.......நிலப் பன்றி...................(திருமால்)
நாகசுந்தரம்....அழகிய பாம்பு................................
மாருதி..............குரங்கு...........................(அநுமான்)
மாத்ருபூதம்...தாய்ப் பேய்.....................................
நந்திதேவன்...காளை மாடு...............(சிவனூர்தி)
கோபால்..........மாடு மேய்ப்பவன்....(திருமால்)
வைரவன்........நாய்..................................(நாயூர்தி)
பைரவி.............நாய்க்குட்டி...................(துர்க்கை)
சுடலை............சுடுகாடு...........................(சிவன்)

-------------------------------------------------------------------------------------

இப்படி மதிப்புக் குறைவான பெயர்களைச் சூட்டிக் கொண்டு வலம் வரும் தமிழ் மக்கள் நூறாயிரக்  கணக்கில் இருக்கின்றனர் !

சரி ! இந்திரன் என்னும் பெயருக்கு உங்களுக்குப் பொருள் தெரியுமா ? இப்பெயருக்குப் பல பொருள்கள் உள்ளன. வானவர் தலைவன், தலைவன், அரசன், புலவன், கடவுள், விநாயகன், கேட்டை மீன்,  என்றெல்லாம் பொருள் கூறுகிறது தமிழ் அகரமுதலி !

இராசேந்திரன் என்றால் அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சக்கரவர்த்தி) – மன்னர் மன்னன் என்று பொருள். இராசராசன் என்றாலும் அதே பொருள்தான். நாகேந்திரன் என்றால் நாகங்களின் தலைவன் என்று பொருள். இவ்வாறு இந்திரன் என்னும் சொல்லை முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்டு அமைந்துள்ள வடமொழிப் பெயர்களையும் அவற்றுக்கான தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !

-------------------------------------------------------------------------------------------

வடமொழி..................................தமிழ்

-------------------------------------------------------------------------------------------

இராசேந்திரன்.................மன்னர் மன்னன்
இராசராசன்......................கோவேந்தன் (கோ = அரசன்)
மகேந்திரன்......................பேரரசு (மகா = பெரிய)
நாகேந்திரன்.....................அரவரசு (அரவம்பாம்பு)
குபேந்திரன்......................செல்வப் பெருந்தகை
புவனேந்திரன்.................பூவரசு (புவனம் = உலகம் = பூ).
தர்மேந்திரன்...................அறவரசு (தர்மம் = அறம்)
கசேந்திரன்......................வேழவேந்தன் (கசம் = வேழம்)
ஞானேந்திரன்................அறிவுக்கரசு (ஞானம் = அறிவு)
விசயேந்திரன்.................வெற்றி வேந்தன் (விசயம் = வெற்றி)
சுரேந்திரன்.......................விண்ணரசு  (சுரர் = வானவர்)
சுசீந்திரன்.........................மதியரசு (சுசி = நிலவு, மதி)
நரேந்திரன்.......................பூவேந்தன் (நரன் = மனிதன்)
இந்திரகுமாரி..................இளவரசி (இந்திரன் = அரசன்)
இந்திரகுமார்...................இளவரசன் (குமார் = மகன்)

------------------------------------------------------------------------------------------

தமிழன் என்று சொல்லிக் கொண்டு, நம் பெயர்களை வடமொழிப் மொழி பெயர்களாக வைத்துக் கொள்வது தலைக்குனிவான செயல் அல்லவா ? நம் பெற்றோர்கள் தான் அந்தத் தவற்றைச் செய்துவிட்டனர். நாமாவது நம் பிள்ளைகள், பெயரன் பெயர்த்திகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை வைக்கலாமே !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(Veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்
[ திபி: 2051, சுறவம்,18]
(01-02-2020)

----------------------------------------------------------------------------------------------------------
              
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

புதன், ஜனவரி 29, 2020

பெயரியல் ஆய்வு (04) - மீனாட்சி !

கயற்கண்ணி என்னும் பெயரை மீனாட்சி ஆக்கி மகிழ்கிறோம் !

பண்டைத் தமிழர்களின் கடவுட் கொள்கை அறிவியல் அடிப்படையிலானது. ஒளியை உமிழ்வது சூரியன்; சூரியன் இல்லாவிட்டால் ஒளியுமில்லை; வெப்பமும் இல்லை; ஒளியும் வெப்பமும் (தீ) இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை !

இந்த அடிப்படையில் கதிரவனை வணங்கினர்; கதிரவனின் ஒளியையும் வெப்பத்தையும் விளக்கின் சுடரில் கண்டனர். இதிலிருந்து சுடர் வழிபாடு (தீப வழிபாடு) தோன்றியது. இதைத்தான், “அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த சோதியாகிஎன்று தாயுமானவரும், “அருட்பெரும் சோதி !” என்று வள்ளலாரும் போற்றினர் !

நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்என்றார் சிவவாக்கியர். இறையாற்றலுக்கு  உருவமில்லை; கற்சிலைகளில் அஃது இருப்பதில்லை; உன் மனதிற்குள் இறையாற்றல் இருக்கையில், அதைத் தேடி நீ எங்கெங்கோ அலைகிறாயேஎன்றார் மானிடனைப் பார்த்து !

ஆரியரின் கடவுட் கொள்கை நம்பிக்கை அடிப்படையில் ஆனது. ”எல்லாம் வல்லவன் இறைவன்; அவனை வழிபட உருவம் தேவை; அவன் கோயிலில் மட்டுமே குடிகொண்டிருப்பவன்; அவனுக்கு ஆயிரமாயிரம் உருவங்கள் உண்டு; அவனுக்கு மனைவி மக்கள், விருப்பு, வெறுப்பு எல்லாம் உண்டுஎன்பது ஆரியர்களின் கொள்கை !

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்திற்குள் நுழைந்த ஆரியர்கள் மெல்ல மெல்ல தமிழர்களிடம் அவர்களது கடவுட் கொள்கையைப் புகுத்தினர். அதன் பல்படி வளர்ச்சியே ஊருக்கு ஒன்பது கோயிலும், விதம் விதமான கடவுள் உருவங்களும் இலங்கும் இன்றைய நிலை !

கடவுள்களைப் பற்றிக் கணக்கிட முடியாத அளவுக்குக் கற்பனைக் கதைகளை உருவாக்கி மக்கள் மனதில் ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டனர் கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற ஆரியர்களும், அவர்களுக்கு அடிமையாகிப் போன பல தமிழர்களும். அவர்கள் உருவாக்கிய சடங்குகளில் ஒன்று தான் மீனாட்சித் திருக்கல்யாணம் !

மீனாட்சிசொக்கநாதர் படிமைகள் இருக்கும் கோயில்களில் ஆண்டு தோறும் மீனாட்சித் திருக்கல்யாணம் என்று ஒரு சடங்கினை நடத்துகின்றனர். வேள்வித் தீ வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஒரு ஐயர் மீனாட்சி அம்மனின் படிமைக்குத் தாலி கட்டுகிறார். ஒரு மனிதன், அவன் வணங்கும் தெய்வத்திற்குத் தாலி கட்டுவதா ? தாய்க்கு ஒரு தனயன் தாலி கட்டுவது போறதல்லவா இச்செயல் ? தாலிகட்டும் ஐயர் மீனாட்சி அளவுக்குத் தெய்வமாக உயர்ந்து விட்டாரா அல்லது தெய்வம் மனிதன் அளவுக்குத் தாழ்ந்து விட்டதா ?

ஆரியர்கள் உருவாக்கிய கதைகளும், சடங்குகளும், மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்டவை ! அது போகட்டும் ! மீனாட்சி என்பது அழகிய தமிழ்ப் பெயர் போன்றல்லவா தோற்றமளிக்கிறது ! அஃது உண்மை தானா ?  மீன் + ஆட்சி = மீனாட்சி. வடமொழியில்அக்க்ஷம்என்பது தமிழில்அக்கம்என வழங்கப்படுகிறது. “அக்க்ஷம்என்ற சொல்லுக்குக்கண்என்று பொருள். உருத்திரன் + அக்க்ஷம் = உருத்திராக்க்ஷம் என்பதை நோக்குக !

அக்க்ஷம்உடையவள்அக்க்ஷி”; மீன் + அக்க்ஷி = மீனக்க்ஷி = மீனாக்க்ஷி. வடமொழியில் உள்ள மீனாக்க்ஷி என்ற பெயர் நமது அக்காலப் புலவர்களால்மீனாட்சிஎன்று தமிழ்ப் படுத்தப் பட்டுவிட்டது. மீன் = கயல்; அக்க்ஷி = கண்ணி (கண் உடையவள்) எனவே மீனாட்சி = கயற் கண்ணி !

------------------------------------------------------------------------------------------------------------

                     மீனாட்சி.......................= கயற்கண்ணி, கயல்விழி
                     மீனாட்சி.......................=அங்கயற்கண்ணி (அழகிய மீன் 
                                                                   போன்ற கண் உடையவள்)
                     மீனாட்சி.......................= கண்ணம்மை
                     மீனாட்சியம்மை.......= கயற்கண்ணியம்மை
                     மீனா...............................= கயல்
                     மீனு.................................= கயல்விழி
                     மீனாட்சி சுந்தரன்.....= அழகிய நம்பி

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)15]
{29-01-2020}

------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், ஜனவரி 28, 2020

பெயரியல் ஆய்வு (03)- சௌந்தரராசன் !

தமிழில் அழகு !  வடமொழியில் சௌந்தரம் !

மனிதனுக்கு அழகைப் போற்றும் தன்மை உண்டு. அழகாக இருப்பவற்றை அவன் விரும்வுவான். வளர்ந்த விலங்குகளை விட அவற்றின் குட்டிகள் அழகாக இருக்கும்.  பறவைகளும் கூட குஞ்சுப் பருவத்தில் அழகாக இருப்பதுண்டு !

வளரும் பயிர், எழுகின்ற கதிர், எல்லாமே இளம் பருவத்தில் நம் மனதைக் கவரும் தன்மை படைத்தவையே. இளமை மட்டுமல்ல முதுமையும் சில நேர்வுகளில் அழகானவை. முதிர்ந்த நிறைமதி, விளைந்த மாங்கனி, போன்றவையும் கண்கவரும் எழில் மிக்கவையே. இவற்றை  எல்லாம் சுவைக்கும் மனிதன், அவன் நம்பும் கடவுளை மட்டும் விட்டுவிடுவானா ?

இயற்கையின் கூறுகளான கதிரவனையும், தீயையும், நீரையும் தொழுத பண்டைத் தமிழன் பின்பு ஆரியர்களின் தமிழக வருகைக்குப் பிறகு, அவர்களால் புனைந்து சொல்லப்பட்ட, பல்வேறு  கடவுட் கதைகளையும் நம்பி குழந்தை முருகன் மட்டுமன்றி முதிர்ந்த சிவபெருமான் உருவங்களையும் வகைவகையாகப்  படைத்து  வழிபாட்டில் ஈடுபடலானான். அவர்களின் வழிகாட்டுதலின் படி கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் அழகிய கற்படிமைகளை நிறுவி,  அவற்றுக்கு  அழகிய தமிழில் பெயர்களையும் சூட்டித் தொழலானான் !

தன்னைப் பின்பற்றத்  தொடங்கிய தமிழர்களை ஆரியர்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. கோயில் இருந்த ஊர்களின் பெயர்களை எல்லாம் மெல்ல மெல்ல  சமற்கிருதப் பெயர்களாக மாற்றி அழைக்கலானார்கள். கோயிலில் நிறுவப்பட்டிருந்த  கடவுட் படிமைப் பெயர்களும் சமற்கிருதமயமாயின !

இவ்வாறு சமற்கிருத மயமான ஒரு கடவுட் பெயர் தான் சௌந்தரராசன் ! சிவனியர்கள் (சைவர்கள்) தாங்கள் வணங்கிய இறைவனைச் சௌந்தர ராசன் என்று அழைக்க, மாலியர்களோ (வைணவர்கள்), தமது கடவுளைச் சௌந்தர்ராசப் பெருமாள் என்று அழைக்கலாயினர் !

சௌந்தர்யம்என்னும் வடமொழிச் சொல் தான், தமிழ்ப் படுத்துகையில்சுந்தரம்ஆயிற்று. (விஷயம் என்ற வடசொல் தமிழில் விடயம் ஆன கதை தான்) சௌந்தர்யம், சுந்தரம் இரண்டுக்கும் ஒரே பொருள் தான்அதாவது அழகு அல்லது எழில் என்று பொருள் !

மதுரையில் குடிகொண்டுள்ளகயற்கண்ணிஅழகியநம்பிஆகிய கடவுட் பெயர்கள் இரண்டும் வடமொழியாளர்களின் முயற்சியால்மீனாட்சிசுந்தரேஸ்வரன்எனப் மாற்றுருப் பெற்றன. சௌந்தரம் = அழகு, எழில்; சுந்தரம் = அழகு, எழில் ! சௌந்தர்ராசன் என்றாலும் சுந்தர்ராசன் என்றாலும் தமிழில் அழகரசன் அல்லது எழிலரசன் என்று பொருள் !

இந்த அடிப்படையில், மக்களிடையே வழங்கப் பெறும் வேறு சிலசுந்தரப் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும்   காண்போமா ?

------------------------------------------------------------------------------------------------------------

                     சௌந்தரம் (பெண்).......................= அழகி
                     சௌந்தரம் (ஆண்).........................= அழகன்
                     சௌந்தர்ராசன்...............................= அழகரசன், எழிலரசன்.
                     ஞானசௌந்தரி...............................= அறிவழகி
                     ரூபசௌந்தரி...................................= வடிவழகி
                     சுந்தரம்................................................= எழிலன்
                     சுந்தர்....................................................= அழகு, எழில்
                     சுந்தரமூர்த்தி....................................= அழகப்பன்
                     சுந்தரராசன்.......................................= எழிலரசு
                     சுந்தரபாண்டியன்...........................= எழில்மாறன்
                     சுந்தரேசன்.........................................= அழகியநம்பி
                     சுந்தராம்பாள்...................................= அழகம்மை
                     ஞானசுந்தரம்....................................= அறிவழகன்
                     அழகுசுந்தரம்...................................= பேரழகன்
                     நாகசுந்தரம்.......................................= அரவழகன்
                     கல்யாணசுந்தரம்............................= பொன்னழகு
                     இராமசுந்தரம்...................................= பேரெழிலன்

---------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)14]
{28-01-2020}