name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (18) பொதுப் புணர்ச்சி - எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினம், இடையினம் வரல் (நூற்பா.158)

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (18) பொதுப் புணர்ச்சி - எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினம், இடையினம் வரல் (நூற்பா.158)

 

 

                            பொதுப்புணர்ச்சி

 

எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்) (பக்.121)

 

 

நூற்பா.158 (எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்) (பக்.121)

 

எண்மூ எழுத்து ஈற்று  எவ்வகை மொழிக்கும்

முன்வரு  ஞ, ந, ம, ய,  வ,க்கள் இயல்பும்

குறில்வழி ‘ய”த்தனி “ஐ”ந்”நொ’’து’ முன்மெலி

மிகலுமாம் ண, ள, ந, ல,  வழி ‘ந’ திரியும்.  (நூற்பா.158)

 

{உயிரெழுத்து =12 + ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ்,ள்,=11 + குற்றியலுகரம் =1,மொத்தம் 24 } (பக்.72.நன்னூல்) (நூற்பா.107)

 

 எண்மூ எழுத்து ஈற்று மொழிக்கு முன் வரும் ஞ, ந, ம, ய, வ, இயல்பாகும்.

 

{உயிரெழுத்து =12 + ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ்,ள்,=11 + குற்றியலுகரம் =1,மொத்தம் 24 } (பக்.72.நன்னூல்) (நூற்பா.107)

 

இந்த 24 எழுத்துகளையும் ஈற்றெழுத்தாகக் கொண்ட எந்தவொரு சொல்லுக்கும் முன் வரும் ஞகர, நகர, மகர, யகர, வகரங்கள், அல்வழி வேற்றுமை இரண்டிலும் இயல்பாகும். (பக்.121) (நூற்பா.158)

 

மண் + மேடு = மண்மேடு

நம் + வீடு = நம் வீடு

யாம் + நாடோம் = யாம் நாடோம்

பேய் + வீடு = பேய்வீடு

தேர் + வீதி = தேர்வீதி

கல் + வீடு = கல்வீடு

 

குறில்வழி “ய”முன்  வரும் ஞ, ந, ம, வ, மிகலும் ஆம் !

குற்றெழுத்தின் பின் நிற்கும் ‘ய்’ (எ-டு. மெய்) , முன் வரும் ஞகார, நகார, மகாரங்கள் மிகும். (பக்.121) (நூற்பா.158)

 

எ-டு) மெய் + மாண்டது = மெய்ம்மாண்டது. (பக்.123)

 

தனி “ஐ”ம்முன் வரும் ஞ, ந, ம,  மிகும்.

ஓரெழுத்து ஒரு மொழியாகிய தனி ‘ஐ’ (எ-டு.கை), முன் வரும் ஞகார, நகார, மகாரங்கள் மிகும். (பக்.121) (நூற்பா.158)

 

(எ-டு) கை + நீண்டது = கைந்நீண்டது)

             ஐ + நூறு = ஐந்நூறு (பக்.123) (நூற்பா.158)

 

நொ’’து’ முன்வரும் ஞ, ந, ம ஆகியவை மிகும்.

‘நொ’, ’து’ முன் வரும் ஞகார, நகார, மகாரங்கள் மிகும். (பக்.121)

 

(எ-டு) நொ + மாடா = நொம்மாடா.(பக்.123) (நூற்பா.158)

 

ண, ள, ந, ல,  வழி ‘ந’ திரியும்.

ண, ள, ன, ல, அகியவை முன் வரும் நகரம் முன் திரியும். (ஆனால் பிற ஈற்றின் முன் இயல்பாகும்).(பக்.121) (நூற்பா.158)

 

வேற்றுமையில் வருமொழி ‘ந’கரம் திரியும்.(பக்.122) (நூற்பா.158)

 

மண் + நீட்சி = மண்ணீட்சி(நூற்பா.158)

முள் + நீட்சி = முண்னீட்சி

பொன் + நீட்சி = பொன்னீட்சி

கல் + நீட்சி = கன்னீட்சி

கல் + நெய் = கன்னெய்

அல்வழியில் வருமொழி ‘ந’கரம் திரியும்(பக்.122)

 

மண் + நீண்டது = மண்ணீண்டது. (நூற்பா.158)

முள் + நீண்டது = முன்னீண்டது

பொன் + நீண்டது = பொன்னீண்டது.

கன் + நீண்டது = கன்னீண்டது

அல்வழியில் வருமொழி நகரம் திரிந்தது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்

 -------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .