name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (06) குந்தம் ( PUNCH )

ஞாயிறு, டிசம்பர் 13, 2015

புதிய தமிழ்ச் சொல் (06) குந்தம் ( PUNCH )

புதுச்சொல் புனைவோம் !

PUNCH = குந்தம்
----------------------------------------------------------------------------------------------------------

” குல் “ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் “ குந்தம் “. குல் > குன் > குந்து > குந்தம். “குல்” என்னும் வேர்ச்சொல் “குத்துதல்” என்னும் கருத்தைத் தழுவிய சொல் !

குல் > குள் > குளவி = கொடுக்கு
போன்ற உறுப்பினால் கொட்டும் தேனீ
குல் > கள் > கள்ளி = குத்தும் முட்செடி
குல் > கிள் > கிளி =கிள்ளும் அலகுடைப் பறவை
குல் > குன் > குந்து > குந்தம் = குத்தும் கருவி.


"குந்தம் "என்பது குத்தும் தொழிலுக்குப் பயன்படுத்தப் பட்ட ஒரு கருவி.



”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப் பாட்டு என்னும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வரி !(வரி : 41)

”குந்த மலியும் புரவியான்“ என்பது புறப் பொருள் வெண்பா மாலை  ! (4:7)

“வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி  ! (1678).



பொறியியல் பணி மனைகளில் மாழை (Metal) வில்லைகளில் அல்லது தளங்களில் ஒரு ஆழமான புள்ளியையோ அல்லது வட்டத்தையோ அல்லது எழுத்தையோ அல்லது இலக்கத்தையோ அல்லது உருவத்தையோ அழுத்தமாகக் குத்திப் பதிவதற்கு ” பஞ்ச் “ எனப்படும் சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது !

மாழைத் தளத்தில் “ பஞ்ச் “ சின் முனையை வைத்து, அதன் தலைப் பகுதியில் சுத்தியால் (Hammer) ஓங்கித் தட்டும்போது, “பஞ்ச்” சின் முனை மாழைத் தளத்தில் குத்தி இறங்கி, தனது தடத்தைப் பதிக்கிறது !


இவ்வாறு குத்தித் தடம் பதிக்கும் கருவியைக் “ குந்தம் “ என்று அழைப்பது சாலப் பொருத்தமே. “பஞ்ச்” என்னும் பெயரைப் பஞ்சாய்ப் பறக்க விட்டு விட்டால், “குந்தம்” நம்மிடம் வந்து குந்திக் கொண்டு உதவிகள் செய்யாதா ?


வாருங்கள் நண்பர்களே ! குந்தம் என்னும் சொல்லின் அடிப்படையில் பிறக்கும் ஏனைய சொற்களையும் கூப்பிட்டுக் கொஞ்சி மகிழலாம் !!


==============================================================


PUNCH................................= குந்தம்
BELL PUNCH......................= மணிக் குந்தம்
CENTER PUNCH.................= மையக் குந்தம்
DOT PUNCH........................= புள்ளிக் குந்தம்
FIGURE PUNCH..................= உருக் குந்தம்
HOLLOW PUNCH................= புழல் குந்தம்
LETTER PUNCH..................= மொழிக் குந்தம்
NUMBER PUNCH................= இலக்கக் குந்தம்
NAIL PUNCH........................= ஆணிக் குந்தம்
PRICK PUNCH.....................= கூர்க் குந்தம்
PIN PUNCH..........................= ஊசிக் குந்தம்


==============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

==============================================================
எண் குந்தம்

மொழிக் குந்தம்

மையக்குந்தம்


6 கருத்துகள்:

  1. செம்மொழியான தமிழுக்குச் சிறப்பான பங்களிப்பு ! குந்தம் அருமையான மொழியாக்கம் !

    பதிலளிநீக்கு
  2. இலக்கியங்களில் கையாளப் பெற்றிருந்த சொற்களை புதிய பொருளுடன் புழக்கத்தில் விடும் முயற்சி போற்றத்தக்கது !

    பதிலளிநீக்கு
  3. குத்தம் பற்றிய தகவலுக்கு நன்றி.மேலும் செங்குந்தர் பிடித்துக்கொண்ட கைக்கோளர் முதலி என சமூகப் பெயராகும் உள்ளது. மேலும் சேந்தன் திவாகர நிகண்டில் இவர்களை "செங்குந்தப்படையோர் சேனைத் தலைவர் காருகர் தத்துவராயர் கைக்கோளரே"என நூற்பாவில் கூறியுள்ளார். இதில் தவறுதலாக கூறி இருந்தால் என்னை மன்னிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .