கொத்து (01) மலர் (053)
------------------------------------------------------------------------------------------------------------
திருமண அழைப்பிதழ்
செ.பிரபு - வே.இளவரசி
நாள்: 3-9-2004
------------------------------------------------------------------------------------------------------------
வையக நீதி வகுத்தநல் அறிஞன் !
வள்ளுவன் பெயரால் வழங்கும் ஆண்டு !
ஈரா யிரத்து முப்பத் தைந்து !
இயல்மதி ஆவணி ஈரொன் பான்நாள் !
வெள்ளிக் கிழமை விண்மணி தோன்றி !
விகலை ஆறு நாழிகை அளவில் !
எங்கள் செல்வி இளவர சிக்கும்
ஏடகச் செல்வன் எழில்பிர புவுக்கும்
நியமத் திருமணம் நிகழ்வுற உளது !
நேரிய ! சீரிய ! நெரிகுழல் மகளீர் !
ஆர்மணம் நிகழும் அரங்கம் ஓசூர்
ஆர்.கே மாளிகை அவையகம் வருக !
இல்லற வாழ்வில் இணையும் போதுகள்
நல்லறம் பேணி நலம்பல பெற்று
வாழ்வும் வளமும் பொலிந்து
வல்லாங்கு வாழ வாழ்த்தி அருள்கவே !
20-08-2004
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
--------------------------------------------------------------------------------------------------------