புதுச்சொல் புனைவோம் !
பயின் - RUBBER
------------------------------------------------------------------------------------------------
ஒரு ஆங்கிலச் சொல்லைத் தமிழில் மொழியாக்கம் செய்கையில் சில அடிப்படை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றினால், அழகிய தமிழ்ச் சொற்களை நாம் நிரம்பவும் உருவாக்க முடியும் !
அடிப்படை விதிகள் யாவை என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ! (01) இயன்றவரை. ஆங்கிலச் சொல்லின் பொருளை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் தமிழ்ச் சொல் இருக்க வேண்டும் (02) இஃது இயலவில்லையேல், அச் சொல்லுக்கு உரிய பொருளின் வடிவம், பண்பு, பயன், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய தமிழ்ச் சொல் உருவாக்கலாம் ! (03) புதிய சொல் தமிழ் மரபுக்கும் இலக்கணத்திற்கும் இயைபுடையதாக இருத்தல் வேண்டும். (04) வடிவில் சிறியதாக இருக்க வேண்டும் (05) ஓசை நயம் உடையதாக இருக்க வேண்டும் !
இந்த
வரையறைகளுக்கு உட்பட்டு, உருவாக்கப்படும்
சொற்களே மொழிக்கு வளம் சேர்ப்பதாக அமையும்.
ஆனால்,
மொழியுணர்வோ மொழிப்பற்றோ இல்லாத ஒருசிலர் அவர்கள் விருப்பப்படி ஏதேதோ சொற்களை உருவாக்கி உலவவிட்டு வருகிறார்கள்
!
இத்தகைய
ஆளிநர் மிக எளிதாகக் கையாளும் முறை வினைச் சொல்லின் அடிப்படையில்
பெயர்ச் சொற்களை உருவாக்குதல். எப்படி என்கிறீர்களா
? ERAZE என்பது ஒரு வினைச்சொல்
! இதற்கு அழி என்று
பொருள். இதன் அடிப்படையில்
ERAZER = “அழிப்பான்”
என்ற
சொல்லை உருவாக்கி விட்டார்கள் !
வினையடிப்
பெயர்ச் சொற்கள் தமிழுக்கு வளம் சேர்க்கா
! அரிதாக ஓரிரு பெயர்ச் சொற்கள் வினையடிப் பெயர்களாக
-- மண்வெட்டி, களைக்கொத்தி,
பாக்குவெட்டி
போன்று – இருக்கலாமே
தவிர பெருவாரியான சொற்கள் இவ்வாறு அமைவது மொழியின் பண்பையே உருமாற்றிவிடும்
! மேற்கண்ட சொற்களும்
“இ”கர
விகுதி பெற்றவையே தாவிர “ஆன்”
விகுதி
பெற்றவை அல்ல !
வினையடிப்
பெயர்ச் சொற்களை நாம் ஏற்றுக் கொண்டால் என்னவாகும்
? வினைச்சொல்லுடன்
“ஆன்” விகுதி
சேர்த்து துளைப்பான், அறுப்பான்,
வழிப்பான்,
கடைவான்,
உடைப்பான்,
தெளிப்பான்,
சீவுவான்,
கோலுவான்,
வகிர்வான்,
பகிர்வான்,
தணிப்பான்,
துணிப்பான்,
கழுவுவான்,
ஏற்றுவான்,
இறைப்பான்,
முறிப்பான்,
இணைப்பான்,
பிணைப்பான்,
தழுவுவான்,
உழுவான்,
பிழிவான்,
மழிப்பான்,
குழிப்பான்,
திரிப்பான்,
பிரிப்பான்,
ஓட்டுவான்,
கூட்டுவான்,
கரைப்பான்,
கலைப்பான்,
ஊட்டுவான்,
குறைப்பான்,
குளிர்விப்பான்,
என்று
பல்லாயிரக் கணக்கில் சொற்கள் உலவத் தொடங்கிவிடும்
!
துளைப்பான்,
தெளிப்பான்
என்னும் சொற்களை வேளாண்மைத் துறையில் காணலாம்.
கரைப்பான்,
வடிப்பான்,
குறைப்பான்,
மிதப்பான்
போன்ற சொற்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணலாம்.
மடிமையாளர்களின்
(சோம்பேறிகளின்)
கண்டுபிடிப்பு
இந்தச் சொற்கள் !!
படித்தது
தமிழ்நாட்டில் ! பணி
புரிவது தமிழ்நாட்டில் ! வாழ்வது
தமிழ்நாட்டில் ! அப்படி
இருக்கையில் தமிழ் மரபுப்படிச் சொற்களை உருவாக்காமல் மரபுகளுக்கு மாறாக உயர்திணை ஆண்பால்
விகுதியான ”ஆன்”
விகுதியைக்
கொண்டு அஃறிணைப் பொருள்களுக்குப் பெயர் சூட்டுவது அறிவார்ந்த செயலாகுமா
? ”ஆன்” விகுதிச்
சொற்களை உருவாக்கிப் புழக்கத்தில் விடும் இந்த மடிமையாளர்களை என்னவென்று அழைப்பது
? இத்தகைய மடிமையாளர்களால்
கற்ற தமிழுக்கும் பயனில்லை ! காலூன்றி
வாழும் நாட்டுக்கும் பயனில்லை ! இந்தக்
குமுகாயத்திற்கே எந்தப் பயனும் இல்லை !
தமிழில்
”பயின்” என்று
ஒரு சொல் உண்டு. ”சிதையும்
கலத்தைப் பயினான் திருத்தும்” என்பது
பரிபாடல் (10:54). “சிறு
காரோடன் பயினொடு சேர்த்திய...” என்பது
அகநானூறு (1:5) .பயின்
என்பதற்குப் பிசின் என்று பொருள். ஆங்கிலத்தில்
RUBBER என்று
சொல்லப்படும் பொருள், ஒரு
மரத்திலிருந்து வடித்தெடுக்கப்படும் பால் இறுகுவதால் உண்டாகும் பிசின் தானே
!
தமிழில் RUBBER என்னும் ஆங்கிலச் சொல்லை “இரப்பர்” என்றும் “அழிப்பான்” என்றும் “தேய்ப்பான்” என்றும் “இழுவை” என்றும் பலவாறாகச் சொல்லி வருகிறோம். இலக்கியங்களில் காணப்படும் “பயின்” என்னும் சொல்லை RUBBER என்பதைக் குறிக்கும் சொல்லாக நாம் பயன்படுத்தலாமே !
RUBBER
என்பதன்
மூல வடிவம் ஒரு
மரத்தின் பால். இந்தப் பால் இறுகிப்
பிசினாகிறது. நமக்கு அறிமுகமான
கருவேலம் பிசின், முருங்கைப்
பிசின், வேப்பம் பிசின் ஆகியவையும்
அடிப்படையில் பாலாக வடிந்து பின்பு பிசினாக இறுகுவது தானே
!
”பயின்”
என்ற
சொல் பொருள் வகையில் பொருந்தி வருகிறது; வடிவில்
சிறியதாக இருக்கிறது; ஒலிநயம்
மிக்கதாக இருக்கிறது; தமிழ்
மரபுக்கு ஏற்ப இருக்கிறது. அப்புறம்
என்ன ?
Rubber என்பதைக் குறிக்கும் சொல்லாக
“பயின்” என்னும்
சொல்லை ஏற்போம் !
பயின் என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றும்
பிற சொற்களையும்
பார்ப்போமா
?
-------------------------------------------------------------------------------------------------------------
RUBBER..................................=
பயின்
RUBBER
GOODS..................= பயின் பொருள்கள்
RUBBER
MAT........................= பயின் பாய்
RUBBER
TUBE......................= பயின் குழல்
RUBBER
STAMP....................= பயினச்சு
RUBBER
SHEET....................= பயின் ஏடு
-------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை
-------------------------------------------------------------------------------------------------------------