name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 03/16/16

புதன், மார்ச் 16, 2016

புதிய தமிழ்ச் சொல் (40) அல்லியம் ( TRACTOR )

புதுச்சொல் புனைவோம் !



அல்லியம் = TRACTOR

-------------------------------------------------------------------------------------------

தமிழில் உல்என்னும் வேர்ச்சொல் வளைதல்என்னும் கருத்தை உணர்த்தக் கூடியது. உல்என்னும் வேர்ச் சொல்லில் இருந்து வளைவுஎன்னும் பண்பை உள்ளடக்கிய உலகு”, “உலக்கை”, “உலா”, “உழல்” “உருள்”, “உருண்டைபோன்ற பல சொற்கள் உருவாகிப் புழக்கத்தில் உள்ளன !

 

உல்என்னும் வேர்ச்சொல் அல்என்று திரிந்து அதே வளைதற் கருத்தை உணர்த்தும் சொற்களை உருவாக்குகிறது. உல் > அல் > அல்லி = பகலில் மலர்ந்து இரவில் குவியும் (கூம்பும்) மலர். மலர்தலும் குவிதலும் இதழ்களின் வளைந்து இயங்கும்பண்பை உணர்த்துவன !

 

உல் > அல் > அல்லி > அல்லியம் = உழக்கூடியது என்று பொருள். உழுதல் என்பது மண்ணைக் கீழ் மேலாகப் புரட்டி விடுவது தானே. கீழ் மேலாக மண் புரட்டப்படுவதில் வளைதற் கருத்து உள்ளடங்கி இருப்பதைக் காணலாம். இக்காலத்தில் விளை நிலங்களை உழுவதற்குப் பயன்படுத்தப் பெறும் ஒரு எந்திர ஊர்தி தான் டிராக்டர்” (TRACTOR) என்பது. வேறு நோக்கங்களுக்கு இதைப் பயன்படுத்தினாலும் இதனுடைய முதன்மைப் பயன் நிலத்தை உழுதல்என்பதே ! 

 

டிராக்டர்என்னும் ஆங்கிலச் சொல்லை இழுவையூர்தி”, “”உழுவையூர்தி” ”இயந்திரக் கலப்பைஎன்றெல்லாம் தமிழாக்கம் செய்திருக்கின்றனர். இச்சொற்களையெல்லாம் விட அல்லியம்என்பது சுருங்கிய வடிவும் ஒலிநயமும், பொருள் நயமும் உடைய சொல்லாக விளங்குவதால் டிராக்டர்” (TRACTOR) என்பதை நாம் அல்லியம்என்றே அழைப்போமே !

 

=====================================================


TRACTOR............................= அல்லியம்


TRACTOR WORKSHOP......=
அல்லியச் சீரகம்


TRACTOR MECHANIC........=
அல்லியக் கம்மியர்


TRACTOR DEALER.............=
அல்லிய வணிகர்


TRACTOR MECHANISM.....=
அல்லியக் கம்மியம்


TRACTOR MECHANIC
TRAINING.............................=
அல்லியக் கம்மியப் பயிற்சி

TRACTOR TYRE..................=
அல்லிய  விளிம்புறை

POWER TILLER...................= 
நாஞ்சில் / நாஞ்சிலூர்தி



=====================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{16-03-2016}

 

=====================================================

 


அல்லியம்