name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம் பாடல் (04) வெங்காயம் சுக்கானால் !

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (04) வெங்காயம் சுக்கானால் !


வெங்காயம், சுக்கு, வெந்தயம் ! காளமேகத்தின் சொற் சிலம்பம் !


கற்றறிந்த பெரும் புலவர்கள் பலரையே மலைப்புக் கொள்ளச் செய்தவர் காளமேகப் புலவர்  !  இவரது  பாடல்  இயற்றும்  திறம்  ஈடு இணையற்றது ! இரட்டுற மொழிதல் (சிலேடை) என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கவி.காளமேகப் புலவர். அவருடைய பாடல்களைப் படிக்குந் தோறும் வியத்தகு முறையில் இரு பொருட்களை இணைக்கும் திறம் கண்டு மனம் மகிழும். அவருடைய பாடல்களில் பல ணையத்தில் வந்துள்ள. இணையத்தில் வராத ஒரு சிலேடைப் பாடல் !
---------------------------------------------------------------------------------------------------------
பாடல்
---------------------------------------------------------------------------------------------------------


வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் வதென்ன ?
இங்கார் சுமந்திருப்பார் ச்சரக்கை - மங்காத 
சீரகத்தைத்  தந்தீரேல்  தேடேன்  
பெருங்காயம்
ஏரகத்துச்  செட்டியா ரே
!

---------------------------------------------------------------------------------------------------------

இதை இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

1.
மளிகைக்கடைக்காரர்;
பெரு வியாபாரியிடம்:


வெங்காயம் சுக்காக காய்ந்து விட்ட பின் வெறும் வெந்தயத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு வியாபாரம் செய்வது. வீணாகாத நல்ல சீரகம் கொடுத்தீர்களானால் பெருங்காயம் இல்லாவிட்டாலும் எப்படியாவது கடையை கொண்டு செலுத்தி விடலாம்.

2.
கடவுளின்; முன் அடியார்:


வெம்மையான இவ்வுடம்பு வற்றிக் காய்ந்து விட்ட பின் இவ்வுலகில் இவ்வுடம்பைச் சுமந்து வாழ்ந்திருப்பதால் என்ன பயன். சீர் பொருந்திய இடமாகிய உன் திருவடிகளை எனக்குக் கொடுத்து விடுவீரேயானால் இவ்வுடம்மைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்

எவ்வளவு அழகாக பொருந்திப் போகிறதென்று பாருங்கள் !
----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

வெங்காயம் = (1) கறிக்கு உதவும் வெங்காயம் (2) (வெம்மை + காயம் )= வெப்பம் நிலவும் இந்த உடம்பு;

சுக்கானால் = (1) வெங்காயம் காய்ந்து சுக்குப் போல ஆகி விட்டால் (2) இந்த உடம்பு சுக்குப் போல காய்ந்து நலிந்து விட்டால் ;

வெந்தயம் = (1) சமையலில் பயன்படும் வெந்தயம் (2) வெம்மை + தேயம் = வெந்தேயம் ; வெந்தயம் ; ஆசைகளைச் சுமந்து கொண்டிருக்கும்  இந்த  உடம்பால்;

ஆவதென்ன = ஆகக்கூடியது என்ன ?

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை = (1) காய்ந்த வெங்காயம், வெந்தயம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு எப்படி வியாபாரம் செய்வது ? (2) நலிந்து போன இந்த உடலை வைத்துக் கொண்டு வாழ முடியுமா ? ;

மங்காத சீரகத்தை = நல்ல தரமான கெட்டுப் போகாத சீரகத்தை (2) இறைவா ! சீர் பொருந்திய உன் திருவடிகளைத் தந்தாயானால்;

பெருங்காயம் தேடேன் = (1) சமையலுக்கு உதவும் பெருங்காயம் வேண்டும் என்று தேடிப் போக மாட்டேன் (2) ( பெருமை + காயம்) பெருமை மிக்க  நல்ல வலிமையான உடலைத் தா என்று தேடிக்கொண்டு உன்னிடம் வரமாட்டேன்;

ஏரகத்துச் செட்டியாரே = (1) என் கடைக்கு மளிகைப் பொருள்களை வழங்கும் செட்டியாரே ! (2) ஏரகம் என்று சொல்லப்படும் சுவாமிமலையில் வீற்றிருக்கும் முருகா ! (முருகனுக்குச் செட்டி என்று இன்னொரு பெயரும் உண்டு !)
----------------------------------------------------------------------------------------------------------
     
   ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 26.]
(10-01-2019)
----------------------------------------------------------------------------------------------------------















5 கருத்துகள்:

  1. கீழேயுள்ள பாடல் ஒரு அருமையான
    நேரிசை வெண்பா

    வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
    இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
    சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
    ஏரகத்துச் செட்டியா ரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீர்கள் சில மாறியிருந்தன. அவற்றைத் திருத்தம் செய்துவிட்டேன் !மிக்க நன்றி !

      நீக்கு
  2. இதை எழுதியவர் சொக்கநாதப் புலவர்தானே

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .