name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 03/27/21

சனி, மார்ச் 27, 2021

பல்வகை (27) சட்ட மன்றத் தேர்தல் 2021 - யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் ?

வாக்களிக்கும் முன் ஒரு கணம் சிந்தியுங்கள் !  

                                                      ************

உங்கள் வருவாயைத் திட்டமிட்டுச் செலவு செய்யாவிட்டால், பிற்காலத்தில், வாழ்க்கையில் நீங்கள் பல இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேரிடும்; அதுபோல், தேர்தலில் உங்கள் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், உங்கள் வாக்குக்கு உரிய பயனின்றி உங்கள் வாக்குரிமை விழலுக்கு இறைத்த நீராகிப் போகக் கூடும் !

 

தேர்தலில் வலிமையான இரண்டு கட்சிகள் போட்டியிட்டால், 51% வாக்குகள் (51+49=100) பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார். வலிமையான மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன என்றால் 34% வாக்குகள் (34+33+33=100) பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் !

 

வலிமை வாய்ந்த நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன என்றால் 26% வாக்குகள் (26+25+25+24=100) பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் !

 

செல்வாக்கு மிக்க ஐந்து கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடுகின்றன என்றால் 21% வாக்குகள் (21+20+20+20+19=100) பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் !

 

வாக்காளர்களின் ஆதரவை 3%, 5%, என்று ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வைத்திருக்கும் எந்தக் கட்சியும் கூட்டணியின் ஆதரவின்றித் தமிழ் நாட்டில் வெற்றிபெற முடியவே முடியாது !

 

கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளும் அவை பெற்ற வாக்குகளும் உங்கள் பார்வைக்கும் ஆய்வுக்கும் வைக்கப்படுகிறது !

-----------------------------------------------------------

 அ.இ.அ.தி.மு.க. தனித்துப் போட்டி

(01).அ.இ.அ.தி.மு.க.(.227.தொ)..1,76,17,060........41.06%

-----------------------------------------------------------

தி.மு.க.கூட்டணி

(02).தி.மு.க .....(173.தொ)..........1,36,70,517................31.86%

(03) காங்கிரஸ் ...(41.தொ).....0,27,74,075...............06.47%

(04)முஸ்லிம் லீக் (5.தொ).......0,03,13,808................00.73%

(05)புதிய தமிழகம் (4.தொ)..0,02,19,830................00.51%

(06).ம. நே. ம. க... .(5.தொ).......0,01,97,150................00.46%

----------------------------------------------------------------

கூடுதல்.............................................1,71,75,380.................40.03%

----------------------------------------------------------------

(07).பா. ம. க........ (234.தொ).......0,23,00,775.................05.36%

------------------------------------------------------------

(08)பா.ஜ.க ..........(234.தொ).........0,12,28,692.................02.86%

------------------------------------------------------------------

மக்கள் நலக் கூட்டணி

(09)தே.மு.தி.க...(104.தொ)..........0.10,34,384................02.41%

(10)ம.தி.மு.க. (28.தொ).................0,03,73,713................00.87%

(11)வல.கம்யூ..(25.தொ)...............0,03,40,290................00.79%

(12)வி.சி.க............(25.தொ).............0,03,31,849................00.77%

(13).இட.கம்யூ......(25.தொ)...........0,03,07,303................00.72%

(14).த.மா.கா.......(26.தொ).............0,02,30,711...............00.54%

------------------------------------------------------------------

(15)நாம் தமிழர் (234.தொ)........0,04,58,104................01.07%

-----------------------------------------------------------------

(16).கொங்கு நா. ம.கட்சி...........0,01,67,560................00.39%

(17)பகுஜன் சமாஜ்..........................0,00,97,823................00.23%

(18).இந்திய ச.. கட்சி......................0,00,65,978................00.15%

(19).சுயேச்சைகள் (234.தொ)...0,06,17,907................01.44%

(20).நோட்டா.......................................0,05,61,244................01.31%

 

-------------------------------------------------------------------

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே முறையே 41.06%, 31.86% வாக்குகளைப் பெற்றுள்ளன. அ.இ.அ.தி.முக. தனித்து நின்று 41.06% வாக்குகளைப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 40.03% வாக்குகளைப் பெற்றுள்ளது !


இரண்டுக்கும் இடையே 1.03% மட்டுமே வேறு பாடு !

 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் விழுக்காடு வருமாறு ! அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது 2016 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற விழுக்காடு !

 

--------------------------------------------------------------

(01).தி.மு.க................................................32.76%.........(31.86%)

(02).அ.தி.மு.க.........................................18.48%.........(41.06%)

(03).காங்கிரஸ்......................................12.76%.........(06.47%)

(04).பாட்டாளி.மக்கள் கட்சி.........05.42%........(05.36%)

(05)நாம் தமிழர் கட்சி.......................03.89%........(01.07%)

(06)பாரதிய .ஜனதாகட்சி..............03.66%........(02.86%)

(07).வலது.கம்யூ....................................02.43%.........(00.79%)

(08).இடது.கம்யூ.....................................02.40%........(00.72%)

(09).தே.மு.தி.க........................................02.19%........(02.41%)

(10).முஸ்லீம் லீக்...................................01.11%.......(00.73%)

 

--------------------------------------------------------------

 

ஊடகங்களால் பெரிதாகப் பேசப்படும் மக்கள் நீதி மையம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை (1,03,167), தென்சென்னை (1,35,465), திருப்பெரும்புதூர் (1,35,525 ) கோவை (1,45,104) ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டுமே 1 இலட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருந்தது !


பெற்றிருந்த வாக்கு விழுக்காடு: வடசென்னை = 11.24% , தென் சென்னை =12.51% ,, திருப்பெரும்புதூர் = 10.01% , கோவை = 12.02%.


மக்கள் நீதி மையத்தின் கொள்கைகள் என்னவென்று இந்த நிமிடம் வரை யாருக்கும் தெரியாது; சொல்லப்படவுமில்லை; கொள்கையே இல்லாமல் ஒரு கட்சி !

 

புதிய வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, இந்தியக் குடியுரிமைச் சட்டம், நீட் தேர்வு, சமஸ்கிருதத் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, எட்டு வழிச் சாலை, விளை நிலங்களில் எண்ணெய்க் குழாய்கள் பதிப்பு, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ திட்டம், போன்ற பல பொருண்மைகள் பற்றிய ம.நீ.மையத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை !

 

வேட்பு விண்ணப்பத் தகவலின் படி 177 கோடி சொத்து உடைய கமலகாசனும், 165 கோடி சொத்து உடைய டாக்டர். மகேந்திரனும் ம.நீ.மைய வேட்பாளர்கள் !

 

தெருப்பொறுக்கி, ஓடு காலி யார் வந்தாலும் தன்னுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ளும் கமலகாசன் நீதி, நேர்மை, ஒழுக்கம் பற்றி எல்லாம் பேச என்ன தகுதி இருக்கிறது ? தனி மனித வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் அரசியலில் நல்லொழுக்கத்தை நிலைநாட்டப் போகிறார்களாம். வெட்கக்கேடு !


கோவை தெற்குத் தொகுதியில் 12.02% வாக்குகளை மட்டுமே வைத்துள்ள கமலகாசன் யாரை வெற்றிகொள்ளப் போகிறார் ? கூட்டணி பலமுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரையா ? அல்லது அதிகார பலமும் பணபலமும் உள்ள வானதி சீனிவாசனையா ?

 

இவர் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கோடீசுவரர்கள ஸ்ரீபிரியா, சந்தோஷ் பாபு போல ! மக்களை நம்பாமல் கோடிகளை நம்பும் மக்கள் நீதி மையம் சட்டமன்றத் தேர்தலையும் BIGG BOSS நிகழ்ச்சி போலக் கருதுகிறது போலும் !

 

நடிகரைப் பார்க்கக் கூடும் கூட்டத்தை எல்லாம் தனது ஆதரவுக் கூட்டம் என்று கணக்குப் போடும் கமலகாசன், திரைத்துறையிலிருந்து தேர்தல் அரசியலுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கருணாஸ், விஜயகாந்த் போன்றோர் சொலிக்க முடியாமல் போன காரணத்தை அறியார் போலும் !

 

தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் களத்தில் நடமாடுவது, பிற நேரங்களில் நடிக்கும் தொழிலைப் பார்ப்பது என்னும் நோக்குடைய பகுதி நேர அரசியல்வாதி கமலகாசன் ஒருக்காலும் அரசியலில் சுடர்விட்டு ஒளிரமுடியாது !

 

35 நாடாளு மன்றத் தொகுதிகளில் ஒற்றை இலக்க விழுக்காட்டில் ஆதரவைப் பெற்றிருக்கும் கமலகாசன் முதல்வர் வேட்பாளராம் ! மக்களை முட்டாள்களாகக் கருதும் இவரைப் போன்றோருக்கு நாம் அளிக்கும் வாக்குகள் சாக்கடையில் ஊற்றிய பால் போல் வீணாகிப் போகும் என்பது உறுதி ! ! அவரது கட்சிக்கு வாக்களித்து நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளத் தேவையில்லை !

 

அடுத்து , நாம் தமிழர் கட்சியைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான். இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனைத் தன் தலைவர் என்கிறார். தலைவராக, வழிகாட்டியாகக் கொள்ளத் தமிழ்நாட்டில் தகுதியுள்ள தலைவர் யாருமே இல்லை போலும் !

 

இவரது கட்சியின் கொள்கை, தமிழனைத் தமிழனே ஆள வேண்டும் என்பது ! நல்ல கொள்கை தான் ! குறை சொல்ல முடியாது ! ஆனால், தமிழ் நாட்டுத் தலைவர்கள் எல்லோருமே இவருக்குத் தெலுங்கர்களாகத் தென்படுகின்றனர் !

 

இவரது கூற்றுப்படி, மறைந்த கருணாநிதி தெலுங்கர், தேர்தல் களத்தில் இருக்கும் ஸ்டாலின் தெலுங்கர், வைகோ தெலுங்கர், திருமாவளவன் தெலுங்கர், மதுசூதனன் தெலுங்கர், கடம்பூர் இராஜு தெலுங்கர், புதுச்சேரி வைத்தியலிங்கம் தெலுங்கர் ! இந்தப் பட்டியல் இன்னும் நீள்கிறது ! இவர்களது முன்னோர்கள் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர் போலும் சீமான் !

 

தமிழனைத் தமிழனே ஆளவேண்டும் என்று சொல்லும் இவர், முன்பு செல்வி செயலலிதாவை ஆதரித்த போது அவர் கன்னடத்துக் காரர் என்பது தெரியாது போலும் ! ம.கோ.இரா. மலையாள நாட்டினர் என்பது மறந்துவிட்டது போலும் !

 

தெலுங்கு பேசும் மக்களான நாயுடு, நாயக்கர், ரெட்டியார், ராஜு, பத்மசாலியர், 24 மனைத் தெலுங்குச் செட்டியார், தேவாங்கர், தெலுங்கு பிராமணர், தெலுங்குச் செட்டியார், கம்மவார், வளையல்காரர்,ஆதி ஆந்திரர், அருந்ததியர், ஒட்டர் , குருமன், போன்ற ஒரு கோடி மக்களின் வாக்குகள் இல்லாமல் தமிழர்களின் வாக்குகளை மட்டுமே பெற்று இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக நினைக்கிறார்; சூரியன் தெற்கில் உதித்தாலும் உதிக்குமே தவிர இவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக முடியவே முடியாது ! !

 

கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி 2019 நாடாளு மன்றத் தேர்தலில் 3.89% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அதிக பட்சமாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 6.33% வாக்குகளும், குறைந்த பட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 1.65% வாக்குகளையும் இக்கட்சி பெற்றிருந்தது.

 

இந்த அழகில், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது இக்கட்சி. இதன் பொருளென்ன ? சீமானைத் தவிர எஞ்சிய 233 வேட்பாளர் குடும்பங்களும் அண்டா குண்டா, நகை நட்டுகளை எல்லாம் விற்றுத் தேர்தல் செலவு செய்து நொடித்துப் போகப் போகிறது ! ஒவ்வொரு தேர்தலிலும் பல குடும்பங்களை நொடித்துப் போகச் செய்வது தான் இக்கட்சியின் அணுகுமுறை போலும் !

 

எனவே, நண்பர்களே ! வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுக்கு மட்டுமே வாக்களியுங்கள். தோற்கப் போகும் கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்குரிமையை வீணாக்கி விடாதீர்கள் !

 

[பின் குறிப்பு] கட்டுரையின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு என்றால் பலருக்கும் பகிர்வு செய்யுங்கள்; நீங்கள் மட்டும் படித்தால் போதாது !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.பி.2052, மீனம் (பங்குனி)04]

{17-03-2021}

------------------------------------------------------------------------------------------------------------