கொத்து (001) மலர் (057)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்வாரியத்தில்
பணிபுரியும் பொறியாளர்,
நண்பர் திரு. கிருபானந்தனின் மாமனார் எழுபதாம்
அகவை நிறைவு செய்வதை முன்னிட்டு,
அவரது இல்லத்தினரால்
எடுக்கப் பெற்ற விழாவில்,
திரு.கிருபானந்தனால் வாசித்து அளிக்கப் பெற்ற வாழ்த்துப்பா !
எழுத்து: வை.வேதரெத்தினம்:
வாசிப்பு:
திரு,கிருபானந்தன் !
(2019)
(2019)
-------------------------------------------------------------------------------------------------------------
வணங்குகிறோம் ! வாழ்த்துங்கள் !!
எழுபதாண்டு
நிறைவுபெறும் எம்குலத்தின் திருவிளக்கே !
இராதாமணி மணவாளன் பெயர்விளங்கும் எழில்முகிலே !
பழுமரமாய், ஊருணியாய், பகலவனாய், திகழொளியே !
பால.புஷ்பா கரம்பிடித்த பால்மதியே ! அருள்நிதியே !
வழுவகல வாழ்வாங்கு வாழ்தகையே ! தீங்கனியே !
வல்லாங்கு வாழ்ந்திடுக! வணங்குகிறோம் ! வாழ்த்துவையே !
செழும்புனலே ! இல்வாழ்வின் செங்கரும்பே ! விழுமியமே !
செந்தூர மரைமலரே ! நூறகவை வாழ்குவையே !!
வேளாண்மைக் குடியுதித்த விடிவெள்ளித் திருமுகமே !
விழுதூன்றிச் சாரத்தில் விளைந்திட்ட நென்மணியே !
தாளாண்மை மீதூரும் தரணிபுகழ் தொழில்மகவே
!
தண்பொழிலாய் வழித்தோன்றல் வாழ்வுயரச் செய்தனையே !
கோளரிமா மருமகனார் குலம்தழைக்க வாழ்த்திடுக !
கோபுரமே ! நின்குலத்துக் கொடிகளெலாம் வணங்குகிறோம் !
நாளரும்பு மணம்திகழும் நவநிதியே ! வணங்குகிறோம் !
நலமுயர்ந்து யாம்வாழ நான்முகனே ! வாழ்த்திடுக
!
கற்றறிந்த பள்ளிகட்குக் கார்முகிலாய் நூல்தந்தாய் !
கனிவுடனே கோவிலுக்குக் கால்பதிக்கக் தளம்தந்தாய் !
பொற்கிழியாய் ஏழையர்க்குப் பொருள்தந்தாய் ! கரம்தந்தாய் !
பொன்றாத புகழ்பூத்தாய் ! பூமான்நின் புதல்விகளை
அற்புதமாய்க் கல்வித்தேர்த் தவிசினிலே அமர்த்திட்டாய் !
ஆற்றல்மிகு பொறிஞர்களை அவர்தமக்கும் மணமுடித்தாய் !
பெற்றாயே ! பெயர்விளங்கப் பெயரன்கள், பெயர்த்திகளை !
பெருந்தகையே ! வணங்குகிறோம் ! வாழ்த்துவையே, வளம்பெருக !!
------------------------------------------------------------------------------------------------------------
வாசிப்பு: திரு,கிருபானந்தன் !
------------------------------------------------------------------------------------------------------------
வணங்குகிறோம் ! வாழ்த்துங்கள் !!
எழுபதாண்டு நிறைவுபெறும் எம்குலத்தின் திருவிளக்கே !
இராதாமணி மணவாளன் பெயர்விளங்கும் எழில்முகிலே !
பழுமரமாய், ஊருணியாய், பகலவனாய், திகழொளியே !
பால.புஷ்பா கரம்பிடித்த பால்மதியே ! அருள்நிதியே !
வழுவகல வாழ்வாங்கு வாழ்தகையே ! தீங்கனியே !
வல்லாங்கு வாழ்ந்திடுக! வணங்குகிறோம் ! வாழ்த்துவையே !
செழும்புனலே ! இல்வாழ்வின் செங்கரும்பே ! விழுமியமே !
செந்தூர மரைமலரே ! நூறகவை வாழ்குவையே !!
வேளாண்மைக் குடியுதித்த விடிவெள்ளித் திருமுகமே !
விழுதூன்றிச் சாரத்தில் விளைந்திட்ட நென்மணியே !
தாளாண்மை மீதூரும் தரணிபுகழ் தொழில்மகவே !
தண்பொழிலாய் வழித்தோன்றல் வாழ்வுயரச் செய்தனையே !
கோளரிமா மருமகனார் குலம்தழைக்க வாழ்த்திடுக !
கோபுரமே ! நின்குலத்துக் கொடிகளெலாம் வணங்குகிறோம் !
நாளரும்பு மணம்திகழும் நவநிதியே ! வணங்குகிறோம் !
நலமுயர்ந்து யாம்வாழ நான்முகனே ! வாழ்த்திடுக !