name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ்
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 12, 2019

தமிழ் (19) தமிழில் பேசுவோம் ! தமிழையே எழுதுவோம் !

ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ, ஆகிய கிரந்த எழுத்துகளை விலக்குவோம் !


தமிழில் உள்ள எழுத்துகள் மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. அவை உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து ஆகியவை !

”, முதல்வரையிலான  12 எழுத்துகளும் உயிரெழுத்துகள் எனப்படும். “க், ங், ச், ஞ், ட், எனத் தொடங்கி, ”ன்“ –ல் முடியும் 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் !

, கா,.......கௌஎனத் தொடங்கி .”,னா......னௌஎன முடியும் 12 X 18 = 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்!

என்பது ஆய்த எழுத்து; (ஆயுதம் அன்று ! ஆய்தம் என்பதே சரி !)

சரி ! தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்துணை ? 12 + 18 + 216 + 1 = 247. தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயமுண்டா ? இல்லை அல்லவா ?

இப்பொழுது NATARAJAN என்பதைத் தமிழில் எழுதுங்கள் ! எழுதிவிட்டீர்களா ? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் !

என்ன இது ? ”நடராஜன்என்று எழுதி இருக்கிறீர்கள் ? நீங்கள்தானே ஒப்புக் கொண்டீர்கள், தமிழ் எழுத்துகள் 247 என்று ? இந்த 247 –ல்என்னும் எழுத்து இருக்கிறதா ? இல்லை அல்லவா ? அப்புறம் எங்கிருந்து இந்தவந்தது ?

தமிழில் சில ஒலிகளுக்கு எழுத்துகள் இல்லை என்று சொல்லி, சில தமிழ்ப் பகைவர்கள்  ”, ””, “”, ”க்ஷ”, ”ஆகிய ஐந்து கிரந்த எழுத்துகளைத் தமிழ் நாட்டில் புகுத்தி விட்டனர்.  மஞ்சள்என்று உரக்கச் சொல்லுங்கள் ! இதில் வரும்என்னும் எழுத்துஎன்றுதானே ஒலிக்கிறது ? அப்புறம் எதற்குத் தனியாக ஒரு”. “மகம்என்று உரக்கச் சொல்லிப் பாருங்கள் ! இதில் வரும்என்பதுஎன்று தானே ஒலிக்கிறது ! அப்புறம் எதற்கு இந்த” ?

சமற்கிருதம், இந்தி ஆகியவற்றில்”, “ஆகிய இரண்டு ஒலிகளுக்கும் எழுத்துகள் இல்லை. ”எறும்புஎன்று வடமொழியில் எழுத முடியாது.” “ஏறும்புஎன்று தான் எழுத முடியும். “தொல்காப்பியம்என்று இந்தியில் எழுத முடியாது; “தோல்காப்பியம்என்று தான் எழுத முடியும் !

வங்காள மொழியில்என்னும் ஒலிக்கு எழுத்து இல்லை. “வைத்தியநாதன்என்று வங்காள மொழியில் எழுத முடியாது. “பைத்தியநாதன்என்றுதான் எழுத முடியும். அங்குஎன்னும் ஒலி இல்லாமையைஎன்னும் ஒலி தான் இட்டு நிரப்புகிறது !

ஆங்கிலத்தில்அன்பழகன்என்று எழுத முடியாது. ANBAZHAGAN என்று எழுதுகிறோம். “ZHA" மூன்று எழுத்துகளும்என்னும் ஒலியைக் கொண்டுவர முடியாது. ZINC, ZEBRA, ZONE, ZOO ஆகிய எந்த ஆங்கிலச் சொல்லிலும்எழுத்தின் ஒலி வருகிறதா ? இல்லையே ! ஆங்கிலத்தில்ஒலி இல்லை என்பது உண்மை அன்றோ !

உலகத்தில் எந்த மொழியை எழுத்துக் கொண்டாலும், அந்த மொழிகளில் அனைத்து ஒலிகளையும் ஒலிப்பதற்கான எழுத்துகள் இருக்கின்றன என்று யாராலும் கூற முடியாது. குறிப்பிட்ட ஒலியைப் பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) ஏதாவதொரு எழுத்து இடத்திற்குத் தக்கவாறு அங்கு அமைகிறது !

இந்த உண்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், தமிழில் கிரந்த எழுத்துகளான”, “”, “”, “க்ஷ”, “ஆகியவற்றைப் புகுத்தியவர்களின் தமிழ்ப் பற்றை என்னவென்பது ?   அவற்றை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் நாமும்தமிழ்ப் பகைவர்என்னும் பழிக்கல்லவா ஆளாகிறோம் !.

இனிமேல், நாம்நடராசன்”, என்றே எழுதுவோம் ! “நடராஜன்வேண்டாம். “சுரேச்குமார்என்று எழுதுவோம்; “சுரேஷ்குமார்வேண்டாம். “”இராமதாசுஎன்று எழுதுவோம்; “இராமதாஸ்வேண்டாம் !

என்ன நண்பர்களே ! கிரந்த எழுத்துகளை விலக்கிவிட்டுத் தமிழ் எழுத்துகளையே இனிப்  பயன்படுத்தலாமா ?  நீங்கள் அணியம் (READY) என்றால் நானும் அணியமே ! “அணியம்என்று பின்னீடு செய்து நமது தமிழ்ப் பற்றை உலகறியச் செய்வோமே ! இதற்கும் ஒருவிழைவு” (LIKE) தராமல்அணியம்என்று கருத்துரை (COMMENT) எழுதுங்கள் பார்க்கலாம் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மடங்கல் (ஆவணி),09]
{26-08-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, அக்டோபர் 11, 2019

தமிழ் (18) புதுச் சொல் உருவாக்கும் முறை !

பின்பற்ற வேண்டிய 5 (ஐந்து) விதிகள் !


(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதியதமிழில் எழுதுவோம்என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
----------------------------------------------------------------------------------------------------------

ஆட்சித் துறைக்குத் தேவையான சொற்கள், நாட்டிலும், ஏட்டிலும், கல்வெட்டுகளிலும் பலவாகக் கிடைக்குமாயினும், அவற்றை ஒருபுறம் திரட்டிக் கொண்டே, புதுச் சொற்களையும் ஆக்கி வரவேண்டும்.  பண்டைக் காலங்களில் போல் அல்லாமல், அரசாட்சி, இந்நாளில், பரந்தும் விரிந்தும் வளர்ந்து விட்டிருப்பதால், பேச்சிலும் நூலிலும் கல்வெட்டுகளிலும் காணாத பலவகைப் புதுச் சொற்களைச் செய்தமைக்க வேண்டிய கடமை இன்றியமையாதது ஆகின்றது !

புதுச் சொற்களை ஆக்குவதற்குச் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும்.  மனம் போனபடிச் சொற்களைச் செய்துவிட்டால், மொழியின் நலம் குன்றும்; ஆட்சிச் செய்திகளைத் திட்டவட்டமாக வரைய இயலாது போகும்; ஆட்சிப் பணி தவக்கமுறும் !

கைக்கொள்ள வேண்டிய சொல்லாக்க விதிகள் ஐந்து. அவை பின் வருவன: (01) செய்யப்பெறும் சொல், தமிழ்ச் சொல்லாக இருக்க வேண்டும். (02) பொருள் பொருத்தம் உடையதாக அமைய வேண்டும்.  (03) வடிவில் சிறியதாக இருக்க வேண்டும்  (04) ஓசை நயம் உள்ளதாக விளங்க வேண்டும். (05) தமிழ் இலக்கண மரபுக்கு மாறானதாக இருத்தல் ஆகாது !

தமிழில் ஆட்சி நடத்துவதற்கு, ஆக்கப் பெறும் சொல், தமிழ்ச் சொல்லாக இருக்க வேண்டும் என்று கூறுவது மிகை போலத் தோன்றும்.  ஆனால், சிலருடைய போக்கைக் காணும் போது, இவ்வாறு முறை வகுப்பது எவ்வளவு தேவையானது என்பது புரியும் !

