name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (45) தும்பி ( BOKLINE )

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

புதிய தமிழ்ச் சொல் (45) தும்பி ( BOKLINE )

புதுச்சொல்  புனைவோம் !


தும்பி = BOKLINE

------------------------------------------------------------------------------------------

ஆற்றில் மணல் அள்ளுவதற்கு ஜே.சி.பி எனப்படும் ஒரு ஊர்தியை இக்காலத்தில் பயன்படுத்துகின்றனர். இதை பொக்லின் (BOKLINE) என்றும் கூறுகின்றனர் !



இந்த எந்திர ஊர்தியின் ஒரு பக்கம், மண்னை வறண்டி நெட்டித் தள்ளும் வகையில் அமையப் பெற்ற [வாழைப் பட்டையைப் போன்ற] ஒரு மண்வறண்டி இணைக்கப்பட்டு இருக்கும். இதற்கு நேர் பின் பக்கம் குழிந்த கை போன்ற ஒரு இருப்புக் கூடை (STEEL BUCKET) வலப் பக்கமாகவோ இடப் பக்கமாகவோ 180 பாகை அளவுக்குச் சுழற்றி மண் அள்ளக்கூடிய வகையில் நீண்டு மடங்கும் கணையச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும் !



இந்த ஊர்தியானது வலிமையில் யானையை ஒத்தது. இருப்புக் கூடையை உயர்த்திப் பிடித்தால் யானை தன் தும்பிக்கையை உயர்த்திப் பிளிறி ஓலமிடுவது போன்று தோன்றும் !



வலிமையிலும்தோற்றத்திலும் பயன்பாட்டிலும் யானையை ஒத்து இருப்பதால் ஜே.சி.பி என்னும் இந்த ஊர்தியைத் தும்பியூர்தி என்று அழைக்கலாம். தும்பி என்பது யானையைக் குறிக்கும் ஒரு சொல். இந்த ஊர்தியின் கணையச் சட்டத்துடன் கூடிய இருப்புக் கூடை, தும்பியின் (யானையின்) கை போன்று செயல்படுவதால், தும்பியூர்தி என்பது பொருத்தமான பெயராக அமையும். சுருக்கமாக இதைத் தும்பிஎன்று அழைக்கலாம்.

------------------------------------------------------------------------------------------

BOKLINE (J.C.P) = தும்பி.

------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2050 :ஆடவை,09]

{24-06-2019}

---------------------------------------------------------------------------------------------

 

தும்பி


1 கருத்து:

  1. ஐயா! உங்கள் சொல்லாக்கங்கள் சிறப்பு. மிகச்சிறந்த பணி. தும்பி என்று பெயரிட்டிருப்பது சரியாகவே உள்ளது; இருப்பினும், ஆங்கிலச் சொல் தவறாக உள்ளது; அதாவது, Bokline அல்ல, Poclain; JCP அல்ல, JCB. உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .