name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 01/11/20

சனி, ஜனவரி 11, 2020

புதிய தமிழ்ச் சொல் (54) அறைகலன் ( FURNITURE )


புதுச் சொல் புனைவோம் !


அறைகலன் = FURNITURE.

----------------------------------------------------------------------------------------------

  

நாம் அமர்வதற்கும்எழுதுவதற்கும்துயில்வதற்கும்புத்தகங்களைப் பாதுகாப்பதற்கும்ஆவணங்களை வைப்பதற்கும் சில  பொருள்களைப் பயன்படுத்துகிறோம்அவற்றை ஆங்கிலத்தில் “FURNITURE’ என்றும் தமிழில் தட்டு முட்டுச் சாமான்கள் என்றும் சொல்கிறோம் !

 

இத்தகைய தட்டுமுட்டுச் சாமான்கள் மரத்தினாலும்இரும்பினாலும் செய்யப்படுகின்றன. FURNITURE என்பதைத் தட்டுமுட்டுச்சாமான் என்று சொல்வது அத்துணைப் பொருத்தமாகவும் ஒலிநயம் மிக்க சொல்லாகவும் இல்லைஅத்துடன்அச்சொல்லின் நீண்ட  வடிவமும் கையாளுவதற்கு இடையூறாக அமைகிறது !

 

FURNITURE என்பதைத் தமிழில் சொல்ல வேறொரு பொருத்தமான சொல் தேவையாக இருந்ததுஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீஇராமலிங்கனார் 1974 –ஆம் ஆண்டு எழுதிய “ஆட்சித் துறைத் தமிழ்” என்னும் நூலின் மூலம் ”அறைகலன்” என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் !

 

அன்று முதல் அரசு அலுவலகாங்களில் FURNITURE என்பதை “அறைகலன்” என்று எழுதவும் பேசவும் வேண்டும்  என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் போதுமான முன்னேற்றம் இல்லை . தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்களுக்கு “அறைகலன்” என்னும் சொல்லை அறிமுகப்படுத்திடவே இக்கட்டுரை வடிக்கப்படுகிறது !


ஆங்கிலத்தில் சொல்லப்படும் TABLE, CHAIR, ALMIRAH, RACK, SHELF, COT, CASH CHEST, WALL COFFER, TEA-POY, அனைத்துமே FURNITURE வகையைச் சேர்ந்ததே ! இவற்றைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ! பார்ப்போமா !

 

நான்கு கால்களை உடையது நாற்காலிஆனால் நான்கு கால்கள் இல்லாத நாற்காலிகளும் இருக்கின்றனஇதற்காகப் புதுச் சொல் தேடி அலையவேண்டாம்.  காரண இடுகுறிப்பெயராக ”நாற்காலி” இருந்துவிட்டுப் போகட்டும். “நாற்காலி” என்னும் சொல்லையே இருத்திக் கொள்வோம்நாற்காலியின் வகைகளை மட்டும் தமிழாக்கம் செய்வோம் !

 

==============================================================

 

CHAIR............................................= நாற்காலி

FOLDING CHAIR.........................= மடக்கு நாற்காலி

“S” TYPE CHAIR..........................=. வளைகால் நாற்காலி

PUG-PROOF CHAIR.....................= பூச்சி புகா நாற்காலி

RATTAN SEATED CHAIR............= பிரம்பிழை நாற்காலி

NYLON SEATED CHAIR..............= வேதியிழை நாற்காலி

NYLON BODY CHAIR..................= வேதி நாற்காலி

 [நைலான் என்பது ஒருவேதிப்பொருள்]

 ARM-LESS CHAIR.........................= கையிலா நாற்காலி

BASKET CHAIR..............................= கூடை நாற்காலி

CUSHION CHAIR...........................= மெத்தை நாற்காலி

DINING CHAIR...............................= அவிழக நாற்காலி 

(அவிழ் = உணவு) (அவிழ் + அகம் = அவிழகம்)

REVOLVING CHAIR.......................= சுழல் நாற்காலி

 

=============================================================

 

அலுவலகங்களில் கோப்புகளை வைக்கவும்அவற்றில் எழுத்துப் பணிகளை மேற்கொள்ளவும் நான்கு கால்கள் மேல் நிலைநிறுத்திய பலகையைப் பயன்படுத்துகிறோம்அந்தப் பலகையின் மிசைப் பகுதி (மேற்பகுதிதான் முழுப் பயனையும் தருகிறது. (மீமிசை என்னும் சொல்லைக் கேள்விபட்டிருக்கிறீர்களா ?  “மீ” என்றாலும் “மிசை” என்றாலும் “மேலே” என்று தான் பொருள் !

 

அந்தப் பலகையின் மிசைப் பகுதியில் வைத்து கோப்புகளில் எழுதலாம்கணினியை வைத்து இயக்கலாம்செய்தித் தாள்களை வைத்துப் படிக்கலாம்முதன்மைத் தேவைக்குரிய சில புத்தகங்களை அடுக்கி வைக்கலாம்தூவல் (PEN), வன்னிகை (PENCIL), போன்ற எழுது கருவிகளை வைத்துக்கொள்ளலாம்இந்த மிசைப் பலகை தான்காலப் போக்கில் “மேசை” ஆகி இந்தியில் “மேஜ்” ஆகி இருக்கிறது. “மேசை” என்பது “மிசை” என்பதன் மரூஉஆகையால், “மேசை” தமிழ்ச் சொல்லே ! மேசையின் வகைகளைப் பார்ப்போமா !

 ------------------------------------------------------------------------------------------------------

SINGLE DRAWER TABLE..........= ஓரறை மேசை

DOUBLE DRAWER TABLE........= ஈரறை மேசை

JUNIOR CLERK’S TABLE..........= சீறகல மேசை

[ சிறுமை + கலம் = சீறகலம் - அகலம் குறைவான]

 SENIOR CLERK”S TABLE..........= இடையகல மேசை

[ இடையகலம் = MEDIUM  BREADTH]

 OFFICER’S TABLE......................= பேரகல மேசை

[பேரகலம் = மிகையகலம்]

 DRAWING TABLE.......................= வரைவு மேசை

WOODEN TABLE.........................= மரமேசை

STEEL TABLE...............................= இரும்பு மேசை

DINING TABLE............................= ஊமணை / அவிழக மேசை

[ஊ = உணவு ; மணை = பலகை ][ அவிழ் = சோறு ]

 

===========================================================

 

அறைகலன்களின் வேறு சில வகைகளைப்  பார்ப்போமா !

 

=============================================================

 

ALMIRAH......................................= நிலைப்பேழை

WOODEN ALMIRAH...................= மரநிலைப்பேழை

STEEL ALMIRAH.........................= இரும்பு நிலைப்பேழை

RACK...............................................= நிலையடுக்கு

BUREAU..........................................= நிலையறைப் பேழை

SIDE RACK.....................................= மருங்கடுக்கு

PIGEON HOLE RACK...................= புறாத்துளையடுக்கு

BOOK RACK....................................= நூலடுக்கு

BOOK SHELF...................................= நூற்பேழை

WALL RACK....................................= சுவர்மாடம்

WALL COFFER...............................= சுவர்ப்பேழை

CASH CHEST...................................= பணப்பேழை

SOFA...................................................= ஈரணை

SOFA CUM BED............................  .= ஈரணைப்பாயல்

TEA-POY............................................= தேநீர் மேசை

COT.....................................................= கட்டில்

SINGLE COT...................................= சீறகல் கட்டில்

[அகல் = அகலம்]

MEDIUM COT.................................= இடையகல் கட்டில்

DOUBLE COT.................................= பேரகல் கட்டில்

FAMILY COT...................................= குடும்பக்கட்டில்

STOOL...............................................= குறுங்காலி

HIGH STOOL...................................= நெடுங்காலி

SHORT STOOL................................= குட்டைக்காலி

TRIPOD.............................................= முக்காலி

 

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050: சிலை (மார்கழி)19]

{04-12-2019}

------------------------------------------------------------------------------------------------------

      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 

கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------

 


சுழல் நாற்காலியும் மிசைப் பலகையும்