பிறமொழிச் சொல் ஒன்றைத் தமிழாக்கிக் கொள்ள வேண்டுமானால், அச்சொல்லின் ஓசையை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதிவிட்டால், அது தமிழ்ச் சொல்லாகிவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர். “MAGISTRATE”க்குத் தமிழ்ச்சொல் மாஜிஸ்திரேட்என்று அவர்கள் கூசாமல் கூறுவர்.  இங்ஙனம்  சொல் செய்வதால், தமிழில் குருட்டுச் சொற்கள் பெருகிவிடுமே என்றோ, பிறமொழி எழுத்துகளைக் கடன் வாங்க வேண்டி இருக்குமே என்றோ அவர்கள் கவலைப் படுவதில்லை !

அவர்களது கருத்துக்கு ஆதாரமாக அவர்கள் சொல்வது, “நமக்கு அச்சொல் புரிய வேண்டியது தானேஎன்பதாகும். அவர்கள் சொல்வது இன்றைக்கு ஓரளவு உண்மையாக இருக்கலாம்.  ஆங்கிலம் தெரியாத ஒரு தமிழர் கூடமாஜிஸ்திரேட்என்னும் சொல் எந்த அலுவரைக் குறிக்கின்றது என்று தெரிந்து கொள்ளக் கூடும்.  எனினும் ஒரு குருட்டுச் சொல்லாக  அஃது அவருக்கு இருக்குமே தவிர, பொருளுடையதாக என்றும் ஆகாது. இச்சொல்லை ஆங்கிலம் தெரிந்தவர்கள் சொல்ல, அவர் காதால் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டிருப்பார். இதை அவர் கற்றுக் கொள்வதற்கும், உச்சரிப்பதற்கும் பலநாள் ஆகியிருக்கும் !

ஆனபோதிலும், ஒரு பிறமொழிச் சொல்லை, இவ்வாறு அவர் நினைவில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான அவ்வளவு நாள்களா பிடிக்கும், ஒரு புதுத் தமிழ்ச் சொல்லை அவர் மனதில் நிறுத்திக் கொள்ள ?  “SECRETARY” என்னும் ஓர் ஆங்கிலச் சொல்லை, சிலகாலம் முயன்று அவர் கற்றுக் கொண்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நேரான தமிழ்ச் சொல்லானசெயலாளர்என்னும் சொல்லை, வேர் அறிந்து, அவர் பொருள் பண்ணிக் கொள்வது போல, SECRETARY  என்னும் சொல்லை, ஆங்கிலம் படிக்காமல், என்றாவது அவர் புரிந்து கொள்ள முடியுமா ?

ஒரு புதுச் சொல்லை அரியணையில் அமர்த்திவிட்டால், அதைத் தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் எளிதில் பழக்கப் படுத்திக் கொள்ளக் கூடும். ஆங்கிலம் தெரிந்தவர்கள், அதற்கு ஈடான  ஆங்கிலச் சொல்லை அவர்கள் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பதாலும், அஃது அவர்களுக்கு எளிதானதாகத் தோன்றுவதாலும், தமிழ்ச்சொல்லை வரவேற்பதில் அவர்கள் முதலில் தயங்குவது இயல்பே.  துவக்கத்தில் அப் பிறமொழிச் சொல்லுடன் தமிழ்ச் சொல்லையும் பயன்படுத்திக் கொண்டு வருவாரானால், நாளாவட்டத்தில், தமிழ்ச் சொல் தனித்து நின்று பெரு வழக்கினதாக நிலைத்து விடும் !

இன்று இருப்பவர்களுக்கு ஆங்கிலச் சொல் எளிதில் புரியலாம். புதிதாக ஆக்கப்பெறும் தமிழ்ச் சொல் ஒருவேளைப் புரியாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் பிறக்கப் போகின்ற தமிழர்களுக்குக் கூட, ஆங்கிலச் சொல் புரிந்ததாகவும், தமிழ்ச் சொல் புதிதாகவும் புரியாததாகவும் இருக்குமா ?  நாம் செய்யும் சொற்கள் இன்றைக்கு மட்டும் பயன்பட்டு மறைந்துவிட வேண்டியனவா ?  இனி வரும் பல நூற்றாண்டுகளிலும், ஏன்பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளிலும், தமிழகத்தில் பயன்பட வேண்டிய  சொற்கள் அல்லவா அவை ?  நம் கால்வழியினர் (சந்ததியினர்) நம்மைப் பழிக்காமல் இருப்பதற்காகவாவது, நல்ல தமிழ்ச் சொற்களை நாம் ஆக்கி அமைத்து விட்டுப்போக வேண்டாவா ?

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
(தி.:2050, மடங்கல் (ஆவணி),02]
{19-08-2019}

-------------------------------------------------------------------------------------------------------------
      
 “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் (17) தமிழும் பிறமொழிக் கலப்பும் !

பிறமொழிக் கலப்பினால் தமிழுக்கு  ஏற்பட்ட ஊறு !


(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதியதமிழில் எழுதுவோம்என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
---------------------------------------------------------------------------------------------------------

மொழியின் வேலையே, ஒருவர் கருத்தை  இன்னொருவர் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுவது தானே ?  இங்ஙனம் இருக்க, தமிழ்ச் சொற்களையே தேடிப் போட்டுப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பது எதற்கு என்பர் சிலர்.
 !

தமிழ்மொழி மட்டும் அன்று, வேறு எந்த மொழியானாலும், இன்றைக்கு மக்களால் புரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல், நெடுங் காலத்திற்குப் பின்பும், அக்காலத்து மக்கள் இந்நாளைய மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அம்மொழி எக்காலத்திலும் தம் இயல்பு மாறமல் வழங்கப் பெற்று வரவேண்டும் !

இப்படிச் சொல்வதால், அம்மொழி, காலத்துக்கு ஏற்றபடிப் புதுச் சொற்களை ஏற்று வளர்ச்சி பெறாமல், என்றும் ஒருபடித்தாக இருந்துவிட வேண்டும் என்று கூறுவதாக நினைக்கக் கூடாது. வளர்ச்சி இன்றியமையாதது தான். புதுக் கருத்துகள் தோன்றத் தோன்றப் புதுச் சொற்களும் தோன்ற வேண்டியவையே !

ஆனால், அச்சொற்கள், அம்மொழியில் வேர் அமைத்துக் கொண்டு முளைக்க வேண்டும். வேரற்ற குருட்டுச் சொற்களாக, பிறமொழிச் சொற்களாகச் சேர்த்து வைத்துவிட்டால், அம்மொழி உண்மை வளர்ச்சி பெற்றதாகாது. விரைவில் சிதைந்து, பல மொழிகளாகப் பிரிந்து போக நேரும் !

தமிழில் பிறமொழிச் சொற்கள் பல நூற்றாண்டுகளாக, வரம்பின்றிப் புகுத்தப் பெற்றதன் விளைவே, அம்மொழி, தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம் என்றெல்லாம் பிரிந்து போக நேர்ந்ததாகும்.  பிறமொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் வளர்ந்திருந்தால், பிரிந்த இம்மொழிகளும் பிரியாமலிருந்து, இன்றிலும் பெரியதும் புகழார்ந்ததுமான  தமிழ் மொழியாக விளங்கி, தமிழினம் ஒரு மாபெரும் இனமாக நம் நாட்டில் தலைசிறந்து மிளிருமன்றோ ?

தமிழை உள்ளிட்ட இம்மொழிகளில், இன்னமும் அடிப்படைச் சொற்கள் ஒரே வேர் உடையனவாக இருக்கின்றன.  நாம், முதலில், ஒரே மொழியினராக இருந்தோம் என்பதற்கு அவை சான்று பகர்ந்து கொண்டு இருப்பினும், பிற மொழிக் கலப்பினால் பிரிவு தோன்றியதனால், மனமும் பிரிந்தவர்களாய், நாம் வேறு வேறு இனத்தவர் என்று எண்ணிக் கொண்டு, ஒரு நேரம் போராடவும் செய்தோம் அல்லோமா ?

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல் (ஆவணி)03]
{20-08-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
    
   “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் (16) ஆங்கிலத்தின் படிமுறை வளர்ச்சி !

அயல்மொழிச் சொற்களை அளவின்றி ஏற்றால் என்னவாகும் ? 


(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதியதமிழில் எழுதுவோம்என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
----------------------------------------------------------------------------------------------------------

அயல்மொழிச் சொற்களை அளவின்றி ஏற்றுக் கொண்டமையினாலே, ஆங்கிலம் வளர்ந்துவிட்டது, என்னும் ஒரு வாதம் செய்யப்படுகிறது. இது தப்பு வாதம்.  அதைப் போல், தமிழும் வேற்றுச் சொற்களால் வளர்ந்துவிடும் என்று ஒரு பொய் வாதம் செய்யலாம். அஃது என்ன வளர்ச்சி ?

மிகப் பழைய தமிழகத்தின் வேறு வேறு பகுதிகளான, வடுகம், கன்னடம், துளுவம், மலையாளம் இவற்றில் வழங்கிய தமிழ்மொழி, பேச்சு வழக்கில் சிறிது சிறிது வேறுபட்டிருந்தது.  அயற்சொற்களின் அளவு மீறிய திணிப்பால், அப் பேச்சு வழக்குத் தமிழ் மொழி வடிவங்கள் உருத் தெரியாமல் மாறி, வடுகு (தெலுங்கு), கன்னடம், துளுவம், மலையாளம் என, வேறு வேறு மொழிகள் ஆகிவிட்டன. இது சிதைவா ? வளர்ச்சியா ?

நான்கு குவளைகளில் உள்ள நல்ல பாலில், ஒன்றில் குளம்பிச் சாறும், இன்னொன்றில் தேநீர்ச்சாறும், வேறொன்றில் சுக்கு மல்லிச் சாறும், மற்றொன்றில் மூலிகைச் சாறும் துளித் துளியாகப் போட்டுக் கொண்டே வருவோமானால், ஒரு நிலைக்குப் பிறகு, அவை ஒவ்வொன்றும் பால் என்னும் பண்பு மாறி, குளம்பியாகவும், தேநீராகவும், சுக்கு மல்லி நீராளமாகவும், மூலிகை நீராளமாகாவும் ஆகிவிடுவது திண்ணந்தானே ?

பிறகு அவற்றிற்குப் பாலின் இலக்கணம் பொருந்துமா ? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் இலக்கணம் வகுக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டு விடுவது இயல்புதானே ?

இங்ஙனமேசாக்சன்மொழி, பிறமொழி ஏற்பால் முதலில் பெரிதானது உண்மையே ! ஆனால் அப்படி ஏற்றதனால்  சாக்சன்என்னும் பண்பு மாறி, ‘ஆங்கிலோ சாக்சன்  என்னும் வேறு ஒரு மொழியாயிற்று ! அங்ஙனம் ஏற்றுத் தான் அம்மொழி பெரியது ஆக வேண்டி இருந்தது. ஏறத்தாழ 1500  ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில்பியோஉல்ப்என்னும் ஓர் இலக்கியம் உண்டாவதற்கு வகை செய்தது இக் கலப்பேஅந்த ஆங்கிலபழைய ஆங்கிலம்என்று சொல்லப் பெற்றது !

கடன் வாங்காமல் இருந்தால், இலக்கியம் செய்யும் அளவுக்கு, அம் மொழியில் சொற்கள் இல்லாமல் இருந்த காலம் அது !  ஏற்றுக் கொண்ட சொற்கள் போதாமையால், மேலும் மேலும் ஏற்றுக் கொண்டே செல்ல வேண்டி இருந்தது.  மூல மொழியின் வேர்களைக் கொண்டே, புதுச் சொற்களை ஆக்கிக் கொண்டு வளர்ச்சி உறுவதற்கு ஏற்ற அளவு அம் மூலமொழி வளம் உள்ளதாக இருக்கவில்லை. அம் மூலமொழியைப் பேசியவர்களும் இவ்வகைக்கு அப்போது ஊக்கமற்று இருந்தனர் !

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் சில இலக்கியங்கள் செய்யப் பெற்றன.  அவைஇடைக்கால ஆங்கிலம்  எனச் சொல்லப் பெறும். ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்பிற்கால ஆங்கிலம்உருவாயிற்று. அதில் எழுதிய சிறந்தவர் சாசர்.  எனவே அதனைச்சாசர் ஆங்கிலம்என்பர்.  இப்போது நாம் படிப்பது வேறு ஆங்கிலம். ’இன்றையஆங்கிலத்தில் வல்லவராக இருக்கும் ஒருவர்சாசர்ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியாது.  அதைப் படித்த ஒருவர்இடைக்காலஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள இயலாது. ’இடைக்காலஆங்கிலம் தெரிந்தவர் பழையஆங்கிலத்தை அறிந்துகொள்ள மாட்டார் !

இவ்வாறாக, ஆங்கிலம் பிறமொழிக் கலப்பால் வளர்ந்தது என்று சொல்கிறோமே அல்லாமல், உண்மையில் அஃது உருமாறி நான்கு மொழிகளாக ஆகிவிட்டது. ஆனால் அவற்றை, வேறு வேறு மொழிகள் என்று சொல்லாமல்ஆங்கிலம்என்னும் பெயராலேயே குறிக்கிறோம் !

இப்படியே, தமிழும் பிறமொழி ஏற்பால், பெரிதும் வளர்ந்துவிட்டது என்பது உண்மையாகுமா ?   தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் யாவும் தமிழ் மொழியே என்றால் எவரேனும் ஒப்புக் கொள்வாரா ?  நான்கு புது மொழிகளைப் பெற்றெடுத்து வளர்த்துவிட்டது, என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம் !

ஆங்கிலம் பிறமொழிக் கலப்பால் பெரிய மொழியாகி, உலகம் முழுவதும் வழங்கும் உயர்நிலை பெற்றது என்பர்.  ஆங்கிலம் சிறந்தது எதனால் என்று, கூர்ந்து அறியாதவர்களின் கூற்றே இது.  ஆங்கிலேயன் வல்லாளன். எனவே, அம் மொழி உலக மொழி ஆயிற்று ! 

தமிழன் அங்ஙனம் வல்லவனாக இருந்தால், தமிழுக்கு இயல்பாகவே இருக்கும் பெருஞ் சிறப்புக்கு, இம் மொழி எத்தனையோ பெருமை பெற்று விட்டிருக்குமே !  உலகத்திலேயே மிகப் பழமையானதும், எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் புதுச் சொற்களை ஆக்கிக் கொள்வதற்கு ஏற்ற மூலவளங்கள் பொருந்தியதுமான, மொழியைத் தனக்கு உரியதாக வைத்துக் கொண்டு, தமிழன், பிறமொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்குவதும், அதனால் தமிழை வளர்ப்பதாகச் சொல்வதும், கேலிக் கூத்தாக இருக்கின்றது !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல் (ஆவணி)04]
{21-08-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
    
-----------------------------------------------------------------------------------------------------------
  ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !!
-----------------------------------------------------------------------------------------------------------



ஞாயிறு, செப்டம்பர் 08, 2019

தமிழ் (15) தமிழ் எண்களை அரபுஎண்கள் என்பதா?

எண்களையும் விட்டுக் கொடுத்து ஏமாளி ஆகலாமா?


பள்ளிப்பருவத்தில் நமது ஆசிரியர்கள் இரண்டு வகை எண்களை நமக்குச் சொல்லித் தந்தது நினைவிருக்கலாம்.. அவற்றுள் ஒன்று அரபு எண்கள் எனச் சொல்லப்பட்டன. அவை 1, 2, 3, 4, 5, 6 எனத் தொடர்ந்து வருபவை. இரண்டாவது உரோமன் எண்கள் எனப்பட்டன. அவை I, II, III, IV, V, VI எனத் தொடர்ந்து வருபவை !

உலகத்திலேயே தொன்மையான மொழி எனச் சான்றுகளுடன் நிறுவப்பட்டிருப்பது தமிழ். தமிழ் நூல்களுள் தொல்காப்பியம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது !

எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்பஎன்னும் தொகாப்பிய நூற்பாவினால் தொல்காப்பியர் காலத்திலேயேஎண்கள்பயன்பாட்டில் இருந்தன என்பது புலப்படுகிறது !

இவ்வாறிருக்கையில், அரபு எண்கள், உரோமன் எண்கள் மட்டுமே நமக்குச் சொல்லித் தரப்பட்டு தமிழ் எண்கள் நமக்குச் சொல்லித் தரப்படாமைக்குக் காரணம் என்ன ? தமிழில்எண்கள்இல்லாமலா இருந்தன ?


தமிழில் எண்களைக் குறிக்க, , , , ரு ...” போன்ற எழுத்துகள் பயன்பாட்டில் இருந்தன என்பதை நாம் அறிவோம். அவை உங்கள் பார்வைக்காக மீளத் தரப்படுகின்றன !



இவற்றைஎழுத்துகள்எனக் குறிப்பிடுவதை விடகுறியீடுகள்என்று சொல்வதே பொருந்தும். ஏனெனில், , , ரு, , அ என்பவை மட்டுமேஎழுத்துவடிவில் இருப்பவை. 3, 4, 6, 9 ஆகியவற்றைக் குறிப்பவை எழுத்துகள்அல்ல. அவை வெறும் குறியீடுகளே !

முதல்0” அல்லதுவரை எண்களைக் குறிக்கும் குறியீடுகள் மட்டுமேதமிழ் எண்கள்எனவும் “1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 …… ஆகியவை அரபு எண்கள் எனவும் ஒரு கருத்து பரவலாக மக்கள் மனதில் பதிவாகி இருக்கிறது. இது உண்மை தானா என்பதைச் சற்று ஆய்வு செய்வோம் !

இக்காலத்தில் தமிழில் வழக்கில் உள்ள அ, , , ஈ போன்ற எழுத்துகளின் வரி வடிவங்கள் பண்டைக் காலத்தில் இல்லை. அப்போது இருந்த வரி வடிவங்கள் மெல்ல மெல்ல உரு மாற்றம் அடைந்து இப்போதுள்ள  எழுத்துகளாக படிமுறை வளர்ச்சி (பரிணாம வளர்ச்சி) பெற்றுள்ளன ! (இது பற்றிய செய்தி தனிப்பதிவில் தரப்பட்டுள்ளது.)

எழுத்துகளின் வரி வடிவம்  போலவே, பண்டைக் காலத்தமிழ் எண்களின் குறியீடுகளில் ( , உ முதலியவைசிற்சில மாற்றங்கள் (படிமுறை வளர்ச்சி) ஏற்பட்டு 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என இப்போதைய நிலையை அடைந்துள்ளன !


மேலே உள்ள பட்டியலைப் பாருங்கள். “ என்னும் குறியீட்டுக்குள் “ 1 ” இருப்பதைக் காணலாம். “ என்னும் குறியீட்டுக்குள் “ 2 ” இருப்பதைக் காணலாம். “ ருஎன்னும் குறியீட்டுக்குள் “ 5 “ இருப்பதைக் காணலாம்.

அடியில் தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் ! பண்டைக் காலத்தில் எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தகுறியீட்டுக்குள்இப்போது பயன்பாட்டில் உள்ள “1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 போன்ற எண்கள் உள்ளொடுங்கி நிற்பதைக் காணலாம் !

இதிலிருந்து உங்களுக்கு ஒரு செய்தி தெளிவாகி இருக்கும். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, என்பவை தமிழ் எண்களே ! அவை அரபு எண்களல்ல ! இந்தியா முழுவதும்ஏன் பெரும்பாலான உலக நாடுகளில் 1, 2, 3, 4, 5 6, 7, 8, 9, என்னும் தமிழ் எண்களே பயன்பாட்டில் உள்ளன என்பது நமக்குப் பெருமையே !

கிரேக்க  நாகரிகத்தைப் போல பழம் பெரும் நாகரிகத்திற்குச் சொந்தக் காரர்களான தமிழர்களின் கொடைஉலக நாடுகளுக்கு அளித்த கொடை - தான்  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, என்னும் தமிழ் எண்கள் என்பதை உலகெங்கும் பறைசாற்றி ஓங்கி ஒலித்திடுவோம் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மேழம்,30]
{13-05-2019}

----------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற்  குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், செப்டம்பர் 05, 2019

தமிழ் (14) புதுச் சொற்களைப் புழக்கத்தில் விடுதல் !

புதிய சொற்களைப் படைப்போம்;  புழக்கத்திலும் விடுவோம் ! 


[அரசு, கதிர் இருவரும் தெரு முனையில் சந்தித்து உரையாடுகிறார்கள் !]


அரசு :கதிர் ! கடைத் தெருவுக்கு நீ  செல்லும் போது  எனக்குச்  சில பொருள்களை வாங்கி வந்து தருவாயா ? எனது பேடுருளியை (MOPED) வேண்டுமானால் எடுத்து செல் !

கதிர் :சரி அரசு ! எனக்கும் சிலபொருள்கள் வாங்க வேண்டும். உருளியில் (CYCLE) சென்று வரலாம் என்று எண்ணினேன். நீயோ பேடுருளி (MOPED) தருகிறேன் என்கிறாய். நல்லது ! என்ன வாங்கிவர வேண்டும் ?

அரசு :சிந்தால் வழலை (CINTHOL SOAP) இரண்டு, காதி சவர்க்காரம் (WASHING SOAP) ஒரு சட்டம் (BAR), குறுங்குழல் விளக்கு (CFL – Compact Fluorescent Lamp  ) 15 வாட்சு ஒன்று ஆகியவை வேண்டும் !

கதிர் :சரி அரசு வாங்கி வருகிறேன். பேடுருளியுடன் (MOPED) தலைச் சீராவையும் (HELMET) கொடு. கன்னெய் (PETROL) போதுமான அளவு  இருக்கிறதா ?

அரசு :நேற்று தான் உருபா 100 –க்கு கன்னெய் (PETROL) நிரப்பினேன். கவலையில்லாமல் நீ போகலாம். சரி உனது உடைப் பெட்டி (SUIT CASE) இரண்டு நாள்களுக்குத் தேவைப்படுகிறது. தரமுடியுமா ?

கதிர் :நிச்சயம் தருகிறேன். உடைப் பெட்டி (SUIT CASE) வேண்டுமா ? அல்லது கைப் பேழை (BRIEF CASE) போதுமா ?

அரசு :சென்னக்குச் செல்கிறேன். ஆடைகள் சில எடுத்துச் செல்ல வேண்டும். ஆகையால் உடைப் பெட்டி (SUIT CASE) தான் தே\வை !

கதிர் :அப்படியா ? சென்னை செல்கிறாயா ? இருப்பூர்தியிலா (TRAIN) ? பேருந்திலா (BUS)?

அரசு :இருப்பூர்தியில் தான் செல்கிறேன். முந்துறு முன்பதிவு (TATKAL RESERVATION) செய்திருக்கிறேன். எஸ்.2. பெட்டியில் 17-ஆம் பாயல் (BERTH) கிடைத்திருக்கிறது !

கதிர் :உனது பயணம் இனிதாகட்டும் ! வாழ்த்துகள் ! ஆமாம் ! தமிழில் அறிமுகப்படுத்தப்படும் புதுச்சொற்களை (அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொல்லுடன்) அவ்வப்போது நாமும் புழக்கத்தில் விடுவோம் என்று உனது கல்லூரி நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாயே, உனது திட்ட முன்னேற்றம்  எந்த அளவில் இருக்கிறது ?

அரசு :தொடங்கி இருக்கிறோம் ! விரைவில் அனைத்து நண்பர்களும் உதவிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கிறேன். முன்னேற்றம் காண்பிப்போம் !

கதிர் : சரி அரசு ! வீட்டிற்குச் சென்று உடைப் பெட்டியை (SUIT CASE)க் கொண்டு வருகிறேன் !
அரசு : சரி ! சென்று வா  கதிர் !!

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2049,சிலை,27.]
{11-01-2019}

----------------------------------------------------------------------------------------------------------
   
   “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------