கொத்து (01) மலர் (033)
----------------------------------------------------------------------------------------------------
வானில் முழு மதியைக் கண்டேன்
என்னும் திரைப்படப் பாடலைத் தழுவி,
அதே மெட்டில்
எழுதப்பட்ட கவிதை !
(ஆண்டு 1970)
----------------------------------------------------------------------------------------------------
கனவில் வந்த கனிமுகம்
--- அந்தக்
கலைமகள் எனது திருமுகம் !
மனதில் மலர்ந்த மதிமுகம்
-- இன்று
மறைந்த தேனிந்த மறைமுகம்
!
வேனில் நிலவினை விழிகளில் கண்டேன் !
வேய்ங்குழல் இன்னிசை குரலில் கண்டேன் !
மானின் மருளவள் மனதினில் கண்டேன் !
மயக்கம் தந்தெனை மறந்தவள் சென்றாள் !
தேனின் சுவையவள் இதழ்களில் கண்டேன் !
தென்னம் பாளையைச் சிரிப்பினில் கண்டேன் !
வானின் வில்லொளி வடிவினில் கண்டேன் !
வருத்தம் தந்தெனை மறந்தவள் சென்றாள் !
கனிந்த சுளைநிகர் கன்னங்கள் கண்டேன் !
கடல்விளை சங்கம் கழுத்தினில் கண்டேன் !
குனிந்த நடையினில் குருகினைக் கண்டேன் !
கொடுந்துயர் தந்தெனை மறந்தவள் சென்றாள் !
பனித்துளி நீரெனத் தவிப்புடன் நின்றேன் !
பாசம் மிகுந்தெனை அணைத்திட வந்தாள் !
கனிச்சுவை உண்டவள் கரங்களைத் தொட்டேன் !
கண்மணி விலகிட; கனவென நின்றாள் !
-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஆகா!
பதிலளிநீக்குஎன்னவளின் நினைவு வந்தது !
அதுவும் கனவுதான் அன்று!