name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 03/14/16

திங்கள், மார்ச் 14, 2016

புதிய தமிழ்ச் சொல் (39) ஆடை மாடம் (WARDROBE)

புதுச்சொல் புனைவோம் !



ஆடை மாடம் = WARDROBE

=====================================================
பாவையும் எழில்மதியும் அறைகலன் வில்லூரி  (FURNITURE MART) ஒன்றில் சந்திக்கின்றனர் ]
=====================================================

பாவை.. எழில் ! நீயெங்கே இங்கே ?

எழில்... “ஸ்டீல் பீரோஒன்று வாங்கலாம் என்று வந்தேன் ! அப்பா சற்று நேரம் கழித்து வருவார் !


பாவை.. நீ ஸ்டீல் பீரோ” (STEEL BUREAU) வாங்கப் போகிறாயா, “ஸ்டீல் கப்போர்டு” (STEEL CUPBOARD) வாங்கப் போகிறாயா அல்லது ஸ்டீல் அல்மிரா” (ALMIRAH) வாங்கப் போகிறாயா ?


எழில்.....என்ன பாவை ! என்னை இப்படிக் குழப்புகிறாய்


பாவை...ஆமாம் எழில் ! 


 பீரோ என்றால் இழுவறையுள்ள சாய் தள எழுது மேசை. இதை சாய்தள மேசைஎன்று சொல்லலாம். ( BUREAU MEANS WRITTING DESK WITH DRAWERS) 


கப்போர்டுஎன்பது நிலைமாடம்” (CUPBOARD MEANS SHELVED CLOSET OR CABINET FOR CROCKERY, PROVISIONS etc.) 


அல்மிரா (அலமாரி)என்பது நிலைப்பேழை” (ALMIRAH MEANS WARDROBE OR MOVABLE CUPBOARD) 


வார்டுரோப்என்பது ஆடை மாடம்” ( WARDROBE MEANS PLACE WHERE CLOTHES ARE KEPT, esp., LARGE CABINET OR MOVABLE 


 ரேக் என்பது நிலையடுக்கு”. (RACK MEANS FIXED OR MOVABLE FRAME OF WOODEN OR METAL BARS FOR HOLDING FODDER, PLATE, HAT, TOOLS, PIPE etc.).

 

 ஆனால், நாம் பீரோ, அல்மிரா, கப்போர்டு என்ற பல பெயர்களால் ஒரே பொருளைத்தான் சொல்கிறோம் !


எழில்...என்ன பாவை ! ஒவ்வொன்றுக்குமிடையே வேறுபாடுகள் உளவா ? சுருக்கமாக அவற்றின் பெயர்களை மீண்டும் சொல்லேன் !


பாவை..பீரோ.................= சாய்தள மேசை

                 கப்போர்டு.... = நிலைமாடம்
                அல்மிரா....... = நிலைப்பேழை
                 வார்டுரோப்...= ஆடை மாடம்
                 ரேக்....................= நிலையடுக்கு

எழில்.....நான் நிலைப்பேழை தான் வாங்க வந்திருக்கிறேன் பாவை ! ஆமாம் மேசை என்பது தமிழ்ச் சொல்லா ?


பாவை...அதிலென்ன ஐயம் ? மேல் + செய்= மேல்செய் > மேசெய் > மேசை. நான்கு காலகளில் நிறுத்தப்பட்டு கிடை வசத்தில் இருக்குமாறு கோக்கப்பட்டுள்ள பலகையின் மேல் வைத்துத் தான் நாம் எழுதுதல், வரைதல், படித்தல் போன்ற பணிகளைச் செய்கிறோம். அதனால் தான் (மேல் செய்) மேசை என்ற பெயர் வந்தது. 


எழில்...அப்புறம் ?


பாவை:“சோபாஎன்பது ”ஈரணை”. “ஸ்டூல்என்பது பாண்டில்”. “டீப்பாய்என்பது தேநீர் பலகை. போதுமா ?


எழில்.... இன்று இவ்வளவு போதும் ! நீ சென்று வா ! நான் நிலைப்பேழை வாங்கிக் கொண்டு வருகிறேன்.


 ======================================================

உல்” = உள்ளொடுங்கற் கருத்து வேர். (பாவாணரின் வேர்ச் சொற்கட்டுரைகள்.) உள்ளொடுங்கல் = குறிப்பிட்ட வரம்புக்குள் அடங்குதல்.

உல் > உர் .> ஊர் > ஊரி

======================================================


கல் + ஊரி.... = கல்லூரி

வில் + ஊரி...= வில்லூரி

 

=====================================================

 கல்லூரி.......= குறிப்பிட்ட வளாக வரம்புக்குள் ஒடுங்கி இருப்பது, இந்த கல்வி கற்பிக்குமிடம்

 

 வில்லூரி..... = குறிப்பிட்ட கட்டட வரம்புக்குள் அடங்கி, ஒடுங்கி இருப்பது இந்த விற்பனை நிலையம்.

 

====================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{14-03-2016} 

=======================================================

         
ஆடைமாடம்