கொத்து (01) மலர் (034)
-------------------------------------------------------------------
குமுதம் வார இதழுக்கு எழுதி அனுப்பிய
கவிதை !
(ஆண்டு 1971)
----------------------------------------------------------------------------------------------------
காணக் கிடைக்காத
தங்கம்
!
--
கண்டு
கைப்பற்ற நான்மெல்ல சென்றேன் !
நாணித் தலைசாய நின்றாள் ! - இதழ்
நாடி அவள்பக்கம் சென்றேன் !
ஊடல் மிகக்கொண்டு நின்றாள் !
- அன்பை
ஊற்றிப் பருகிடத் தந்தேன் !
பேடை விரைந்தோடிச்
சென்றாள் !
- நான்
பித்துப் பிடித்தங்கு நின்றேன் !
தேனைச் சுவைக்கின்ற
வண்டு !
- பூவின்
தீமைக்கு வழிகோலு மாமோ ?
கானில் பொழிகின்ற பால்போல் ! -
பெண்மை
காய்வதால் யாருக்கு நன்மை ?
தீயில் புடமிட்டால் அன்றி
!
-
பொன்
தேறிடுமோ
குறை வின்றி ?
கோயில் சிலைபோல
வாழ்ந்து ! - வெறும்
கோலப் பொருளாதல் நன்றோ ?
ஆடும் நினைவலை
கோடி ! - உள்ளம்
அறியாது மறைவதேன் ஓடி ?
வாடும்
பயிருக்கு
நீர்போல் ! - அன்பை
வாரி வழங்கிடின் தீதோ ?
பாவை அருள்புரி வாளோ ?
- எனைப்
பற்றித் தழுவிடு வாளோ
?
தேவை உரைத்திட்டே னம்மா ! - இன்பம்
தந்து அருள்செய்கு வாயே !
-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .