உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
“குற்றுகர” ஈற்றுச் சிறப்பு
விதி
நூற்பா.188. ஒன்று முதல் எட்டு வரை--புணர்ச்சி
எண்,நிறை,அளவும் பிறவும் எய்தின்
ஒன்றுமுதல் எட்டு ஈறாம் எண்ணுள்
முதல் ஈரெண் முதல் நீளும், மூன்று
ஆறு,ஏழ் குறுகும், ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்று உயிர்மெய்யும் ஏழன் உயிரும்
ஏகும், ஏற்புழி
என்மனார் புலவர். (நூற்பா.188)
எண்ணுப் பெயரும், நிறைப் பெயரும், அளவுப் பெயரும் பிற பெயர்களும் வரின் நிலைமொழியாக நின்ற ஒன்று முதல் எட்டு ஈறாகும் எண்களுள் முதலில் உள்ள இரண்டு எண்களும் முதற் குறில் நீளும். மூன்றும் ஆறும் ஏழும் முதல் நெடில் குறுகும். ஆறும் ஏழும் அல்லாத எஞ்சிய ஆறு எண்களினுடைய இறுதியிலுள்ள உயிர்மெய்களும், ஏழனுடைய இறுதியிலுள்ள உயிரும் கெடும். (நூற்பா.188)
ஒன்று :- ஒன்று + அணி = ஓரணி / ஒன்று + தடி = ஒரு தடி
இரண்டு :-இரண்டு + இலை = ஈரிலை /இரண்டு+கவி =இருகவி.
மூன்று :- மூன்று+கடல்=முக்கடல் /மூன்று+உவரி=மூவுவரி
ஆறு:- ஆறு + மரம் = அறுமரம் /அறு +இலை = ஆறிலை
ஏழு :-ஏழு + மதி = எழுமதி /ஏழு=இலை=ஏழிலை (நூற்பா.188)
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .