name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கணம் (13) ”கள்” விகுதிப் பிழை; இடையின வல்லினப் பிழை ! !

வெள்ளி, அக்டோபர் 11, 2019

இலக்கணம் (13) ”கள்” விகுதிப் பிழை; இடையின வல்லினப் பிழை ! !

பொதுவகைப் பிழைகள் சில !

கள் விகுதிப் பிழைகள்;  இடையின வல்லின வேறுபாடு .


இரண்டொரு செய்திகளைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டு என்னும் சொல் வருடத்தைக் குறிக்கும்போதுஆண்டு காலம்” ( ஐம்பது ஆண்டு காலம் ) என்று எழுதுவது சரி. “ஆண்டுக் காலம்தவறு ! (இடையில்க்வராது.).

ஆண்டு என்னும் சொல்அங்கேஎன்று பொருள்படும் இடங்களில்ஆண்டுக் கண்டதுஎன்றுக்சேர்த்து எழுத வேண்டும். “ஈண்டுஎன்னும் சொல்இங்கேஎன்னும் பொருள் உடையதால் ஈண்டுக் கேட்டனர்என்றேக்சேர்த்து எழுத வேண்டும். “ஈண்டு கேட்டனர்தவறு !


--------------------------------------------------------------------------------------------------------
                      சரி ..........................................................................தவறு
---------------------------------------------------------------------------------------------------------

                  நாள்கள்................................................................நாட்கள்
                  தாள்கள்................................................................தாட்கள்
                  கோள்கள்.............................................................கோட்கள்
                  ஆள்கள்................................................................ஆட்கள்
                  தேள்கள்...............................................................தேட்கள்
                  படைப்புகள்.......................................................படைப்புக்கள்
                  அடைப்புகள்......................................................அடைப்புக்கள்
                  உடைப்புகள்......................................................உடைப்புக்கள்
                  பெயர்களுக்கு...................................................பெயர்கட்கு 
                  அவர்களுக்கு.....................................................அவர்கட்கு 
                  இவர்களுக்கு......................................................இவர்கட்கு
                  சுவர்களுக்கு.......................................................சுவர்கட்கு
                  பள்ளிகளுக்கு.....................................................பள்ளிகட்கு


...............................................................................................................................................

மேலே முதல் வரிசையில் கண்டவண்ணம் எழுதுவது சரி. இரண்டாவது வரிசையில் கண்டிருப்பன பிழை வடிவங்கள். “கள்விகுதியாக இருக்கும் இடங்கள் இவை. எனவேமிகுதலும்’, ‘மாற்றம்அடைதலும் கூடாது. இயல்பாகவே இருக்க வேண்டும் !

( நாள் + கள் = நாள்கள்: ) (இதில் நாள் = பகுதி; கள் = விகுதி) “கள்விகுதியாக வராமல் தனிச் சொல்லாக, மதுவைக் குறிப்பதாக, நாள் என்னும் சொல்லுடன் சேர்ந்து வரும்போதுநாட்கள்என்று ஆகும். அன்று இறக்கிய கள் என்பது அச்சொல்லுக்கு இங்கே பொருள் !

இதுபற்றிப் புலவர்களுக்கு இடையே வேறுபட்ட கருத்து இருக்கின்றது என்றாலும் முதுபெரும் புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் போன்றவர்கள் மேற் கூறியதே சரி என்று ஆதாரங்களுடன் விளக்குவதைக் கேட்டிருக்கிறேன் !


---------------------------------------------------------------------------------------------------------
                   
                           இடையின வல்லின வேறுபாடு !

----------------------------------------------------------------------------------------------------------

       மதிப்புக்குரிய...................................................மதிப்புக்கு உரிய
       மதிப்புக்குரிய...................................................மதிப்புக் குறிய,
       ................................................................................(மதிப்பில் மட்டமான)
       கோருகிறேன்...................................................வேண்டிக் கொள்ளுகிறேன்
       கோறுகிறேன்....................................................(கோறல்=கொலை செய்தல்)
       ................................................................................கொலை செய்கிறேன்.
       அக்கரை..............................................................அந்தக் கரை
       அக்கறை.............................................................பற்று (Interest)


------------------------------------------------------------------------------------------------------------

இச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிந்து பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மற்றொன்றைப் பயன் படுத்தினால், பொருளே வேறுபட்டுவிடும். ஒரு மேல் அலுவலருக்கு ஒருவர்மதிப்புக்குறிய ஐய !” என்று விளித்து மடல் எழுதினால், அதன் பொருள்மட்டமான ஐயாஎன்றே ஆகும் !

இதை இந்நூலாசிரியர் ஆய்வு செய்த அலுவலகம் ஒன்றில், அவ்வலுவலருக்குச் சுட்டிக் காட்டிய போது திடுக்கிட்டார், தன் மேல் அலுவலருக்கு அப்படி எழுதிவிட்ட ஓர் அலுவலர். திருமண அழைப்புகளில் மணமக்களை  வாழ்த்தக் கோறுகிறேன் என்று எழுதுகிறார்களே ! இதன் பொருள் என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் !


------------------------------------------------------------------------------------------------------------

இடையின வல்லின வேறுபாட்டை மேலும் உணர, பின்வரும்
 வரிசைகளையும் கவனிக்க !

-----------------------------------------------------------------------------------------------------------
                         

                         கூரிய.........................= கூரான
                         கூறிய........................= சொன்ன
                         எரி...............................= தீப்பற்றி எரி
                         எறி..............................= வீசு
                         கரி...............................= அடுப்புக்கரி
                         கறி..............................= உண் பொருள்
                         மருப்பு.......................= கொம்பு
                         மறுப்பு.......................= எதிர்த்துக் கூறல்
                         பொருப்பு..................= மலை
                         பொறுப்பு..................= Responsibility
                         எண்ணெய்..............= எள் நெய் (OIL)
                         எண்ணை.................= Number
                         இரத்தல்...................= பிச்சை எடுத்தல்
                         இறத்தல்..................= சாதல்
                         குரங்கு......................= வானரம்
                         குறங்கு.....................= தொடை


-------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய 
தமிழில் எழுதுவோம்என்னும்
 நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,32]
{17-08-2019}

--------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் பகத்தில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------






1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .