name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/15/19

செவ்வாய், அக்டோபர் 15, 2019

நிழற்படம் (09) படமும் கதையும் !

நிழற்படமும்  நாட்குறிப்பும் நினைவுகளின் பதிவு அறை !

திருத்துறைப்பூண்டயில் நடைபெற்ற இரா.சங்கீதா - தியாகராசன் திருமண வரவேற்பின் போது எடுக்கப் பெற்ற படம். எடுக்கப் பெற்ற நாள். 10-2-2012. அப்போது என் அகவை.68.

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற 6 -ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம். அப்போது என் அகவை. 68. படம் எடுக்கப் பெற்ற நாள். 17-4-2012.

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்தில்  எழினி  (MOBILE PHONE)  மூலம் நானே எடுத்துக் கொண்ட படம். நாள். 5-2-2013. அகவை. 70.

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர், எனது இல்லத்தின் அருகே, திறந்த வெளியில் எடுத்த படம். அகவை. 70.படம் எடுத்த நாள்.5-2-2013.

-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் எனது இல்லத்தில் இருக்கையில் எழினி (MOBILE) மூலம் எடுக்கப் பெற்ற படம். எடுக்கப்பெற்ற நாள் 28-8-2013.  அகவை 69.

-----------------------------------------------------------------------------------------------------------

நெய்வேலி, பழுப்பு நிலக்கரி நிறுவனத் துணைப் பொது மேலாளர் திரு. சுப்ரமணியன் அவர்களது இல்லத் திருமணத்திற்கு நெய்வேலி  சென்றிருந்த காலை, அங்கு தங்கும் விடுதியில் ஓய்வாக இருந்த போது ஆளுயரக் கண்ணாடிக்கு முன் நின்று நானே எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள்.23-2-2014. அப்போது என் அகவை. 70.

-------------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (08) படமும் கதையும் !

ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு கதை !

தஞ்சாவூரில் கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்து  முன்றிலில் (PORTICO)  வைத்து எடுக்கப்பட்ட படம்.  எடுக்கப்பெற்ற நாள். 25-3-2011. அகவை. 67.

-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், நீலகிரி ஊராட்சியில் நடைபெற்ற திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம். எடுக்கப்பெற்ற நாள். 15-4-2011. அகவை. 67.

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நான் தயாரித்து அச்சிட்டு, சங்க உறுப்பினர்களுக்கு  இலவசமாக வழங்கப் பெற்ற “முகவரிக் கையேடு” என்னும் புத்தக வெளியீட்டு  விழாவின்  போது   எடுக்கப்   பெற்ற  படம்.  எடுக்கப்பெற்ற நாள்:   17-1-2012. அப்போது என் அகவை. 68.

----------------------------------------------------------------------------------------------------------

புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற இன்னொரு படம். சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும்  நிகழாண்டுத் தலைவர் என்ற முறையில் எனக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப் பெற்ற போது எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற  நாள். 17-1-2012. அப்போது என் அகவை 68.

------------------------------------------------------------------------------------------------------------

வெளியிடப்பெற்ற  “முகவரிக் கையேடு” புத்தகம். 

------------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (07) படமும் கதையும் !

படம் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுப் பதிவு ! 

அறுபதாம் அகவை நிறைவு நாளை முன்னிட்டு, பஞ்சநதிக் குளம் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போது எடுக்கப் பெற்ற ஒரு படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 30-4-2004. அகவை 60.

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில், எனது இல்லத்தில் நடைபெற்ற என் இளைய மகள் இளவரசியின் வளைகாப்பு விழாவின் போது  எடுக்கப் பெற்ற படம். அப்போது எனது அகவை. 62. படம் எடுத்த நாள். 24-6-2006

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் இராகம் நிழற்படக் கலையகத்தில் எடுக்கப்பெற்ற படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 12-2-2010.அப்போது என் அகவை. 66.

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் என்னால் துவக்கப் பட்ட திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம்.  எடுக்கப் பெற்ற நாள். 15-4-2010.அகவை. 66.

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்தில் இருந்த போது  எடுக்கப் பெற்ற படம். எடுத்த நாள். 10-2-2011. அகவை 67.

-----------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (06) படமும் கதையும் !

சுவடுகள் நிறைந்தது வாழ்க்கைத் தடம் ! அதன் மீது ஒளிபாய்ச்சுவது   நிழற்படம் !

ஓசூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திலிருந்து நான் பணி ஓய்வு பெறும்  நாளில் எனது இருக்கையில் அமர்ந்திருந்த போது  எடுக்கப் பெற்ற படம். அப்போது என் அகவை 57. படம் எடுக்கப்பட்ட நாள்.30-4-2001. கல்வி ஆவணங்களின் படி அன்றைய நாளில் என் அகவை 58 என்பதால், ஒரு ஆண்டு முன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

------------------------------------------------------------------------------------------------------------
பணி ஓய்வுப் பாராட்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற ஒரு படம்.  எடுக்கப் பெற்ற நாள்,4-5-2001. அன்றைய நாளில் என் உண்மையான அகவை 57; ஆவணங்களின் படி , 58.

-------------------------------------------------------------------------------------------------------------

என் மூத்த மகள் கவிக்குயில் - சிவகுமார் திருமணம் 6-2-2003 அன்று  திருத்துறைப் பூண்டி மங்கை மகாலில் நடைபெற்றதை முன்னிட்டு  ஓசூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் பொது எடுக்கப் பெற்ற ஒரு குழு நிழற் படத்திலிருந்து பிரித்து உருவாக்கப் பெற்ற எனது படம். படம் எடுத்த நாள். 16-2-2003.அப்போது என் அகவை. 59.

------------------------------------------------------------------------------------------------------------

கவிக்குயில் - சிவகுமார் திருமணத்தை யொட்டி ஓசூரில் நடைபெற்ற மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது, எடுக்கப்பட்ட நிழற்படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 16-2-2003, அப்போது எனது அகவை 59.

-----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, கண்ணம்மாள் நகரில், மனை எண் 26 -ல் என்னால்  புதிதாகக் கட்டப் பெற்ற வீட்டில் புதுமனை புகுவிழா நடைபெற்ற போது எடுத்த படம். படம் எடுத்த நாள். 4-2-2004. அன்றைய நாளில் என் அகவை. 60.

-----------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (05) படமும் கதையும் !

பொறுப்பு  நிலை உயர்கையில்,  மக்கள் பார்வையும் உயர்கிறது !

நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக மேளாளராகப் பணியாற்றிய காலை, நாகூர் ஜெமிம்மாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  உரையாற்றிய போது எடுத்த படம். அப்போது என் அகவை 41. படம் எடுத்த நாள்:20-3-1985.

-----------------------------------------------------------------------------------------------------------

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றிய போது, என் இல்லத்தாருடன் எடுத்துக் கொண்ட குழுப்படத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட படம். அப்போது என் அகவை 48. படம் எடுத்துக் கொண்ட நாள்:15-8-1992

----------------------------------------------------------------------------------------------------------

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றிய காலை, என் தங்கை மகள் செல்வியின் திருமணம் திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது அப்போது மணமக்களுடன் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து பிரித்து உருவாக்கிய எனது படம். அப்போதுஎன் அகவை 51. படம் எடுத்துக் கொண்ட நாள்: 5-2-1995.

------------------------------------------------------------------------------------------------------------

ஓசூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், ஆட்சி அலுவலராகப் பணியாற்றிய காலை, ஓய்வூதியக் கருத்துரு மாநிலக் கணக்காயருக்கு அனுப்புவதற்காக நானும் என் மனைவியும் நிழற்படம் எடுத்துக் கொண்டபோது, நான் தனியாக எடுத்துக் கொண்ட படம். அப்போது என் அகவை 56. படம் எடுத்துக் கொண்ட நாள்.9-11.2000.

-----------------------------------------------------------------------------------------------------------

ஓசூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆட்சி அலுவலர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில், எனது இருக்கையில் அமர்ந்திருக்கும் போது எடுத்துக் கொண்ட படம். அப்போது என் அகவை, கல்வி ஆவணங்களின்படி 58;  ஆனால் உண்மை அகவை 57. ஒரு ஆண்டு முன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். படம் எடுத்துக் கொண்ட நாள்: 30-4-2001

-------------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (04) படமும் கதையும் !

ஒவ்வொரு படத்துக்குப் பின்பும் ஒரு நிகழ்வு இருக்கிறது !

நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றிய போது, நாகைக்கு வந்திருந்த தங்கை கல்யாணி இராமமூர்த்தியின் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட குழுப்  படத்திலிருந்து தனியாகப் பகுத்து உருவாக்கிய எனது படம். குழுப்படம் என்  31 -ஆம் அகவையில் (10-9-1975 அன்று ) நாகையில் உள்ள மகாலட்சுமி  நிழற்படக் கலையகத்தில் எடுக்கப்பட்டது.

----------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றிய போது, என் 33 - ஆம் அகவையில் (10-3-1977 அன்று) நாகையில் எடுத்துக் கொண்ட படம்.

----------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றியபோது,  எனது 36 -ஆம் அகவையில் (25-2-1980 அன்று) நாகப்பட்டினத்தின் எடுத்துக் கொண்ட படம்.

------------------------------------------------------------------------------------------------------------

சேலம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றிய காலை, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளின் போது, போட்டி நிகழ்ச்சிகளை நேர்முக வண்ணனை செய்த போது எடுத்த படம். அப்பொழுது  என்  அகவை  38. (படம் எடுக்கப் பெற்ற நாள் 15-5-1982)

-----------------------------------------------------------------------------------------------------------

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக்காப்பாளராகப் பணியாற்றிய காலை, சேலம் மகாதமா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் போது, நிகழ்ச்சி அறிவிப்பாளர் மற்றும் நேர்முக வண்ணனையாளராகப் பணியாற்றிய போது எடுக்கப் பெற்ற படம். அப்போது என் அகவை 39. படம் எடுக்கப் பெற்ற நாள் 16-6-1983)

------------------------------------------------------------------------------------------------------------