name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/12/19

சனி, அக்டோபர் 12, 2019

தமிழ் (23) நம் முன்னோர் ஊர்களுக்குப் பெயர் வைத்த முறை !


ஊர்ப் பெயர் அறிவோம் !


[பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் நூலில் இருந்து ஒருபகுதி]
---------------------------------------------------------------------------------------------------------------------
மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்து ஊர்கள்  குறிச்சி என்று அழைக்கப்பெற்றன. (-டு) வேளாக்குறிச்சி, துவரங் குறிச்சி !  

காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்து ஊர்கள் பாடி, சேரி என்று அழைக்கப் பெற்றன. (-டு) குறிஞ்சிப்பாடி, காட்டுப்பாடி (காட்பாடி); புதுச்சேரி, கூனஞ்சேரி !

வயலும் வயல் சார்ந்த இடமுமான மருத நிலத்தூர்கள் ஊர் என்று அழைக்கப் பெற்றன. (-டு) தஞ்சாவூர், வயலூர் !

கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்து ஊர்கள் பட்டினம். பாக்கம் என்று அழைக்கப்பெற்றன. (-டு) காயல்பட்டினம், அதிராம்பட்டினம், முண்டியம்பாக்கம், ஊரப்பாக்கம் !

இந்த நால்வகை நிலங்களும் தன் நிலையிலிருந்து திரியும் போது பாலை எனப்பட்டது. பாலை நிலத்து ஊர்கள் பறந்தலை என்று அழைக்கப் பெற்றன !

மக்கள் தொகை பல்கிப் பெருகித் திணை மயக்கம்  உண்டான பின், இவ்வழக்கம் பெரும்பாலும் நின்று விட்டது !

இடைக்காலத்தில் வழங்கிய சில ஊர்ப் பெயர்களும், ஊர்ப் பெயர் ஈறுகளும் வெவ்வேறு காரணம் பற்றியவை !

ஆறை என்பது ஆற்றூர் (-டு) (பழையாறை). புத்தூர் என்பது புதிய ஊர்; (எடுத்துக் காட்டு):- காட்டுப்புத்தூர், கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) பட்டி என்பது கால்நடைத் தொழுவம் உள்ள ஊர்; (.டு) கொண்டலாம் பட்டி, நேமத்தான் பட்டி !

பள்ளி  என்பது  பௌத்த, சமண மடம் உள்ள ஊர். (-டு) திருச்சிராப்பள்ளி, தொரப்பள்ளி. பாளையம் என்பது படை இருக்கும் ஊர். (-டு) மேட்டுப் பாளையம், உத்தமபாளையம் !

பட்டு என்பது பாளையத் தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி. (-டு) செங்கழுநீர்ப்பட்டு (செங்கற்பட்டு), சேற்றுப்பட்டு (சேத்துப்பட்டு).  மங்கலம் என்பது பார்ப்பனர் இருக்கும் ஊர். சத்தியமங்கலம்,, நீடாமங்கலம் !

நத்தம் என்பது பார்ப்பனர் அல்லாதார் வாழும் ஊர். (-டு) புலவர் நத்தம், இடையர்நத்தம். குடி என்பது ஒரு குடும்பத்தாரே அல்லது குலத்தாரே வசிக்கும் ஊர். (-டு) காரைக்குடி, தூத்துக்குடி !

பேட்டை என்பது சந்தைகள் கூடும் ஊர். (-டு) முத்துப் பேட்டை, புதுப்பேட்டை.  புரம், புரி என்பன அரசர் தலைநகர். (-டு) காஞ்சிபுரம், தருமபுரம், தருமபுரி, மருங்காபுரி !

மூதூர் என்பது பழைய ஊர்; பேரூர் என்பது மாநகர்; பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி;  வாடை என்பது வேட்டுவர் அல்லது இடையர் குடியிருக்கும் ஊர் !

பண்டார வாடை  என்பது குடிகளுக்குரிய ஊர். அடங்காப் பற்று  என்பது அரசன் ஆணைக்கு அடங்காதவர் வசிக்கும் ஊர்.  குடிக்காடு என்பது குடிகள் வசிக்கும் காட்டூர் !

குடியேற்றம் என்பது மக்கள் குடியேறிய ஊர்.  கல்லாங்குத்து என்பது கடின நிலத்து ஊர். முரம்பு என்பது கற்பாங்கான மேட்டு நிலத்து ஊர். எயில் என்பது மதில் சூழ்ந்த ஊர். விண்ணகரம் என்பது திருமால் கோயில் உள்ள ஊர் !

ஏரி, குளம், கோட்டை, கோயில் முதலிய ஈறுகளில் முடியும் பேர்களைக் கொண்ட ஊர்கள், அவ்வீறுகளாற் குறிக்கப்படும் இடத்தைக் கொண்டவை. ஏரி என்று முடியும் பெயரைக் கொண்ட ஓரூரில் ஏரி இல்லாவிடின், அது ஒரு காலத்தில் இருந்து பின்னர்த் தூர்ந்து போனது என்று அறிதல் வேண்டும்.இங்ஙனமே பிறவும் !

புறம், பட்டு முதலிய சில பெயர்களும், இக்காலத்தில் சிறப்புப் பெயர் இழந்து பொதுப் பெயராக வழங்கி வருகின்றன. இக்காலப் புத்தூர்ப் பெயர்கள் வரலாற்றுச் செய்தியொன்றும் உணர்த்தா என்பதை அறிக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:மடங்கல் (ஆவணி),26]
{12-09-2019}
----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

தமிழ் (22) மொழிச் சிதைவுக்கு இடம் தரலாகாது ! (01)

பேச்சு மொழியை  எழுத்தில் வடிப்பது மாபெரும்  தவறு !



மனித உடலுக்கென்று ஒரு கட்டமைப்பு உள்ளது. இரு கைகள், இரு கால்கள், இரு விழிகள், இரு செவிகள், ஒரு வாய், ஒரு மூக்கு, ஒரு முகம், ஒரு தலை மற்றும் இன்னும் சில உறுப்புகளும் அமைந்த கட்டமைப்புக்கு மனிதன் என்று பெயர். அத்துணை உறுப்புகளுடனும் தான் ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கிறது !

மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களும் - புல், பூண்டு, புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள் அனைத்துமே -  குறிப்பிட்ட திட்டவட்டமான உடல் கட்டமைப்புடனேயே உருவாகி வாழ்கின்றன ! இதுதான் இயற்கை நியதி ! இந்த இயற்கை நியதியைச்  சிதைக்கும் உரிமை எந்த மனிதனுக்கும் கிடையவே கிடையாது !

மொழிகளும் இப்படிப் பட்டவையே ! ஒவ்வொரு மொழிக்கும் ஒரு கட்டமைப்பு உண்டு ! ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் இருப்பதைப் போலத் தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. எழுத்துகளைக் கூட்டவோ, குறைக்கவோ, சிதைக்கவோ  எந்தவொரு தனி மனிதனுக்கும் உரிமை இல்லை !

சூரியன்என்று எழுதியிருப்பதைச்சூரியன்என்று தான் பலுக்க (உச்சரிக்க)  வேண்டும் ! “சூரியன்என்பதுடன் ஒரு எழுத்தைச் சேர்த்தோ அல்லது ஒரு எழுத்தை குறைத்தோ, சொல்லைச் சிதைத்துப் பலுக்குவதற்கு (ஒலிப்பதற்கு) யாருக்கும் உரிமையில்லை !

எப்பொழுது வந்தாய்?” என்று எழுத்து வடிவில் உள்ள சொற்றொடரை , அப்படியே தான் ஒலிக்க வேண்டும் ! ”எப்ப வந்த ?” என்று சிதைத்து ஒலிக்கக் கூடாது ! ஒரு மொழியின் வடிவமானது எழுதும் போதும் சிதைவடையக் கூடாது; உரையாற்றும் போதும் சிதைவடையக் கூடாது; அச்சு ஊடகத்தில் ஏற்றப் படும் போதும் சிதைவடையக் கூடாது; தொலைக்காட்சி முதலிய மின்ம ஊடகங்களில் ஒளிபரப்பு ஆகும் போதும் சிதைவடையக் கூடாது; திரைப்படம் முதலிய காட்சி ஊடகங்களில் காட்டப்படும் போதும் சிதைவடையக் கூடாது !

ஏனெனில், மொழியைப் பலுக்குவதில் (உச்சரிப்பதில்) சிதைவை ஏற்படுத்த எந்தவொரு மனிதனுக்கும் உரிமையில்லை ! கவிதை என்ற பெயரில், சிலர் பேச்சுத் தமிழை”, அச்சு ஊடகத்திலும் மின்ம ஊடகத்திலும் கொச்சைத் தமிழாகப் பதிவேற்றம் செய்து வருவதைக் காண்கையில் மனம் வருந்துகிறது. இவர்கள் கவிஞர்கள்தானா, தமிழ் மீது பற்று உள்ள மானிடர்கள் தானா என்ற ஐயம் எழுகிறது !

பேச்சுத் தமிழில் சொற்கள் திருத்தமில்லாது இருக்கலாம்; குறைபாடுகள் இருக்கலாம்; எல்லா மொழிகளிலிலும்பேச்சு மொழிதிருத்தமில்லாது தான் இருக்கும்.  இது இயல்பு தான் ! ஆனால், அதை அப்படியே எழுத்தில் வடிக்க முற்படுவது மாண்பு நெறி தவறிய செயல்.!  மதி மழுங்கிய செயல் !

எப்படி இருக்கே ?” என்பது அனைத்து  மாந்தர்களின்  பேச்சுத் தமிழ்”. கற்ற மாந்தர்கள் அதை எழுத்தில் வடிக்கையில்எப்படி இருக்கிறாய் ?” என்றுதான் எழுத வேண்டும். பேச்சு மொழியையே எழுத்திலும் கொண்டு வருவேன் என்று யாராகிலும் பிடிவாதம் செய்வாராகில் அவர் பித்தம் பிடித்தவர் என்றுதான் சொல்ல வேண்டும் !

தமிழ் நமது அன்னை மொழி ! அன்னை மொழியைச் சிதைப்பது, பெற்ற அன்னையைச் சிதைப்பதற்கு ஒப்பாகும் ! “தின்றுவிட்டாயா ?” என்னும் சொல்லைத்துன்னுட்டியா ?” என்று கவிதையாக எழுதிப் படித்தாலும் சரி, முகநூலில் எழுதி வெளியிட்டாலும் சரி, அச்சு ஊடகத்தில் வெளியிட்டாலும் சரி, தொலைக் காட்சி உரையாடலில் இடம் பெறச் செய்தாலும் சரி, திரைப்படத்தில் ஒலிக்கச் செய்தாலும் சரி, அப்படிச் செய்பவர், பெற்ற அன்னையின் கை கால்களை ஒடித்து முடமாக்குகிறார் என்று பொருள் !

இயல் வாய்மை (REALISM) என்ற பெயரில் துன்னுட்டியா ?” என்று மேடைகளில் பேசுவதும், கதைகளில் உரையாடலை அமைத்து அச்சிடுவதும், முகநூலில் எழுதுவதும், திரைப்படங்களில் காட்சிகள் அமைப்பதும் அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு வாதாடுவதும், பித்துப் பிடித்தவர்களின் கூன்மதிச் செயல்களாகும். கொச்சை மொழியில் அல்லது கலப்பு மொழியில் செய்தித்தாளில் தலைப்புகளை அமைத்திடும் தாளிகையினரும் இத்தகையவர்களே ! இவர்கள் தங்கள் தவறினை உணர வேண்டும் !

திருத்தமற்ற தமிழ்ப் பேச்சுகளையும், எழுத்துகளையும் பரப்பி வரும் கற்றறிந்த பாழ் மனதினர், அதை முனைப்பாக ஆதரிக்கும் மூடர்கள், வழக்குரைஞராக மாறி வாதாடும் வறிஞர்கள், எல்லோருமே, அன்னைத் தமிழை அரசவையில் நிறுத்தி, அன்று துச்சாதானன் செய்த கொடுஞ்செயலை நிகழ்த்துகிறார்கள் என்பதை உணர வேண்டும் !

கொச்சை மொழியில் பேசுவதும், எழுதுவதும்தான் பொதுமக்களுக்குப் பிடிக்கிறது என்று எந்த மூடனாவது சொல்வானாகில், அவனைப் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன், “அன்னைத் தமிழைச் சிதைக்கிறாயே ! அலகை மாந்தனே ! நீ பொதுமக்கள்  விரும்புகிறார்கள் என்பதற்காக உன்னைப் பெற்ற தாயின் கைகால்களைத் துண்டித்து அவளது துகிலையும்  உரித்தெறிய  முயல்வாயா, சொல் ?”

பேச்சுத் தமிழ்இரு ஆளிநர்களிடையே நிகழும் உரையாடலில் இடம் பெறலாம் ! மேடைப்பேச்சில்பேச்சுத் தமிழுக்குஇடமில்லை; முகநூலிலும், தாளிகைகளிலும் எழுத்து வடிவில் வெளிவரும் கவிதை கட்டுரைகளில் இடம்பெறலாகாது ! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்பேச்சுத் தமிழ்இடம் பெறுதல், மொழிச் சிதைவைப் பொதுமக்களிடையே ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். திரைப்படங்களில்பேச்சுத் தமிழ்இடம்பெறுதல், படத்தைப் பார்க்கும் அனைவரிடமும் அதைப் பரப்புரை செய்வதாகிவிடும் !

அறிவுள்ள தமிழன் மொழிச் சிதைவுக்குத் துணைபோக மாட்டான் ! மானமுள்ள தமிழன் மதி பிறழ்ந்து மொழிச் சிதைவுக்கு இடம் தரமாட்டான் !

-----------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[தி.பி.2050,மடங்கல் (ஆவணி(,24]
{10-9-2019}

------------------------------------------------------------------------------------------------------------       

 தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------



தமிழ் (21) புதிய சொல்லாக்கம் ! தவறான அணுகுமுறை !

அஃறிணைப் பொருள்களுக்கு ‘அன்’ விகுதிப் பெயர்கள் சூட்டுதல் தவறு !



தமிழில் புதிய சொற்களை உருவாக்கும் போது சில அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை:- (01) செய்யப்பெறும் சொல், தமிழ்ச் சொல்லாக இருக்க வேண்டும். (02) பொருள் பொருத்தம் உடையதாக அமைய வேண்டும்.  (03) வடிவில் சிறியதாக இருக்க வேண்டும் (04) ஓசை நயம் உள்ளதாக விளங்க வேண்டும். (05) தமிழ் இலக்கண மரபுக்கு மாறானதாக இருத்தல் ஆகாது !

ஆனால் எந்த வரைமுறையும் இன்றி, குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ் இலக்கண மரபுக்கு மாறானதாக, சிலர் புதிய சொற்களை உருவாக்கி அறிமுகப்படுத்துகிறார்கள். கீழ்க் கண்ட சொற்களைப் பாருங்கள் !

(01). (கரைப்பான்):- தண்ணீர் ஒரு நல்ல கரைப்பான் (SOLVENT) ஆகும் !

(02). (வடிப்பான்):- காப்பிப் பொடியை வடிப்பானில் (FILTER) இட்டுச் சிறிது வெந்நீர் சேர்த்து வைத்து விட்டால், அரைமணி நேரத்தில் நல்ல கசாயம் கிடைக்கும். !

(03) (தேய்ப்பான்):-,துருவை நீக்குவதற்கு நல்ல தேய்ப்பானைப் (SCRATCH BRUSH)  பயன்படுத் வேண்டும் !

(04) (அழிப்பான்):- எழுதியதில் பிழை ஏற்பட்டால், நல்ல அழிப்பான் (RUBBER) கொண்டு அதை அழித்துவிட  வேண்டும் !

(05) (தெளிப்பான்);- பூச்சி மருந்து தெளிப்பதற்குத் தெளிப்பான் (SPRAYER) கருவி பயன்படுகிறது !

(06). (துளைப்பான்):- சோளத்தில் தண்டு துளைப்பான் (STEM PIERCER) அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது !

இந்தச் சொற்றொடர்களில் கரைப்பான் (SOLVENT, வடிப்பான் (FILTER), தேய்ப்பான் (SCRATCH BRUSH), அழிப்பான் (RUBBER), தெளிப்பான் (SPRAYER, துளைப்பான் (PIERCER)  ஆகிய சொற்கள் சரியாகத் தானே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று உங்களுக்குத் தோன்றலாம். இவற்றில் உள்ள பிழை நன்கு படித்தவர்களால் தான் செய்யப்படுகிறது. இவை எப்படிப் பிழையாகும்? பார்ப்போமா ?

சொல் இலக்கணத்தில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என ஐந்து உறுப்புகள் உள்ளன. ”படித்தான்என்னும் சொல்லைப் பகுத்தால் படி + த் + த் +  ஆன்என்று பிரியும். இதில் படி = பகுதி; ஆன் = விகுதி; முதலாவதாக வரும்த்சந்தி; இரண்டாவதாக வரும்த்இடைநிலை. இந்நான்கனுள்விகுதிஎனப்படுவது பால் (GENDER) இடம் (PLACE), எண் (NUMBER) ஆகியவை  காட்டும் சொல் !

படித்தான்”, என்று சொன்னாலே. படிப்புச் செயலைச் செய்த கர்த்தா ஒர்ஆண்என்பதுத் தெளிவாக விளங்கும். இதில் குறிப்பாகஆன்என்று வரும் விகுதி தான், அந்தச் செயலைச் செய்த கர்த்தா ஒருஆண்என்பதை உணர்த்துகிறது !

படித்தது ஒரு பெண்ணாக இருந்தால்ஆள்என்னும் விகுதி அமைந்துபடித்தாள்என்று வரும். படித்தது பலராக இருந்தால்ஆர்விகுதி பெற்றுபடித்தார்என்று வரும்; அல்லதுஅர்விகுதி பெற்றுபடித்தனர்என்று வரும் ! 

(01). “அன்”, “ஆன்என்பவை ஆண்பால் விகுதிகள் (எடுத்துக் காட்டு) (01) படித்தனன் = படி + த் + த் + அன் + அன். இதில் இறுதியில் உள்ளஅன்ஆண்பால் விகுதி. (02) படித்தான் = படி + த் + த் + ஆன். இதில் இறுதியில் உள்ளஆன்ஆண்பால் விகுதி !

(02). “அள்”, “ஆள்என்பவை பெண்பால் விகுதிகள் (எடுத்துக் காட்டு) (01). படித்தனள் = படி + த் + த் + அன் + அள். இதில் இறுதியாக வரும்அள்பெண்பால் விகுதி. (02) படித்தாள் = படி + த் + த் + ஆள். இதில் இறுதியாக வரும்ஆள்பெண்பால் விகுதி !

(படர்க்கை, ஒருமை ) ஆண்பால் காட்டும் விகுதிகள் = “அன்”, “ஆன்
(படர்க்கை, ஒருமை ) பெண்பால் காட்டும் விகுதிகள் = “அள்”, “ஆள்
(படர்க்கை, பன்மை) பலர்பால் காட்டும் விகுதிகள் = “அர்”, “ஆர்
(படர்க்கை, ஒருமை ) ஒன்றன்பால் காட்டும் விகுதிகள் = ”து”, “று”, “டு
(படர்க்கை, பன்மை ) பலவின்பால் காட்டும் விகுதிகள் = “”, “

இவையன்றி, (தன்மை ஒருமை, தன்மை பன்மை, முன்னிலை ஒருமை, முன்னிலை பன்மை காட்டும்) இன்னும் பலவிகுதிகளும் உள்ளன. சுருக்கம் கருதி, சில விகுதிகள் மட்டும் இங்குத் தரப்பட்டுள்ளன !

முன் பத்திகளில் தரப்பட்டுள்ளகரைப்பான்முதலிய சொற்களை இப்போது பாருங்கள். (01) கரைப்பான் = கரை + ப் + ப் + ஆன். (02) வடிப்பான் = வடி + ப் + ப் + ஆன். (03) தேய்ப்பான் = தேய் + ப் + ப் + ஆன். (04) அழிப்பான் = அழி + ப் + ப் + ஆன். (05) தெளிப்பான் = தெளி + ப் + ப் + ஆன் (06) துளைப்பான் = துளை + ப் + ப் + ஆன்.  இவை ஆறிலும்ஆன்என்னும் விகுதிதான் வருகிறது. ”ஆன்என்னும் விகுதி ஆண்பால் விகுதி அன்றோ ?

சொற்றொடர் (01) என்ன ? ”தண்ணீர் ஒரு நல்ல கரைப்பான் ஆகும்”. இதில் வரும்கரைப்பான்” (SOLVENT)  என்பது அஃறிணைப் பெயர்ச் சொல். அஃறிணைப் பெயர்ச்  சொல்லுக்குது” ”று”, “டுஆகிய விகுதிகள் தான் வரும். “ஆன்என்னும் உயர்திணை ஆண்பால் விகுதி வராது. ஒரு அஃறிணைப் பொருளுக்கு, உயர்திணை ஆண்பால் விகுதியானஆன்வரும் வகையில்கரைப்பான்என்று பெயர் வைத்திருப்பது  மாபெரும் தவறு !

கரைஎன்னும் பகுதியுடன், உயர் திணை ஆண்பாலுக்கு உரிய, “ஆன்என்னும் விகுதியைச் சேர்த்து, ”கரைப்பான்” (SOLVENT) என்று ஒரு அஃறிணைப் பொருளுக்குப் பெயர் சூட்டி இருப்பது முதலாவது தவறு. “ஆன்விகுதி வந்திருப்பதால், “கரைப்பான்என்னும் அஃறிணைப் பொருள், ”உயர்திணையைச் சார்ந்த ஒரு ஆண்என்பது போன்று பொருள் மயக்கம் தரும் வகையில், சொல்லாக்கம் செய்திருப்பது இரண்டாவது தவறு !   

படித்தனன்”, “எழுதினான்”, போன்ற வினைமுற்றுகள் அன்றி, “நரைமுடியன்”, ”சேலத்தான்போன்ற பெயர்ச் சொற்களிலும்அன்”, ஆன்போன்ற விகுதிகள் வரும். ஆனால் இங்கும் அவை உயர்திணை ஆண்பாற் சொற்களில்தான் வருகின்றனவேயன்றி அஃறிணைச் சொற்களில் வரவில்லை !


சோளத்தில் தண்டு துளைப்பான் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.”  இந்தச் சொற்றொடரில் வரும்துளைப்பான்என்னும் சொல்ஆன்என்னும் ஆண்பால் விகுதி பெற்று வருவதால் தண்டில் துளைத்தலைச் செய்யும் புழு ஒரு ஆடவன்என்றல்லவோ பொருள்படுகிறது !

புழுக்களில் ஆண் புழு, பெண் புழு எனப் பாலின வேறுபாடு உண்டு. எனினும்புழுஎன்பது அஃறிணையாதலால்ஆன்விகுதி பெற்றுச் சொற்கள் வாரா.  து”, “று”, “டுஅல்லது”, “விகுதி பெற்றே ஒருமை, பன்மைக்கேற்ப எந்தச் சொல்லாயினும் வரும் !

வேளாண் துறை அலுவலர்களும், பாடப் புத்தகம் எழுதும் ஆசிரியர்களும் படிக்காதவர்கள் அல்ல ! நிரம்பப் படித்தவர்கள் தான் ! அவர்கள் தான் இத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள். தவறுகள் இனிமேலாவது திருத்திக் கொள்ளப்படுமா ?

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
(தி.:2050, மடங்கல் (ஆவணி),10]
{27-08-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் (20) அத்திம்பேர் ! அம்மாஞ்சி !

பொருள் புரியாச் சொற்கள் ! புழக்கத்தில் இருப்பது ஏன் ?


[தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி கம்பர் தெருவில் ஒருவீடு]
-------------------------------------------------------------------------------------------------------------

மணி : வாருங்கள் அத்திம்பேர் ! அம்மாஞ்சி நீயும் வாடா !

அத்திம்பேர் : ஏனடா மணி ! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? படிப்பெல்லாம் முடிந்து விட்டதா ?

மணி : ஆமாம் அத்திம்பேர் ! மின்னியல், மின்மவியலில் பொறியியல் பட்டப் படிப்பு ! சென்ற மாதம்தான் முடிவடைந்தது ! இனி வேலை தேடும் படலம்தான் !

அத்திம்பேர் : அதற்கென்ன ? ஏதாவது ஏற்பாடு செய்வோம் ! ஆமாம் அம்மா எங்கே ?

மணி : அம்மா ! அத்திம் பேர் வந்திருக்கிறார். கூடவே அம்மாஞ்சியும் வந்திருக்கிறான். வந்து பாருங்கள் !

அம்மா : வாருங்கள் அண்ணா ! வாடா அம்பி !  வீட்டில் மன்னியும் குழந்தைகளும் நலமா ?

அத்திம்பேர் : எல்லோரும் நலம்தான் தாமரை ! ஆமாம், நீயும் அகத்துக்காரரும் எப்படி இருக்கிறீர்கள் ?

அம்மா : நாங்கள் நலந்தான் அண்ணா ! மணி பொறியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டான் ! அவனுக்குத் தான்  ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் !

அத்திம்பேர் : நான் தான் தமிழ் படித்து விட்டு ஆசிரியராக அல்லாடுகிறேன் ! மணியாவது பொறியியல் பட்டப்படிப்பு படித்திதிருக்கிறானே ! அதுவரை மகிழ்ச்சி தான் !

மணி : சரி அத்திம்பேர் ! உங்கள் ஊர்க்காரர் ஓசூரில் ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறாரே ! அவர் மூலம் எனக்கு உதவி செய்யக் கூடாதா ?

அத்திம்பேர் : சரி மணி ! அடுத்த மாதம் எங்கள் ஊருக்கு வா ! அவரைப் போய்ப் பார்ப்போம் !

மணி : சரி அத்திம்பேர் ! வருகிறேன் !

அத்திம்பேர் : ஆமாம் மணி ! சொல்லுக்குச் சொல் அத்திம்பேர் அத்திம்பேர் என்கிறாயே ? அத்திம்பேர் என்பதற்கு என்ன பொருள்  சொல் பார்ப்போம் ! கூடவே அம்மாஞ்சி, மன்னி என்பதற்கும் பொருள் சொல்ல முடியுமா ?

மணி : அத்திம்பேர் என்றால் அத்தை வீட்டுக்காரர் ! அம்மாஞ்சி என்றால் அத்திம்பேரின் மகன் ! அண்ணன் மனைவி மன்னி ! என்ன சரிதானா அத்திம்பேர் ?

அத்திம்பேர் :  சரி மணி ! அத்திம்பேர், அம்மாஞ்சி, மன்னி  என்றால் யார் என்று சொன்னாயே தவிர, அந்தச் சொற்களின் பொருள் அல்லது திருந்திய வடிவம்  என்னவென்று சொல்லவில்லையே ?

மணி : எல்லோரும் வழக்கமாகச் சொல்வதைத் தான் நானும் சொன்னேன் ! அந்தச் சொற்களுக்குப் பொருள் தெரியாதே அத்திம்பேர் !

அத்திம்பேர் : சரி நானே சொல்கிறேன் ! அத்தை + அன்பர் = அத்திம்பேர் ! அத்தையின் அன்பர், அதாவது அத்தையின் கணவர் என்று பொருள் !

மணி : அப்படியா ? சரி ! அம்மாஞ்சி ?

அத்திம்பேர் : அம்மான் என்றால் மாமன் என்று பொருள். அம்மானின் சேய், அதாவது அம்மானின் மகன் அம்மாஞ்சி ! இப்பொழுது புரிகிறதா ?

மணி : புரிகிறது அத்தையன்பர் அவர்களே ! மன்னி என்பதற்கும் அப்படியே பொருள் சொல்லிவிடுங்கள் !

அத்திம்பேர் : அண்ணல் என்றால் பிற பொருள்களுடன் தமையன் என்றும் ஒரு பொருள் . அண்ணல் என்ற சொல் மருவி அண்ணன் ஆகிவிட்டது. அண்ணன் மனைவி அண்ணி. இந்த அண்ணன் என்பவர் ஒரு வீட்டின் தலைவர். அதாவது மன்னன் ! மன்னனின் மனைவி மன்னி ! அண்ணன் மனைவி அண்ணி; மன்னன் மனைவி மன்னி ! அவ்வளவுதான் !

மணி : தமிழ் நாட்டில் இருக்கிறோம்; அன்றாடம்  தமிழில் பேசுகிறோம்; ஆனால் சில சொற்களுக்குப் பொருள் புரியாமலேயே வாழ்கிறோம் ! இது தவறன்றோ ?

அத்திம்பேர் : தவறு தான் ! அதற்காக நிரம்பவும் வருந்தாதே ! இனி சரியாக எழுதவும் பேசவும் முயற்சி செய் ! அது போதும் !

மணி : அத்தையன்பரே ! உங்களுக்கு ஒன்று தெரியுமா ? நான் பேடுருளி ஒன்று வாங்கி இருக்கிறேன் !

அம்மான் சேய் :  (இடையில் குறுக்கிட்டு) பேடுருளியா ? அப்படியென்றால் என்ன ?

அத்தையன்பர் : குமரன் ! ”பேடுருளி என்றால்  MOPED ! முகநூற் குழுவான தமிழ்ப் பணி மன்றத்தில் இதைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை வந்தது ! பார்த்தேன்! உணவு அருந்தியபின் உனக்கு இது பற்றி விளக்கமாகச் சொல்கிறேன் !

அம்மா : சரி ! எல்லோரும் வாருங்கள் ! உணவருந்தலாம் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல் (ஆவணி) 06]
{23-08-2019}
----------------------------------------------------------------------------------------------------------
       
 “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் (19) தமிழில் பேசுவோம் ! தமிழையே எழுதுவோம் !

ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ, ஆகிய கிரந்த எழுத்துகளை விலக்குவோம் !


தமிழில் உள்ள எழுத்துகள் மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. அவை உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து ஆகியவை !

”, முதல்வரையிலான  12 எழுத்துகளும் உயிரெழுத்துகள் எனப்படும். “க், ங், ச், ஞ், ட், எனத் தொடங்கி, ”ன்“ –ல் முடியும் 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் !

, கா,.......கௌஎனத் தொடங்கி .”,னா......னௌஎன முடியும் 12 X 18 = 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்!

என்பது ஆய்த எழுத்து; (ஆயுதம் அன்று ! ஆய்தம் என்பதே சரி !)

சரி ! தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்துணை ? 12 + 18 + 216 + 1 = 247. தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயமுண்டா ? இல்லை அல்லவா ?

இப்பொழுது NATARAJAN என்பதைத் தமிழில் எழுதுங்கள் ! எழுதிவிட்டீர்களா ? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் !

என்ன இது ? ”நடராஜன்என்று எழுதி இருக்கிறீர்கள் ? நீங்கள்தானே ஒப்புக் கொண்டீர்கள், தமிழ் எழுத்துகள் 247 என்று ? இந்த 247 –ல்என்னும் எழுத்து இருக்கிறதா ? இல்லை அல்லவா ? அப்புறம் எங்கிருந்து இந்தவந்தது ?

தமிழில் சில ஒலிகளுக்கு எழுத்துகள் இல்லை என்று சொல்லி, சில தமிழ்ப் பகைவர்கள்  ”, ””, “”, ”க்ஷ”, ”ஆகிய ஐந்து கிரந்த எழுத்துகளைத் தமிழ் நாட்டில் புகுத்தி விட்டனர்.  மஞ்சள்என்று உரக்கச் சொல்லுங்கள் ! இதில் வரும்என்னும் எழுத்துஎன்றுதானே ஒலிக்கிறது ? அப்புறம் எதற்குத் தனியாக ஒரு”. “மகம்என்று உரக்கச் சொல்லிப் பாருங்கள் ! இதில் வரும்என்பதுஎன்று தானே ஒலிக்கிறது ! அப்புறம் எதற்கு இந்த” ?

சமற்கிருதம், இந்தி ஆகியவற்றில்”, “ஆகிய இரண்டு ஒலிகளுக்கும் எழுத்துகள் இல்லை. ”எறும்புஎன்று வடமொழியில் எழுத முடியாது.” “ஏறும்புஎன்று தான் எழுத முடியும். “தொல்காப்பியம்என்று இந்தியில் எழுத முடியாது; “தோல்காப்பியம்என்று தான் எழுத முடியும் !

வங்காள மொழியில்என்னும் ஒலிக்கு எழுத்து இல்லை. “வைத்தியநாதன்என்று வங்காள மொழியில் எழுத முடியாது. “பைத்தியநாதன்என்றுதான் எழுத முடியும். அங்குஎன்னும் ஒலி இல்லாமையைஎன்னும் ஒலி தான் இட்டு நிரப்புகிறது !

ஆங்கிலத்தில்அன்பழகன்என்று எழுத முடியாது. ANBAZHAGAN என்று எழுதுகிறோம். “ZHA" மூன்று எழுத்துகளும்என்னும் ஒலியைக் கொண்டுவர முடியாது. ZINC, ZEBRA, ZONE, ZOO ஆகிய எந்த ஆங்கிலச் சொல்லிலும்எழுத்தின் ஒலி வருகிறதா ? இல்லையே ! ஆங்கிலத்தில்ஒலி இல்லை என்பது உண்மை அன்றோ !

உலகத்தில் எந்த மொழியை எழுத்துக் கொண்டாலும், அந்த மொழிகளில் அனைத்து ஒலிகளையும் ஒலிப்பதற்கான எழுத்துகள் இருக்கின்றன என்று யாராலும் கூற முடியாது. குறிப்பிட்ட ஒலியைப் பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) ஏதாவதொரு எழுத்து இடத்திற்குத் தக்கவாறு அங்கு அமைகிறது !

இந்த உண்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், தமிழில் கிரந்த எழுத்துகளான”, “”, “”, “க்ஷ”, “ஆகியவற்றைப் புகுத்தியவர்களின் தமிழ்ப் பற்றை என்னவென்பது ?   அவற்றை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் நாமும்தமிழ்ப் பகைவர்என்னும் பழிக்கல்லவா ஆளாகிறோம் !.

இனிமேல், நாம்நடராசன்”, என்றே எழுதுவோம் ! “நடராஜன்வேண்டாம். “சுரேச்குமார்என்று எழுதுவோம்; “சுரேஷ்குமார்வேண்டாம். “”இராமதாசுஎன்று எழுதுவோம்; “இராமதாஸ்வேண்டாம் !

என்ன நண்பர்களே ! கிரந்த எழுத்துகளை விலக்கிவிட்டுத் தமிழ் எழுத்துகளையே இனிப்  பயன்படுத்தலாமா ?  நீங்கள் அணியம் (READY) என்றால் நானும் அணியமே ! “அணியம்என்று பின்னீடு செய்து நமது தமிழ்ப் பற்றை உலகறியச் செய்வோமே ! இதற்கும் ஒருவிழைவு” (LIKE) தராமல்அணியம்என்று கருத்துரை (COMMENT) எழுதுங்கள் பார்க்கலாம் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மடங்கல் (ஆவணி),09]
{26-08-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------