name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம் பாடல் (11) காக்கைக்கு ஆகா கூகை !

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (11) காக்கைக்கு ஆகா கூகை !

காக்கைக்கும் கூகைக்கும் ஆகாது !


காளமேகப் புலவர் கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருச்சி, திருவானைக்காவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இரு பொருள் படும்படிப் பாடுவதில் வல்லவர் !
------------------------------------------------------------------------------------------------------------

காக்கைகா காகூகை  கூகைக்கா  காகாக்கை
கோக்குக்கூ  காக்கைக்குக்  கொக்கொக்ககைக்கைக்குக்
காக்கைக்குக்  கைக்கைக்கா  கா

-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
[காக்கைக்கு ஆகாது கூகை; கூகைக்கு ஆகாது காக்கை. நாட்டை ஆளும் அரசன், நாட்டைக் காப்பதற்கு கொக்கு போலக் காத்திருக்க வேண்டும். இல்லையேல் அரசனுக்கு கசப்புக்குரிய காலமாக ஆகிவிடும் ]
-------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:-
--------------
இந்தப் பாடலில்கர வரிசை எழுத்துகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதைக் காண்க !
------------------------------------------------------------------------------------------------------------
விளக்கம்:-
----------------
காக்கையானது பகலில் (கூகையை) ஆந்தையை வெல்ல முடியும். (கூகையானது) ஆந்தையானது இரவில் காக்கையை வெல்ல முடியும். அதுபோல் அரசன் தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்க வேண்டும்.  எதிரியின் வலிமைக் குறைவு அறிந்து, கொக்கு காத்திருப்பது போல, தக்க நேரம் வரும் வரைக் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் அரசனுக்குக் கூட கையாலாகாதது ஆகிவிடக் கூடும் !

------------------------------------------------------------------------------------------------------------சொற்பொருள்:-
-------------------------
காக்கைக்கு ஆகா = காக்கைக்கு ஆகாது; கூகை = கூகை எனப்படும் பேராந்தை (பெரிய ஆந்தை).;கூகைக்கு ஆகா = பேராந்தைக்கு ஆகாது; காக்கை = காகம் எனப்படும்  காக்கை; கோக்கு = அரசனுக்கு; கூ = பூமி; காக்கைக்கு = காப்பதற்கு; கொக்கு ஒக்க = கொக்கு போல உரிய காலம் வரும் வரைக் காத்திருக்க வேண்டும்; (இல்லையேல்); காக்கைக்கு = நாட்டைக் காப்பாற்றுவதற்கு; கைக்கு = அரசனுக்கு; கைக்கைக்கு = கசப்புக்கு உரிய ; ஐக்கு ஆகா= காலமாக ஆகிவிடும்.


------------------------------------------------------------------------------------------------------------

        "தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,11.]
{26-12-2018}
-----------------------------------------------------------------------------------------------------------

கூகை


காக்கை


































10 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவித்திறன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ! முகநூலுக்கென கூகுள் கணக்கு (மின்னஞ்சல்)ஒன்று வைத்திருப்பீர்கள். அஃது அல்லாமல் இன்னொரு கூகுள் கணக்குத் தொடங்கி, உங்கள் நிழற்படத்தையும் அதில் இணைத்திடுங்கள். இந்தக் கணக்கு மூலம் வலைப்பூவில் கருத்துரை எழுதினால் அதில் உங்கள் பெயரும் படமும் பதிவாகும்.

      நீக்கு
  3. எனது குழந்தைக்கு கூகை என்னும் சொல்லை விளக்குகையில் இப்பாடல் ஞாபகம் வந்தது.இதன் மூலம் படித்து மகிந்தேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  5. I enjoyed by hearting this poem. It has a sound and rhythm of music. I would like to byheart many such songs in tamil. I literally stopped learning anything in tamil after school days, I focused on English inorder to get in job and sustain in professional area. Now am good where I am, wanted to enjoy learning Tamil everyday something from literature, kindly suggest me how can I do it and which internet source will help me to find tamil literature songs along with meaning. And this song of Kalamegapuzhavar is my favourite, thanks for your work. Much appreciated.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .