name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (24) மெய்யீற்றுப் புணரியல் - வருமொழி முதலெழுத்து திரிபடைதல் (நூற்பா.237)

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (24) மெய்யீற்றுப் புணரியல் - வருமொழி முதலெழுத்து திரிபடைதல் (நூற்பா.237)

 

                                  (04)மெய் ஈற்றுப் புணரியல்

 

                           மெய்  ஈற்றின் முன் மெய்.

 

நூற்பா.237. (வருமொழி முதலெழுத்துத்   திரிபடைதல்)

”ன” “ல” முன் “ண” ‘ன” வும்,  “ண” “ள” முன்  “ட” ” ண” வும்

ஆகும் “த” “ந”க்கள் ஆயும்  காலே (நூற்பா.237)

 

நிலைமொழி ஈற்றில்  “ன”கரம் நின்று   வருமொழி முதலில் ”த”கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில் ”த”கரம் “ற”கரமாகத் திரியும். (பக்.189) 

(நூற்பா.237)

 

பொன் + தீது = பொன்றீது (பக்.183)

தென் + திறம் = தென்றிறம்.

 

நிலைமொழி ஈற்றில்  “ல”கரம் நின்று   வருமொழி முதலில் ”த”கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில் ”ல”கரம்,  ”த”கரம் இரண்டும் 

“ற”கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)

 

கல் + தீது = கற்றீது (பக்.183)

சொல் + தமிழ் = சொற்றமிழ்

 

நிலைமொழி ஈற்றில்  “ன”கரம் நின்று   வருமொழி முதலில் ”ந”கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில் ”ந”கரம் “ன”கரமாகத் திரியும். (பக்.189) 

(நூற்பா.237)

 

பொன் +  நன்று = பொன்னன்று (பக்.189)

தேன் + நன்று = தேன்னன்று

 

நிலைமொழி ஈற்றில்  “ல”கரம் நின்று   வருமொழி முதலில் ”ந”கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில் ”ல”கரம் ”ந”கரம் இரண்டும் 

“ன”கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)

 

கல் + நன்று = கன்னன்று (பக்.189)

கல் + நெய் = கன்னெய்

 

நிலைமொழி ஈற்றில்  ”ண”கரம் நின்று    வருமொழி முதலில் ”த”கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில் “த”கரம்  ‘ட” கரமாகத் திரியும். (பக்.189)

(நூற்பா.237)

 

மண் + தீது = மண்டீது (190)

கண் + தீது = கண்டீது

 

நிலைமொழி ஈற்றில்  ”ள”கரம்  நின்று வருமொழி முதலில் ”த”கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில்”ள”கரம்  ”த”கரம் இரண்டும் 

“ட”கரமாகத் திரியும்.(பக்.189) (நூற்பா.237)

 

முள் + தீது = முட்டீது (பக்.190)

தேள் + தீது = தேட்டீது

 

நிலைமொழி ஈற்றில்  ”ண”கரம் நின்று    வருமொழி முதலில் ”ந”கரம்  

வந்தால் அல்வழிப் புணர்ச்சியில்”ந”கரம்  “ண”கரமாகத் திரியும். (பக்.189)

(நூற்பா.237)

 

மண் + நன்று = மண்ணன்று (பக்.190)

விண் + நமதே = விண்ணமதே

 

நிலைமொழி ஈற்றில்  ”ள”கரம் நின்று    வருமொழி முதலில் ”ந”கரம்  

வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் “ள”கரம் ”ந”கரம்  இரண்டும்

“ண”கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)

 

முள் + நன்று = முண்ணன்று (பக்.190)

கள் + நன்று = கண்ணன்று

 

நிலைமொழி ஈற்றில்  ”ன”கரம் நின்று    வருமொழி முதலில் ”த”கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில் “ன”கரம் ”த”கரம்  இரண்டும்

“ற”கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)

 

பொன் + தீமை = பொற்றீமை (பக்.190)

தென் + துருவம்  = தென்றுருவம்

 

நிலைமொழி ஈற்றில்  ”ல”கரம்  நின்று    வருமொழி முதலில் ”த”கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில் ”ல”கரம் “த”கரம் இரண்டும் “

ற”கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)

 

கல் + தீமை = கற்றீமை (பக்.190)

பள் = தெளிவு = பற்றெளிவு.

 

நிலைமொழி ஈற்றில்  ”ன”கரம்  நின்று    வருமொழி முதலில் ”ந”கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில் ”ந”கரம் “ன”கரமாகத் திரியும். (

பக்.190) (நூற்பா.237)

 

பொன் + நன்மை = பொன்னன்மை (பக்.190)

கான் + நன்று = கான்னன்று

 

நிலைமொழி ஈற்றில்  ”ன”கரம்  நின்று    வருமொழி முதலில் ”ந”கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில் ”ந”கரம் “ன”கரமாகத் திரியும். (

பக்.190) (நூற்பா.237)

 

கல் + நன்மை = கன்னன்மை (பக்.190)

தன் + நிழல் = தன்னிழல்

 

நிலைமொழி ஈற்றில்  ”ண”கரம்  நின்று    வருமொழி முதலில் ”த”கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்”ண”கரம்  ”த”கரம்  இரண்டும்

“ட”கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)

 

மண் + தீமை = மட்டீமை (பக்.190)

தூண் + தேர்வு = தூட்டேர்வு

 

நிலைமொழி ஈற்றில்  ”ள”கரம்  நின்று    வருமொழி முதலில் ”த”கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்”ள”கரம்  ”த”கரம்  இரண்டும் “

ட”கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)

 

முள் + தீமை = முட்டீமை (பக்.190)

தேள் = தீமை = தேட்டீமை.

 

நிலைமொழி ஈற்றில்  ”ண”கரம்  நின்று    வருமொழி முதலில் ”ந”கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்”ந”கரம் “ண”கரமாகத் திரியும். (

பக்.190) (நூற்பா.237)

 

மண் + நன்மை = மண்ணன்மை (பக்.190)

 

நிலைமொழி ஈற்றில்  ”ள”கரம்  நின்று    வருமொழி முதலில் ”ந”கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்”ந”கரம் “ண”கரமாகத் திரியும். 

(பக்.190) (நூற்பா.237)

 

முள் + நன்மை = முண்ணன்மை (பக்.190)

கள் + நன்மை = கண்ணன்மை.

 -------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[Veda70.vvQgmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .