ஒவ்வொரு படமும் ஒவ்வொரு நினைவைப் புதுப்பிக்கிறது !
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணியாற்றும் போது, திருவெறும்பூர் வந்திருந்த ப.மா.சு மற்றும் பேபி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து பகுத்து உருவாக்கப் பெற்ற படம். இஃது எனது 30 -ஆம் அகவையில் (31-5-1974 அன்று) திருவெறும்பூர், கெம்பு நிழற்படக் கலையகத்தில் எடுக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணியாற்றியபோது, மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்வதற்காக விண்ணப்பம் அனுப்புவதற்காக, எனது 30 -ஆம் அகவையில் (24-6-1974 அன்று) திருவெறும்பூர் கெம்பு நிழற்படக் கலையகத்தில் எடுத்துக் கொண்ட படம்.
-----------------------------------------------------------------------------------------------------------
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, திருச்சி வந்திருந்த தங்கை சுமதி - சிங்காரவேலு இணையருடன் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து பகுத்து உருவாக்கிய படம். என் 30 -ஆம் அகவையில் (23-12-1974 அன்று) திருவெறும்பூரில் எடுத்துக் கொண்ட படம்.
-------------------------------------------------------------------------------------------------------------
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, எனது 31 -ஆம் அகவையில் (9-4-1975 அன்று) திருவெறும்பூரில் , கெம்பு நிழற்படக் கலையகத்தில் எடுத்துக் கொண்ட படம்.
-----------------------------------------------------------------------------------------------------------
நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றியபோது எனது 31 -ஆம் அகவையில் (15-5-1975 அன்று) அலுவலர்கள் மற்றும் மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப் பட்ட படம்.
-------------------------------------------------------------------------------------------------------------