name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, அக்டோபர் 05, 2019

இலக்கிய மலர்கள் (01) குறிஞ்சிப் பாட்டில் மலர்கள் !

குறிஞ்சிப் பாட்டில் மலர்களின் பெயர்களைக் குறிப்பிடும் பாடல் வரிகள் !

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்னாய், வாழிவேண் டன்னை ! ஒண்ணுதல்
ஒலிமென் கூந்தலென் தோழி மேனி
....................................................................................
...................................................................................
ஒண் செங் காந்தள்1, ஆம்பல்2, அனிச்சம்3,
தண்கயக் குவளை4, குறிஞ்சி5, வெட்சி6,
செங் கொடுவேரி7, தேமா8, மணிச்சிகை9,
உரிது நாறவிழ் தொத்து உந்தூழ்10, கூவிளம்11,
எரிபுரை எறுழம்12, சுள்ளி13, கூவிரம்14,
வடவனம்15, வாகை16, வான்பூங் குடசம்17,
எருவை18, செருவிளை19, மணிப்பூங் கருவிளை20,
பயினி21, வானி22, பல்லிணர்க் குரவம்23,
பசும்பிடி24, வகுளம்25, பல்லிணர்க் காயா26,
விரிமலர் ஆவிரை27, வேரல்28, சூரல்29,
குரீஇப் பூளை30, குறுநறுங் கண்ணி31,
குருகிலை32, மருதம்33, விரிபூங் கோங்கம்34,
போங்கம்35, திலகம்36, தேங்கமழ் பாதிரி37,
செருந்தி38, அதிரல்39, பெருந்தண் சண்பகம்40,
கரந்தை41, குளவி42, கடிகமழ் கலிமா43,
தில்லை44, பாலை45, கல்லிவர் முல்லை46,
குல்லை47, பிடவம்48, சிறு மாரோடம்49,
வாழை50, வள்ளி51, நீணறு நெய்தல்52,
தாழை53, தளவம்54, முள்தாள் தாமரை55,
ஞாழல்56, மௌவல்57, நறுந்தண் கொகுடி58,
சேடல்59, செம்மல்60, சிறு செங்குரலி61,
கோடல்62, கைதை63, கொங்குமுதிர் நறுவழை64,
காஞ்சி65, மணிக்குலை66, கள்கமழ் நெய்தல்67,
பாங்கர்68, மராஅம்69, பல்பூந் தணக்கம்70,
ஈங்கை71, இலவம்72, தூங்கிணர் கொன்றை73,
அடும்பு74,அமர் ஆத்தி75, நெடுங்கொடி அவரை76,
பகன்றை77, பலாசம்78, பல்பூம் பிண்டி79,
வஞ்சி80, பித்திகம்81,  சிந்து வாரம்82,
தும்பை83, துழாய்84, சுடர்பூந் தோன்றி85,
நந்தி86, நறவம்87, நறும்புன் நாகம்88,
பாரம்89, பீரம்90, பைங் குருக்கத்தி91,
ஆரம்92, காழ்வை93, கடியிரும் புன்னை94,
நரந்தம்95, நாகம்96, நள்ளிருள் நாறி97,
மாயிருங் குருந்தும்98, வேங்கையும்99, பிறவும்
......................................................................................
......................................................................................
வழுவின் வழாஅ விழுமம், அவர்
குழுமலை விடரகம் உடையவா லெனவே.

--------------------------------------------------------------------------------------------------------------

குறிஞ்சிபாட்டு 261 அடிகள் கொண்ட பாடல் இலக்கியம். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு கபிலர் பாடியது. பத்துப் பாட்டு இலக்கிய நூல்களுள் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று.

குறிஞ்சிப் பாட்டின் கதைக் கரு.

ஒரு தலைவியும் அவள் தோழியும் சுனையில் நீராடுகின்றனர். அப்பொழுது பூக்களையெல்லாம் பறித்து பாறையில் குவித்து வைக்கின்றனர். அங்கு தலைவன் வந்து தலைவியிடம் அவள் நலம் பற்றிக்  கேட்கிறான்

அந்த நேரத்தில் யானை ஒன்று சினத்துடன் அவர்களை நோக்கி ஓடி வருகிறது. தலைவன் அம்பு எய்து யானையை விரட்டுகிறான். பகற் பொழுதெல்லாம் இருவரும் உரையாடி மகிழ்கின்றனர்.  மாலைப் பொழுது கவிகிறது

தலைவன் விடை பெற்றுத் தன் இல்லம் நோக்கிச் செல்கிறான். கொடிய விலங்குகள் நிறைந்த கானகம் வழியே  செல்கிறானே என்று தலைவி அவனை எண்ணிக் கலங்குகிறாள்.

சுனையில் நீராடி மகிழ்ந்தவாறே அருகிலுள்ள பூக்களையெல்லம் பறித்துப் பாறை மீது குவித்து வைக்கும் நிகழ்வில் எந்தெந்தப் பூக்களைப் பறித்துக் குவிக்கிறார்கள் என்று விவரிக்கின்ற பகுதியே மேற்கண்ட பாடல்.

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 20.]
{03-02-2019}
------------------------------------------------------------------------------------------------------------
               ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------